
1. தினமும் காலையில் விரைவாகப் இதை செய்திடுங்கள்
பின்வரும் விஷயங்களை காலையில் முதல் வேலையாக உங்கள் டிராக்டரில் சோதனை செய்திடுங்கள்! இஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாக, வாகனத்தை சுற்றிப் பார்த்து சில விஷயங்களை கவனித்திடுங்கள்.
- எண்ணெய் அல்லது எரிபொருள் கசிவுகள் ஏதேனும் உள்ளதா? அவற்றை சீக்கிரம் சரிசெய்யவும்.
- உங்கள் டயர்களில் காற்று சரியாக உள்ளதா? எரிபொருள் அதிகம் நுகரப்படுவது மற்றும் தேய்மானத்தை தவிர்க்கலாம்.
- ஏதேனும் லூசான வயர்கள் அல்லது பாகங்கள் உள்ளதா? உடனே அவற்றை டைட் செய்யவும், ஒருபோதும் தள்ளி போடாதீர்கள்.
- ரேடியேட்டர் அல்லது ஏர் வெண்ட்டுகளில் தூசி இருக்கிறதா? அதை துடைக்கவும்.
- லைட்டுகள், ஹாரன் மற்றும் இண்டிகேட்டர்கள் வேலை செய்கிறதா? சாலைகளில் நீங்கள் எடுத்துச் செல்வதற்கு முன்பாக எப்போதும் சோதனை செய்யவும்.
இதை செய்வதற்கு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும், இதை செய்து பழுதடைவதால் ஏற்படும் பல மணிநேரம் விரயமாவதைத் தவிர்க்கலாம்.
2. இஞ்சினை நல்லநிலையில் பராமரிக்கவும்
இஞ்சின் என்பது உங்கள் டிராக்டரின் இதயம் போன்றது. சிறிது கவனம் செலுத்தினாலே அதன் ஆயுள் அதிகரிப்பதுடன், எரிபொருள் சேமிப்பும் பெரிதளவில் அதிகரிக்கும்.
- இஞ்சின் ஆயில் மாற்றவேண்டிய நேரத்தில் அதன் அட்டவணைப்படி மாற்றிவிடவும், நீட்டிக்க வேண்டாம்.
- ஏர் ஃபில்டரை அவ்வப்போது சோதனை செய்திடுங்கள், குறிப்பாக நீங்கள் தூசி நிறைந்த வயல்களில் வேலை செய்கிறீர்கள் என்றால் அடிக்கடி சோதனை செய்யவும்.
- கூலண்ட் குறைவாக இருந்தால் டாப் அப் செய்திடுங்கள்
- இஞ்சின் சத்தம் சற்று வித்தியாசமாக இருக்கிறதா? காத்திருக்க வேண்டாம், உடனே சோதனை செய்யவும்.
இஞ்சின் பராமரிப்பு என்பது நம் உடல்நலப் பரிசோதனை போல தான். ஏதாவது சரியில்லை என்றால் உடனே கவனிக்கிறோம், இல்லையா?
3. டிரான்ஸ்மிஷனுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கவேண்டாம்
அதிக சுமைகளை இழுக்கும்போது அல்லது இம்ப்ளிமெண்ட்டுகளைப் கடினமான பணிகளில் அதிக அழுத்தத்தை ஏற்கிறது. அவற்றையும் கவனியுங்கள்:
- டிரான்ஸ்மிஷன் ஆயிலை தவறாமல் செக் செய்யவும்.
- கிளட்சை அழுத்திக் கொண்டே ஓட்ட வேண்டாம், அதை முழுமையாக அழுத்தவும் அல்லது அழுத்தவே வேண்டாம்.
- கியர் ஷிஃப்ட் செய்ய கடினமாக இருந்தாலோ அல்லது சத்தம் கேட்டாலோ, உடனே சர்வீஸ் செய்யவும்.
சீராக கியர் மாற்றுவது = சீராக சவாரி செய்யமுடியும் = நல்ல நிலையில் இருக்கும் டிராக்டர்.
