ஜான் டியர் டிராக்டர் 5039, PowerPro சீரிஸின் முதல் டிராக்டர் ஆகும், இது டூயல் கிளட்ச் மற்றும் டூயல் PTO போன்ற அம்சங்களைக் கொண்டு வருகிறது. பேலர் போன்ற பயிர் மேலாண்மை உட்பட அனைத்து விவசாய பயன்பாடுகளுக்கும் மிகவும் பொருத்தமானது.
சிறப்பு அம்சங்கள்:
பவர் ஸ்டீயரிங் நீண்ட வேலை நேரங்களுக்கு உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது
எளிதாக ஆப்பரேட் செய்வதற்கும் அதிக வசதிக்கும் சைட் ஷிப்ட் கியர் லீவர்ஸ்
8F மற்றும் 4R காலர் ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் ஆபரேட்டர்கள் பயன்படுத்த எளிதாக இருக்கும்
ஜான் டியர் டிராக்டர் பிரைஸ் ரேஞ்ச்சை பற்றி மேலும் அறிய, உங்கள் அருகில் உள்ள டீலரை இப்போதே தொடர்பு கொள்ளவும்!
ஸ்ட்ரெய்ட் ஆக்சில் கொண்ட பிளானட்டரி கியர் தனிப்பட்ட கியர்கள் மற்றும் ஷாஃப்ட்களில் அழுத்தத்தைக் குறைக்க மூன்று பாயிண்ட்களுக்கு மேல் பின்புற ஆக்சில் சுமைகளை டிஸ்ட்ரிபியூட் செய்கிறது
குறைந்தபட்ச தேய்மானத்துடன் நீண்ட ஆக்சில் வாழ்க்கையை உறுதி செய்கிறது
நவீன விவசாயத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜான் டியர் 5039D PowerPro™ டிராக்டர், 2100 RPM இல் இயங்கும் 41 HP டிராக்டர் ஆகும். திறன்வாய்ந்த ஜான் டியர் 3029D எஞ்சின் மூலமாக இயக்கப்படும் இந்த 3-சிலிண்டர் டிராக்டர் பல்வேறு விவசாயப் பயன்பாடுகளில் உகந்த செயல்திறனை உறுதி செய்கிறது. டிரை டைப் டூயல்-எலிமெண்ட் ஏர் ஃபில்டர் சிறப்பாக வடிகட்டுவதன் மூலமாக எஞ்சினின் நீண்ட ஆயுளை மேம்படுத்துகிறது. ...
இந்த டிராக்டரில் 8 ஃபார்வர்டு மற்றும் 4 ரிவர்ஸ் கியர்களுடன் கூடிய காலர் ஷிப்ட் டிரான்ஸ்மிஷன் உள்ளது, இது ஃபார்வர்டில் 3.25 முதல் 35.51 km/h மற்றும் ரிவர்ஸில் 4.27 முதல் 15.45 km/h வேக வரம்பை வழங்குகிறது. இந்தப் பல்வகைப்பயன்பாட்டின் மூலம் உழுதல், டீல்லிங் அல்லது பொருட்களைக் கொண்டு செல்வது போன்ற பணிகளுக்கு ஆபரேட்டர்கள் பொருத்தமான வேகத்தைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. ஆபரேட்டர் வசதியை மேம்படுத்தவும், இயக்கத்தை எளிதாக்கவும் சைடு ஷிப்ட் கியர் லீவர்கள் பணிச்சூழலியல் ரீதியாக பொறுத்தப்பட்டுள்ளன.
டிராக்டரின் 1600 kgf உயர் தூக்கும் திறன், பல்வேறு வயல் நிலைமைகளில் உகந்த செயல்திறனை உறுதி செய்யும் வகையில் பல்வேறு வகையான விவசாயக் கருவிகளை திறம்பட கையாள உதவுகிறது. பவர் ஸ்டீயரிங் அமைப்பு நீண்ட வேலை நேரங்களில் ஆபரேட்டர் சோர்வைக் குறைத்து, செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது. கூடுதலாக, நேரான ஆக்சில் வடிவமைப்பைக் கொண்ட பிளானட்டரி கியர் பின்புற ஆக்சில் சுமைகளை மூன்று புள்ளிகளில் விநியோகிக்கிறது, இதனால் தனிப்பட்ட கியர்கள் மற்றும் ஷாஃப்டுகளில் அழுத்தம் குறைகிறது, இதன் மூலமாக ஆயுள் அதிகரிக்கிறது மற்றும் குறைந்தபட்ச பராமரிப்பே தேவைப்படுகிறது.
ஆயில்-இம்மர்ஸ்டு டிஸ்க் பிரேக்குகள் உயர்ந்த பிரேக்கிங் திறனை வழங்குகின்றன மற்றும் பிரேக் அமைப்பின் ஆயுளை நீட்டிக்கின்றன. இந்த டிராக்டர் டூயல்-கிளட்ச் மற்றும் டூயல் PTO ஐயும் வழங்குகிறது, இது பேலிங் போன்ற பயிர் மேலாண்மை பணிகள் உட்பட பல்வேறு விவசாயப் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
60 லிட்டர் ஃப்யூல் டேங்க் அடிக்கடி எரிபொருள் நிரப்ப வேண்டிய அவசியமில்லாமல் நீண்ட நேரம் செயல்பட அனுமதிக்கிறது. செயல்திறன் மற்றும் பல்துறைத்திறன் இரண்டையும் விரும்பும் விவசாயிகளுக்கு இந்த டிராக்டர் ஒரு சிறந்த தேர்வாகும்.
உற்பத்தியில் முன்னேற்றம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டவை.
காட்டப்பட்டுள்ள பாகங்கள் நிலையான உபகரணங்களின் பகுதியாக இல்லை. மேலும் விரிவான தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.மேலே உள்ள சில அம்சங்கள் விருப்பரீதியிலானவை. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து ஆன்லைன் சிற்றேட்டைப் பார்க்கவும் அல்லது உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.