ஜான் டியர் டிராக்டர்கள் இந்திய விவசாயத்தின் முகவரத்தை எவ்வாறு மாற்றுகின்றது

Changing the face of agriculture

சக்தி மற்றும் செயல்திறன்: விவசாயிகளைப் போலவே கடினமாக உழைக்கும் டிராக்டர்கள்

ஒரு டிராக்டர் வெறும் இயந்திரம் மட்டுமல்ல; அது ஒரு விவசாயியின் நம்பிக்கையான கூட்டாளி. ஜான் டியர் டிராக்டர்கள் அடிப்படை ஏர் உழுதலில் இருந்து கனரக வணிக விவசாயம் வரை அனைத்தையும் சமாளிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • விரிவான HP வரம்பு: 35 HP முதல் 130 HP வரை, சிறிய பண்ணைகளில் இருந்து பெருமளவிலான விவசாயச் செயல்பாடுகளுக்கு ஏற்ற டிராக்டர்களை ஜான் டியர் வழங்குகிறது.
  • எரிபொருள் திறன்: ஜான் டியர் டிராக்டர்கள் செயல்பாட்டு செலவுகளை குறைக்க உதவும் வகையில் உகந்த எரிபொருள் பயன்பாட்டிற்கு பெயர் பெற்றவை.
  • நீடித்து உழைக்கும் தன்மை: வலுவான கட்டமைப்பு மற்றும் சக்திவாய்ந்த என்ஜின்கள் கொண்ட இந்த டிராக்டர்கள், கடினமான வயல்வெளி நிலைமைகளில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவு? குறைந்த எரிபொருள் செலவில் குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்து, விவசாயிகள் செலவுகளை அதிகரிக்காமல் அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது.

சிறந்த விவசாயத்திற்கான மேம்பட்ட தொழில்நுட்பம்

இன்றைய விவசாயம் வெறும் நிலத்தை உழுவது மட்டுமல்ல; அது துல்லியத்தையும் செயல்திறனையும் பற்றியது. விவசாயிகளின் வேலைகளை எளிதாகவும் அதிக லாபகரமாகவும் மாற்றும் வகையில் ஜான் டியர் மேம்பட்ட தொழில்நுட்பத்தை இந்திய விவசாயிகளுக்கு கொண்டு வருகிறது.

JDLink™: உங்கள் டிராக்டருடன் எப்போதும் இணைப்பில் இருங்கள்

இப்போது ஒரு மொபைல் ஆப் மூலம் விவசாயிகள் தங்கள் டிராக்டரின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்க முடியும். JDLink™ மூலம் அவர்கள் எரிபொருள் பயன்பாட்டைப் கண்காணிக்க முடியும், பராமரிப்பு கால அட்டவணை நிர்ணயிக்க முடியும், மேலும் சாத்தியமான சிக்கல்கள் குறித்து அறிவிப்புகளை பெற முடியும். இதன் மூலம் குறைந்த நிறுத்த நேரம் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட விவசாய செயல்பாடுகள் கிடைக்கிறது.

AutoTrac™ வழிகாட்டுதல் அமைப்பு: துல்லிய விவசாயம், எளிய முறையில்

கையால் உழுவது பெரும்பாலும்ஓவர்லாப்பிங் பாஸ்களுக்கு வழிவகுக்குகிறது, இதனால் எரிபொருள், நேரம் மற்றும் விதைகள் வீணாகிறது. AutoTrac™, என்ற தானியங்கும் GPS வழிகாட்டி அமைப்பு, டிராக்டர்கள் முழுமையாக நேர் கோட்டில் நகர்வதை உறுதி செய்து, ஓவர்லேப்பிங்கைக் குறைக்கவும் செயல்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

வெறும் டிராக்டர்கள் மட்டுமல்ல: ஒரு முழுமையான விவசாயச் சூழலமைப்பு

ஒரு டிராக்டர் மட்டும் போதாது. ஜான் டியர் இதை நன்றாக புரிந்துகொண்டு, தனது டிராக்டர்களை முழுமைப்படுத்த சிறந்த விவசாய உபகரணங்கள் மற்றும் விவசாயக் கருவிகளை வழங்குகிறது.

