ஜான் டியர் கூலண்ட்

ஜான் டியர் டிராக்டர் பாகங்கள், டிராக்டர் கூலன்ட், Right Profile

மேலும் உங்கள் கூலிங் சிஸ்டமுக்கான வருடம் முழுவதுமான பாதுகாப்பு இறுதியாக. உங்கள் இஞ்சினை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது மற்றும் இஞ்சின் ஆயுளை அதிகரிக்கிறது

ஜான் டியர் கூலண்ட் உங்கள் டிராக்டருக்கு எப்படி சிறந்ததாகிறது?

இஞ்சின் என்பது உங்கள் டிராக்டருக்கு இதயம் போன்றதாகும். இது முற்றிலும் இன்றியமையாதது, இது உங்கள் டிராக்டரின் நம்பகமான மற்றும் திறன்வாய்ந்த செயல்திறனுக்காக அதன் எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் முழுவதும் திறம்பட செயல்படுகிறது. எரிபொருளை எரிப்பதால் ஆற்றல் மற்றும் வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பம் இஞ்சின் மற்றும் அதன் காம்பொனன்ட்டுகளுக்கு மாற்றப்படுகிறது. இஞ்சினுக்குள் உகந்த வெப்பநிலையை பராமரிக்க ஒரு கூலிங் சிஸ்டம் அவசியம். இந்த கூலிங் சிஸ்டம் அதீத அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலையின் கீழ் திறமையாக செயல்பட வேண்டும்.

ஜான் டியர் உபகரணங்களில் மேம்பட்ட கூலிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது, இது இஞ்சினின் உகந்த செயல்திறன் மற்றும் பராமரிப்பு இல்லாத நீண்ட ஆயுளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கூலண்ட்டைப் பயன்படுத்துகிறது. ஜான்டியர் கூலன்ட் ஆனது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கூலன்ட் கண்டிஷனர், ஆண்டி-கரோஷன் அடிடிவ்ஸ் மற்றும் ஆண்டி-ஃபோமிங் ஏஜெண்டுகள் ஆகியவற்றின் சரியான கலவையாகும். ஒரு குறிப்பிட்ட சதவீத டி-மினரலைஸ்டு தண்ணீருடன் முன்கூட்டியே கலக்கப்படுகிற இது பயன்படுத்த தயாராக உள்ளது.

கூலண்ட்

எந்தவொரு இஞ்சினாக இருந்தாலும் அதன் நிலை மற்றும் செயல்திறனை பராமரிப்பதில் கூலண்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. இது இஞ்சினின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தி, அதிக வெப்பமாவதிலிருந்து தடுப்பதுடன், அதீத வெப்பம் மற்றும் குளிரினால் உட்புறமிருக்கும் காம்பொனன்ட்டுகள் துருபிடிப்பதிலிருந்தும், சேதமடைவதிலிருந்தும் பாதுகாக்கிறது. உயர்தர கூலண்ட் தேய்மானத்தைக் குறைக்கவும், பராமரிப்புத் தேவைகளைக் குறைக்கவும், இஞ்சினின் ஒட்டுமொத்த ஆயுளையும், செயல்திறனையும் மேம்படுத்தவும் உதவுகிறது. வேளாண் இயந்திரங்கள், உபகரணங்கள் அல்லது டிராக்டர்களில் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் போதும், சரியான கூலண்ட் பல்வேறு வேலை நிலைமைகளில் சீரான, தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்கிறது. உபகரணங்களின் பயன்பாட்டு நேரத்தை அதிகரிக்கவும், விலையுயர்ந்த பழுதுபார்ப்புகளைக் குறைக்கவும் நம்பகமான, நன்கு வடிவமைக்கப்பட்ட கூலண்டைத் தேர்ந்தெடுப்பது அவசியம். ...