4. ஹைட்ராலிக்ஸ் & PTO: அமைதியாக வேலை செய்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்
உங்கள் ஹைட்ராலிக் சிஸ்டம் மற்றும் PTO அதிக கவனத்தை ஈர்க்காமல் இருக்கலாம், ஆனால் அவை மிகவும் கடினமான சில வேலைகளைச் செய்கின்றன.
- எண்ணெய் கசிவுகள் அல்லது குழாயில் விரிசல் இருக்கிறதா என சோதனை செய்யவும்.
- உங்கள் இம்ப்ளிமெண்ட்டுகள் எவ்வளவு வேகமாக எதிர்செயலாற்றுகிறது என்பதைக் கவனியுங்கள், அவை மந்தமாக இருந்தால், நீங்கள் புதிய ஆயில் அல்லது பில்டர்களை மாற்றவேண்டியிருக்கும்.
- நீண்ட கால சேதத்தைத் தவிர்க்க எப்போதும் ஜான் டியர் அங்கீகரிக்கின்ற ஹைட்ராலிக் ஆயில்களையே பயன்படுத்துங்கள்.
உதவிக்குறிப்பு: சிறு ஆயில் துளிகளைக் கூட புறக்கணிக்காதீர்கள், அவை பெரும்பாலும் பெரிய பிரச்சினை வருவதற்கான முன் அறிகுறிகளாகும்.
5. சுத்தமான டிராக்டர் என்பது நல்ல நிலையில் இருக்கும் டிராக்டர்
உண்மையைச் சொல்லப்போனால், எல்லாம் சுத்தமாக இருக்கும்போது நாம் புத்துணர்வுடன் இருப்போம். உங்க டிராக்டரும் அப்படித்தான்.
- ரேடியேட்டர் கிரில்லில் இருந்து சேறு மற்றும் பயிர் துண்டுகளை அகற்றவும்.
- இருக்கைக்கு அடியிலும் பேட்டரிக்கு அருகிலும் சுத்தம் செய்யவும்.
- குறிப்பாக அதிகாலை அல்லது இரவு நேர வயல் வேலைகளின் போது லைட்கள், மிரர்கள் மற்றும் ரிப்ளக்டர்களை கறைபடாமல் வைத்திருங்கள்.
போட்டோவுக்கும் அழகாக தெரியும் இல்லையா. ஏனென்றால் சுத்தமான ஜான் டியர் டிராக்டர் பார்க்கவும் அருமையாக இருக்கும், இல்லையா.
6. சர்வீஸ் அட்டவணையைப் பின்பற்றுங்கள்
வாழ்க்கை பரபரப்பாக உள்ளது என நமக்குப் புரிகிறது. ஆனால் சர்வீஸைத் தவிர்ப்பது என்பது ஒரு வேளை உணவைத் தவிர்ப்பது போன்றது: அது உங்களுக்கு பின்னாளில் தொந்தரவாகலாம்.
- ஜான் டியரின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் அட்டவணை இந்திய நிலைமைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, அதை கடைபிடிக்கவும்.
- சிறந்த செயல்திறன் மற்றும் உத்தரவாதப் பாதுகாப்பிற்காக உண்மையான ஜான் டியரின் பாகங்கள் மற்றும் சர்வீஸைப் பயன்படுத்தவும்.
- இஞ்சின் இயங்கும் நேரங்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், மேலும் முக்கிய சர்வீஸ்களை (250, 500, 1000 மணிநேரம்) தாமதப்படுத்த வேண்டாம்.
சர்வீஸ் நினைவூட்டல்களைப் பெற JDLink™ போன்ற டூல்களைக் கூட நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் டிராக்டருக்கு நீங்கள் செய்யும் சிறிய பராமரிப்பே, அது உங்களுக்கு செய்யும் பெரிய சேவை.
7. அசலான பாகங்களைப் பயன்படுத்துங்கள்
உங்கள் டேங்கில் தரம் குறைவான எரிபொருளை ஊற்ற மாட்டீர்கள், அப்படித்தானே. அதுபோலத்தான் போலி பாகங்களைப் பயன்படுத்திஏன் ஆபத்தை ஏற்படுத்த வேண்டும்?