  • நுண்ணிய விதைப்படுகை தயாரிப்புக்கான ரோட்டாவேட்டார்கள்
  • துல்லியமான நடுதலுக்கான விதை துளையிடும் கருவிகள்
  • பயிர் விளைச்சலை அதிகரிக்கும் அறுவடை இயந்திரங்கள்
  • திறனுடன் வைக்கோல் சேமிப்பதற்கான பேலர்கள்

விவசாயம் அதிக இலாபகரமாகவும் நீடித்த வளர்ச்சியுடன் நிலையானதாகவும் அமையும் வகையில் ஒவ்வொரு கருவியும் நேரத்தை மிச்சப்படுத்தவும், உழைப்பைக் குறைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயந்திரங்களையும் தாண்டி விவசாயிகளுக்கு ஆதரவு

ஜான் டியர், டிராக்டர்களை விற்பனை செய்வதற்கு மட்டுமல்லாது விவசாயிகள் வெற்றிபெற உதவுவதில் முனைப்போடு இருக்கிறது.

நிலைத்தன்மை மற்றும் சமூகத் தாக்கம்

ஜான் டியர் சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலைத்தன்மையான தீர்வுகளில் கவனம் செலுத்துவதுடன், எதிர்கால சந்ததியினருக்காக நிலைத்தன்மையான விவசாயத்தை உறுதி செய்கிறது. எரிபொருள் திறனைக் கூட்டி, மண்ணின் உறிதன்மையை குறைப்பதன் மூலம், ஜான் டியர் உபகரணங்கள் மண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

பயிற்சி மற்றும் ஆதரவு

விவசாயிகள் வெறும் டிராக்டரை மட்டும் பெருவதில்லை; அவர்கள் பயிற்சி திட்டங்கள், நிபுணர் ஆலோசனை மற்றும் அவர்களின் இயந்திரங்கள் சீராக இயங்குவதற்கான வலுவான டீலர் நெட்வொர்க்கைப் பெறுகிறார்கள்.

அதிகமான இந்திய விவசாயிகள் ஜான் டியரை ஏன் தேர்வு செய்கிறார்கள்

பல விருப்பத் தெரிவுகள் கொண்ட சந்தையில், ஜான் டியர் எதனால் இந்திய விவசாயிகளின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது?

  • இந்திய நிலைமைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட, சக்திவாய்ந்த மற்றும் நம்பகமான டிராக்டர்கள்
  • செயல்திறன் மற்றும் மகசூலை அதிகரிக்கவும் மேம்படுத்தவும் மேம்பட்ட தொழில்நுட்பம்
  • இயக்கச் செலவுகளை குறைக்கும் எரிபொருள் திறன் கொண்ட என்ஜின்கள்
  • ஒவ்வொரு விவசாயத் தேவைக்கும் பொருத்தமான முழுமையான டிராக்டர் விவசாயக் கருவிகள்
  • விரிவான டீலர் நெட்வொர்க்குடன் வலுவான விற்பனைக்குப் பிந்தைய சர்வீஸ்

ஜான் டியர் வெறும் டிராக்டர்களை மட்டும் விற்பனை செய்யவில்லை; இந்திய விவசாயத்தை மாற்ற, அவர்கள் விவசாயிகளின் பார்ட்னர்களாக இருந்து வருகிறார்கள்.

இந்திய விவசாயத்திற்கான ஒளிமயமான எதிர்காலம்

ஜான் டியரின் புதுமை, செயல்திறன் மற்றும் விவசாயிகள் வெற்றிக்கான உறுதிப்பாட்டுடன், இந்திய விவசாயம் மேலும் உற்பத்திவாய்ந்த மற்றும் லாபகரமான எதிர்காலத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. குறைந்த செலவில் டிராக்டர் தேடும் சிறுபண்ணை விவசாயியோ, அல்லது துல்லிய தொழில்நுட்பம் தேவைப்படும் வணிகப் பண்ணையாளரோ, விவசாயிகள் குறைந்த உழைப்பில் அதிக மகசூல் பெற, ஜான் டியர் சரியான தீர்வுகளை வழங்குகிறது.