வகை - John Deere 3029H, 57 HP (42 kW), 2100 RPM, 3 சிலிண்டர்கள், டர்போ சார்ஜ்டு, HPCR எரிபொருள் இஞ்செக்ஷன் அமைப்பு ஓவர்ஃப்ளோ ரிசர்வயர் உடன் கூலண்ட் கூல் செய்யப்பட்டது
ஏர் ஃபில்டர் – டிரை வகை, டுயல் எலிமெண்ட்
CleanPro™:
1.மேம்படுத்தப்பட்ட குளிரூட்டும் திறன்:
காற்றோட்டத்தை திருப்பிவிடுவதன் மூலம் உகந்த இஞ்சின் ஆப்பரேட்டிங் வெப்பநிலையை பராமரிக்க, குறிப்பாக அதிகப்படியான குப்பை சேரும் அப்ளிகேஷன்கள் அல்லது அதிகம் வெப்பமடையும் சூழ்நிலையில் வேலைபார்க்கும்போது ரிவர்சிபிள் ஃபேன் உதவுகிறது, இது அதிக வெப்பத்தை திறம்பட தடுப்பதுடன், திறன்வாய்ந்த வகையில் குளிரூட்டலை உறுதி செய்கிறது.
2.குறைந்த வேலையில்லா நேரம்:
ரேடியேட்டர் ஸ்க்ரீன் மற்றும் முன்புற கிரில்லில் இருந்து குப்பைகளை அகற்றுவதன் மூலம், ரிவர்சிபிள் ஃபேன் கைமுறையாக சுத்தம் செய்வதற்கான தேவையை குறைக்கிறது மற்றும் குப்பைகள் அடைப்பதன் காரணமாக இயந்திரம் அதிக வெப்பமடைதல் அல்லது வேலையில்லா நேரத்தை குறைக்கிறது.
3.மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் திறன்:
அதிக வெப்பம் மற்றும் குப்பைகள் குவிவதால் ஏற்படும் குறுக்கீடுகளைத் தடுப்பதில் ரிவர்சிபிள் ஃபேன் சிஸ்டம் உதவுவதால், வாடிக்கையாளர்கள் அதிகரித்த செயல்பாட்டுத் திறன் மற்றும் உற்பத்தித்திறனை அனுபவிக்க முடியும்.
4.நீடித்த இஞ்சின் ஆயுள்:
உகந்த இயக்க வெப்பநிலையை பராமரிப்பதன் மூலமும், அதிக வெப்பமடைவதைத் தடுப்பதன் மூலமும், ரிவர்சிபிள் ஃபேன் நீடித்த இஞ்சின் ஆயுளுக்கு பங்களிப்பதுடன் இஞ்சின் காம்பொனன்ட்களில் தேய்மானத்தைக் குறைக்கிறது.
5.ரிவர்சிபிள் ஃபேன்:
ஹூட் ஸ்க்ரீன் மற்றும் ரேடியேட்டர் சுத்தம் செய்தல்.