
விவசாயத்தைப் பொறுத்தவரை, சரியான டிராக்டரைத் தேர்ந்தெடுப்பது சரியான பயிரை தேர்ந்தெடுப்பது போலவே முக்கியமானது. விவசாயிகள் கேட்கும் பொதுவான கேள்விகளில் ஒன்று, அவர்கள் ஜான் டியர் 4WD டிராக்டரை வாங்க வேண்டுமா அல்லது ஜான் டியர் 2WD டிராக்டரை வாங்க வேண்டுமா என்பதுதான். இரண்டுக்கும் அதன் பலம் உள்ளன, மேலும் உங்கள் நிலம், பயிர்கள் மற்றும் விவசாயத் தேவைகளைப் பொறுத்துதான் சரியானதை தேர்வு செய்ய முடியும்.
ஜான் டியரில், இந்த முடிவு சவாலானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் 4WD மற்றும் 2WD டிராக்டர்களை ஒப்பிட்டுப் பார்த்து விவசாயத்திற்கு சிறந்த டிராக்டரைத் தேர்வுசெய்ய உதவும் வகையில் நாங்கள் இந்த எளிய வழிகாட்டியை உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
2WD டிராக்டர் என்பது என்ன?
ஜான் டியர் 5036D போன்ற 2WD (டூ வீல் டிரைவ்) டிராக்டர் பின்புற சக்கரங்களில் மட்டுமே சக்தியைப் பயன்படுத்துகிறது. இது எளிமையானது, செலவு குறைந்தது மற்றும் தட்டையான நிலம் மற்றும் லேசானது முதல் நடுத்தர மண் கொண்ட வயல்களுக்கு ஏற்றது.
ஜான் டியர் 2WD டிராக்டர்களின் முக்கிய நன்மைகள்:
- மலிவான முதலீடு: 4WD மாடல்களுடன் ஒப்பிடும்போது குறைந்த செலவு
- எரிபொருள் திறன்: இயக்கச் (ஆபரேடிங்) செலவுகளைச் சேமிக்க விரும்பும் விவசாயிகளுக்கு ஏற்றது
- பராமரிக்க எளிதானது: குறைவான இயந்திர பாகங்கள் இருப்பதால் சர்வீஸ் செய்ய எளிதானது
- வறண்ட நிலங்களுக்கு ஏற்றது: மண் இழுவை ஒரு பெரிய பிரச்சினை இல்லாத இடங்களில் சிறப்பாகச் செயல்படுகிறது
உதாரணமாக, ஜான் டியர் 5036D என்பது உழுதல் மற்றும் அறுவடை செய்தல் முதல் ஹாரோயிங் வரை பல விவசாயப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த 2WD டிராக்டர் ஆகும். இதன் எளிமையான வடிவமைப்பு, திறமையான செயல்திறன் மற்றும் நீடித்த ஆயுள் ஆகியவற்றால் இது விவசாயிகளுக்கு நம்பகமான தேர்வாக அமைகின்றன.
4WD டிராக்டர் என்பது என்ன?
ஜான் டியர் 5075E போன்ற 4WD (ஃபோர் வீல் டிரைவ்) டிராக்டர், நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை வழங்குகிறது. இது குறிப்பாக கடினமான வயல் வெளிகளில் சிறந்த கிரிப், பேலன்ஸ் மற்றும் கட்டுப்பாட்டை வழங்குகிறது.
ஜான் டியர் 4WD டிராக்டர்களின் முக்கிய நன்மைகள்:
- உயர்ந்த இழுவைத்திறன்: ஈரமான, மலைப்பாங்கான அல்லது சீரற்ற நிலப்பரப்புகளுக்கு ஏற்றது
- அதிக இழுக்கும் சக்தி: ஆழமான உழவு மற்றும் பெரிய விவசாயக்கருவிகள் போன்ற கனரக பணிகளைக் கையாளுகிறது
- சிறந்த நிலைத்தன்மை: அனைத்துப் பருவங்களிலும் வழுக்கும் தன்மையைக் (ஸ்லிப்பேஜ்) குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது
- பல்துறை பயன்பாடு: விவசாயம் மற்றும் வணிக பயன்பாடுகள் இரண்டிற்கும் ஏற்றது
ஜான் டியர் 5075E டிராக்டர் 4WD தொழில்நுட்பத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அதன் வலுவான என்ஜின், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் ஒப்பிடமுடியாத செயல்திறன் ஆகியவற்றுடன், பெரிய அளவிலான செயல்பாடுகளுக்கு கூடுதல் சக்தி மற்றும் செயல்திறன் தேவைப்படும் விவசாயிகளுக்காக இது உருவாக்கப்பட்டது.
