நவீன மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, ஜான் டியர் டிராக்டர் 5036 போட்டி டிராக்டர் விலையில் ஒப்பிடமுடியாத செயல்திறனை வழங்குகிறது. பல நோக்கங்களுக்கும் பயனாக இருக்கும் இந்த வேளாண் டிராக்டர், அனைத்து வகையான வேளான் மற்றும் ஹாலேஜ் அப்ளிகேஷன்களுக்கு மிகவும் பொருத்தமானது.
சிறப்பு அம்சங்கள்:
பவர் ஸ்டீயரிங் நீண்ட வேலை நேரங்களுக்கு உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது
அதிக ஆயுள் மற்றும் குறைந்த பராமரிப்புக்கு காலர் ஷிப்ட் கியர் பாக்ஸ்
எளிதாக ஆப்பரேட் செய்வதற்கும் அதிக வசதிக்கும் சைட் ஷிப்ட் கியர் லீவர்ஸ்
ஜான் டியர் டிராக்டர் பிரைஸ் ரேஞ்ச்சை பற்றி மேலும் அறிய, உங்கள் அருகில் உள்ள டீலரை இப்போதே தொடர்பு கொள்ளவும்!
ஜான் டியர் 5036D, பல்வேறு வகையான வேளாண் மற்றும் போக்குவரத்து வேலைகளை திறம்பட கையாள வடிவமைக்கப்பட்ட 36 HP டிராக்டர் ஆகும். பல்வேறு பணிகளுக்கு இந்த டிராக்டரை சார்ந்து இருக்கக்கூடிய வகையில் 3-சிலிண்டர், 2100 RPM இல் இயங்கும் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட்எஞ்சின் உள்ளது. ...
இதன் ஹைட்ரோஸ்டேடிக் பவர் ஸ்டீயரிங், நீண்ட நேரம் பயன்படுத்த வசதியாக இருக்கும் வகையில் குறைந்தபட்ச முயற்சியுடன் எளிதாக கையாள முடிவதை உறுதி செய்கிறது. 8 ஃபார்வர்டு மற்றும் 4 ரிவர்ஸ் கியர்களுடன் வருகிற காலர் ஷிப்ட் கியர்பாக்ஸ், கியர் ஷிஃப்ட் செய்வதை எளிதாக்குவதுடன், பராமரிப்பு குறித்த கவலைகளையும் குறைக்கிறது.
ஆபரேட்டிங் ஸ்டேஷனில் இங்கிரஸ் மற்றும் எக்ரஸ் ஆகியவற்றை எளிதாக்கும் வகையில் ஆபரேட்டர் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக சைடு ஷிப்ட் கியர் லீவர்கள் பொறுத்தப்பட்டுள்ளன. டிராக்டரின் 1600 kgf தூக்கும் திறன், பல்வேறு வகையான வயல் நிலைமைகளில் உகந்த செயல்திறனை உறுதி செய்யும் வகையில் பலதரப்பட்ட விவசாயக் கருவிகளை திறம்பட கையாள உதவுகிறது.
மேலும், ஆயில்-இம்மர்ஸ்டு டிஸ்க் பிரேக்குகள் சிறந்த பிரேக்கிங் திறனை வழங்குவதுடன் நீடித்துழைக்கின்றது. ஏர் ரெஸ்ட்ரிக்ஷன் சென்சார் உடன் கூடிய டிரை டைப் ஏர் ஃபில்டர் எஞ்சினை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது, அதன் ஆயுளை அதிகரிக்கிறது. இந்த மேம்பட்ட அம்சங்களின் கலவையானது ஜான் டியர் 5036D டிராக்டரை நவீன விவசாயச் செயல்பாடுகளுக்கான ஒரு நம்பகமான தேர்வாக ஆக்குகிறது.
நிலையான அம்சங்கள்-
கியர் பாக்ஸில் டாப் ஷாஃப்ட் லூப்ரிகேஷன், பிஸ்டன் ஸ்ப்ரே கூலிங் ஜெட் & ஆயில் லூப்ரிகேஷன் ரியர் ஆக்ஸிலுடன் மெட்டல் ஃபேஸ் சீல் ஆகியவை அனைத்து 5D மாடல்களிலும் வழக்கமான அம்சங்களாக உள்ளன, இவை அனைத்தும் டிராக்டர்கள் எந்த பணியிலும் நீடித்த உழைப்பு மற்றும் குறைந்த பராமரிப்பை உறுதிசெய்கிறது.
உற்பத்தியில் முன்னேற்றம் என்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முன்னறிவிப்பின்றி மாற்றத்திற்கு உட்பட்டவை.
காட்டப்பட்டுள்ள பாகங்கள் நிலையான உபகரணங்களின் பகுதியாக இல்லை. மேலும் விரிவான தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.மேலே உள்ள சில அம்சங்கள் விருப்பரீதியிலானவை. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து ஆன்லைன் சிற்றேட்டைப் பார்க்கவும் அல்லது உங்கள் அருகிலுள்ள டீலரைத் தொடர்பு கொள்ளவும்.