- ஜான் டியரின் அசல் பாகங்களை மட்டும் வாங்கவும், அவை உங்கள் மாடலுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகின்றன.
- சில அடிப்படை உதிரிபாகங்களை கையில் வைத்திருங்கள்: பில்டர்கள், ஸ்பார்க் பிளக்குகள், பேன் பெல்ட்கள்.
- பராமரிப்பு கருவிகளைப் பற்றி உங்கள் டீலரிடம் கேளுங்கள், அவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மலிவான பாகங்கள் இன்று உங்களை பணத்தை மிச்சப்படுத்தக்கூடும். ஆனால் நாளை அவை உங்களுக்கு அதிக செலவை இழுத்துவிடலாம்.
8. பேட்டரி மற்றும் வயரிங்கை சோதனை செய்யவும்
டிராக்டர் ஸ்டார்ட் ஆகாமல் போகும் வரை, பேட்டரிகளைப் பற்றி பெரும்பாலும் நாம் மறந்துவிடுகிறோம்.
- டெர்மினல்களை சுத்தம் செய்யுங்கள் (துரு உங்கள் நண்பன் அல்ல).
- தண்ணீர் மட்டத்தை சரிபார்க்கவும் (உங்கள் பேட்டரி சீல் செய்யப்படாமல் இருந்தால்).
- லைட்டுகள் விட்டுவிட்டு ஆன் ஆகிறது என்றால் அல்லது ஆன் ஆகவே இல்லை என்றால், எலக்ட்ரிகல்ஸை சோதனை செய்யவும்.
மேலும் முடிந்தவரை எப்போதும் நிழலில் நிறுத்துங்கள், இது பேட்டரி மற்றும் வயரிங்கை கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்கிறது.
9. சீசன் இல்லாத நேரத்தில் டிராக்டரை முறையாக பார்க் செய்யவும்
வயல்களில் வேலை முடிந்த பிறகு, டிராக்டரை அப்படியே பார்க் செய்துவிட்டு சென்றுவிடாதீர்கள்.
- உள்ளேயும் வெளியேயும் நன்றாக சுத்தம் செய்யுங்கள்.
- மூடி வைக்கவும் அல்லது ஷெட்டில் நிறுத்தவும்.
- சிறிது காலமாக பயன்படுத்தாமல் இருந்தால் பேட்டரியை டிஸ்கனெக்ட் செய்யவும்
- வாகனம் பல வாரங்களாக பயன்படுத்தப்படாமல் நின்றுகொண்டே இருந்தால், அதன் ஃப்யூயலை ட்ரீட் செய்யவும்.
இப்படிச் செய்வதால், சீசன் மீண்டும் தொடங்கும் போது, உங்கள் டிராக்டரும் உங்களைப் போலவே தயாராக இருக்கும்.
நாளின் முடிவில், நீங்கள் சீட்டில் ஏறும் ஒவ்வொரு முறையும் உங்கள் ஜான் டியர் டிராக்டர் முழு சக்தியுடன் உங்களுக்காக வேலை செய்கிறது. வழக்கமான பராமரிப்பு என்பது வாகனங்களுக்கு சிறப்பானது என்றில்லை, உங்கள் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் வாகனத்துக்கு நீங்கள் காட்டும் மரியாதை.
எனவே நேரம் ஒதுக்குங்கள். சோதனை செய்யுங்கள். அதை சுத்தமாக வைத்திருங்கள். சந்தேகம் இருந்தால், உங்கள் அருகிலுள்ள ஜான் டியர் இந்தியா டீலரிடமிருந்து உதவி பெறுங்கள். நீங்கள் பணத்தை மிச்சப்படுத்துவீர்கள், நேரத்தை மிச்சப்படுத்துவீர்கள், மிக முக்கியமாக, அவசியமான நேரத்தில் மன அழுத்தமில்லாமல் இருப்பீர்கள்.