4WD மற்றும் 2WD டிராக்டர்கள்
ஒரு விரைவான ஒப்பீடு
|
அம்சங்கள் |
ஜான் டியர் 2WD டிராக்டர் (5036D) |
ஜான் டியர் 4WD டிராக்டர் (5075E) |
|
சக்தி மற்றும் இழுவைத்திறன் |
மிதமானது, சாதாரண மண் நிலைகளுக்கு |
அதிகமானது, கடினமான நிலப்பரப்புகளுக்கு ஏற்றது |
|
எரிபொருள் திறன் |
மிகவும் சிக்கனமானது |
சற்று அதிகமான எரிபொருள் பயன்பாடு, ஆனால் சிறந்த செயல்திறன் |
|
விலை |
குறைவு |
அதிக முதலீடு, நீண்ட கால லாபம் |
|
பராமரிப்பு |
எளிதானது |
சற்று சிக்கலானது |
|
இதற்குச் சிறந்தது |
சிறிய மற்றும் நடுத்தர வயல்கள் |
நடுத்தரம் முதல் பெரிய வயல்கள், கனரக வேலைகள் |
நீங்கள் எந்த டிராக்டரை வாங்க வேண்டும்?
பதில் உங்கள் விவசாயத் தேவைகளைப் பொறுத்தது:
உங்களிடம் தட்டையான நிலம் இருந்தால், இலகுவான களப்பணி தேவைப்படும் பயிர்களை நீங்கள் வளர்க்க விரும்பினால், பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பத்தை விரும்பினால், ஜான் டியர் 5036D (2WD) ஒரு சிறந்த தேர்வாகும்
உங்கள் வயலில் ஈரமான அல்லது சீரற்ற மண் இருந்தால், நீங்கள் கனமான விவசாயக்கருவிகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அல்லது கடினமான நிலைகளுக்கு சிறந்த இழுவை சக்தியை நீங்கள் விரும்பினால், ஜான் டியர் 5075E (4WD) உங்களுக்கு சிறந்த முடிவுகளைத் தரும்.
ஜான் டியரை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
நம்பகமான 2WD டிராக்டர்களாக இருந்தாலும் சரி அல்லது சக்திவாய்ந்த 4WD டிராக்டர்களாக இருந்தாலும் சரி, ஜான் டியர் மேம்பட்ட தொழில்நுட்பம், நீடித்த வடிவமைப்பு மற்றும் ஒப்பிடமுடியாத சர்வீஸ் ஆதரவை வழங்குகிறது. விவசாயிகள் அதிக உற்பத்தித்திறன் மற்றும் லாபத்தை அடைய உதவும் வகையில் எங்கள் டிராக்டர்கள் இந்திய வயல்களுக்காக உருவாக்கப்பட்டவை.
எங்கள் முழு அளவிலான டிராக்டர்களை நீங்கள் இங்கே ஆராயலாம்: ஜான் டியர் டிராக்டர்கள்.
முடிவுரை
ஜான் டியர் 4WD டிராக்டர்கள் மற்றும் ஜான் டியர் 2WD டிராக்டர்கள் இரண்டும் வெவ்வேறு விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உங்கள் நிலம் மற்றும் வேலைத் தேவைகளைப் புரிந்துகொள்வது சரியான முடிவை எடுப்பதற்கான திறவுகோலாகும்.
நீங்கள் எதைத் தேர்வு செய்தாலும், இன்னும் பல ஆண்டுகளுக்கு செயல்திறன், பங்களிப்பு மற்றும் மதிப்பை வழங்கும் ஒரு டிராக்டரை ஜான் டியர் உங்களுக்கு வழங்கும் என்று நீங்கள் நம்பலாம்.