
ஐஃபோன் பயனர்கள் ஏன் அனுபூதி ஆப்பை விரும்புவார்கள்
1. ஜான் டியர் தயாரிப்புகளை எளிதில் தெரிந்துகொள்ளலாம்:
பல்வேறு வகையான டிராக்டர்கள், கருவிகள், உண்மையான பாகங்கள் மற்றும் பலவற்றை பிரவுஸ் செய்து பார்க்கலாம். மாடல்கள், ஹார்ஸ்பவர் மற்றும் அம்சங்களை - எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
2. உங்கள் அருகிலுள்ள டீலரை உடனடியாகக் கண்டறியவும்:
உங்கள் வயலுக்கு மிக அருகில் உள்ள ஜான் டியர் விற்பனை நிலையங்களைக் கண்டறிய உள்ளமைக்கப்பட்ட டீலர் லொக்கேட்டரைப் பயன்படுத்தவும். நிபுணர் வழிகாட்டுதல் முதல் வயல்களில் ஆதரவு வரை, அனைத்தையும் சில நொடிகளில் அனுகலாம்.
3. அசல் டிராக்டர் பாகங்களை ஆர்டர் செய்யவும்:
அனுபூதி ஆப் உங்கள் டிராக்டர் பாகங்களுக்கான கடையாகவும் செயல்படுகிறது, இங்கு நீங்கள் அசல் ஜான் டியர் ஸ்பேர்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். வீட்டு டெலிவரி அல்லது டீலர்ஷிப் பிக்-அப் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கவும் - எல்லாம் உங்கள் ஐஃபோனின் வழியாகவே.
4. ஒரு நொடியில் சர்வீஸ் புக் செய்யவும்:
டிராக்டர் சர்வீசிங் அல்லது பழுதுபார்ப்புகளை ஆப் மூலம் திட்டமிடுங்கள். விருப்பமான டைம் ஸ்லாட்டுகளைத் தேர்வுசெய்து, பயிற்சி பெற்ற மெக்கானிக்ஸ் மற்றும் அசல் பாகங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்து, நேரத்தையும் செலவையும் மிச்சப்படுத்துங்கள்.
தடையற்ற அனுபவத்திற்கு சீரான, நவீன UI
அனுபூதி iOS ஆப் ஆப்பிள் பயனர்களின் தேவைகளை முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது, இது உள்ளமைந்த வடிவமைப்பு, வேகமான அணுகல் மற்றும் iOS UX தரத்துடன் பொருந்தக்கூடிய திகைப்பூட்டும் விஷுவல் அனுபவத்தை வழங்குகிறது. கப்புத் திரையில் இருந்து தயாரிப்பு பக்கங்கள் வரை, ஒவ்வொரு விவரமும் பயன்பாட்டின் எளிமையையும் பிரீமியம் பிரவுசிங் அனுபவத்தையும் உறுதி செய்கிறது.
எளிய படிமுறைகளில் iOS-இல் அனுபூதி ஆப்பைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி
படிமுறை 1: ஆப்பைப் பதிவிறக்கவும்
- உங்கள் ஐஃபோனில் App Store ஐ திறக்கவும்
- “அனுபூதி ஆப் – ஜான் டியர்” என்பதைத் தேடவும்s
- டவுன்லோடு என்பதைத் தட்டி, ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்
ஆப்பை நேரடியாக டவுன்லோட் செய்வதற்குக் கீழே உள்ள QR கோடை நீங்கள் ஸ்கேன் செய்யலாம்.
படிமுறை 2: சைன் அப் / லாக் இன்
- ஆப்பை திறக்கவும்
- உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்
- OTP கொண்டு வெரிஃபை செய்து, உங்கள் ப்ரொஃபைலை உருவாக்கவும்
- நீங்கள் ஜான் டியர் வாடிக்கையாளராக இருந்தால், தனிப்பயனாக்கபட்ட அம்சங்களுக்கு உங்கள் டிராக்டரின் சேஸிஸ் எண்ணை பதிவு செய்யவும்
படிமுறை 3: டாஷ்போர்டை ஆராயவும்
- ஜான் டியர் டிராக்டர்கள், இம்ப்ளிமெண்ட்டுகள் மற்றும் அசல் பாகங்களை பிரவுஸ் செய்து பார்க்கவும்
- தயாரிப்பு குறித்த விவரங்களைப் பார்த்து, மாடல்களை ஒப்பிட்டு, விலையை தெரிந்துகொள்ளவும்
அனுபூதி ஆப் வெறும் டூல் மட்டுமல்ல, இது உங்கள் டிஜிட்டல் வேளாண் உதவியாளர். இப்போது ஐஃபோன் தலைமுறைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இது, உங்கள் விரல்நுணியில் அதிகபட்ச சௌகரியத்தைக் கொண்டுவருகிறது. எனவே, உங்கள் வீட்டில் வசதியாக இருந்துகொண்டே உங்கள் டிராக்டரின் செயல்திறனை அதிகரிக்க ஆப்பை டவுன்லோட் செய்ய மறக்காதீர்கள்!