
விவசாயிகள் மேம்பட்ட செயல்திறனையும், உற்பத்தித்திறனையும் அடைய உதவும் வகையில் அவர்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இம்ப்ளிமெண்ட் நிதி உதவி தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம். மிகவும் பொருத்தமான நிதியுதவி ஆப்ஷன்களை ஜான் டியர் ஃபினான்ஷியல் வடிவமைப்பதற்கு உங்கள் வருமான ஆதாரங்கள், நிதிசார்ந்த நிலைத்தன்மை மற்றும் உங்கள் வயலின் வேளாண் உற்பத்தி ஆகியவற்றைக் கருத்தில் கொள்கிறது.
எங்கள் இம்ப்ளிமெண்ட் கடன்கள், வேளாண் செயல்பாடுகளுக்கு மிக முக்கியமான அட்டாச்மெண்ட்டுகள் மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்ய உதவுகின்றன. தகுதியான இம்ப்ளிமெண்ட்டுகள் மற்றும் அட்டாச்மெண்ட்டுகளின் மதிப்பில் 50%–60% வரை நீங்கள் நிதியுதவியைப் பெறலாம் – இதன்மூலம் குறைந்தபட்ச முன்பண செலவுகளையும், அதிகபட்ச வருவாயையும் உறுதி செய்கிறது.
விவசாயம் என்பது பருவத்தைப் பொறுத்தது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால் தான் 5 ஆண்டுகள் வரையிலான கடன் கால அவகாசத்துடன் நெகிழ்வான இம்ப்ளிமெண்ட் நிதி உதவி ஆப்ஷன்களை நாங்கள் வழங்குகிறோம், இதனால் திருப்பிச் செலுத்துவதும் மலிவாக இருப்பதுடன் உங்கள் வியாபார சுழற்சிகளுக்கு ஏற்றவாறு அமைகிறது.
விவசாயத்திற்கு தனித்துவமான பணப்புழக்க சுழற்சி முறைகள் உள்ளன; அதற்கேற்ப நாங்கள் நிதித் தீர்வுகளை வடிவமைக்கிறோம். ஜான் டியர் ஃபினான்ஷியல், உங்கள் பயிரிடும் சுழற்சி மற்றும் வருவாய் அமைப்பை அடிப்படையாகக் கொண்டு மாதாந்திர, காலாண்டு மற்றும் அரை-ஆண்டு திருப்பிச் செலுத்தும் ஆப்ஷன்களை வழங்குகிறது.
இந்த அணுகுமுறை உங்கள் விவசாய செயல்பாடுகளின் வளர்ச்சியை ஆரோக்கியமாக ஊக்குவிக்கும் அதே வேளையில், நிதி ரீதியான சிக்கல்களை குறைக்கிறது. உங்கள் விவசாயத்தில் வெற்றியைத் தரும் கருவிகளில் நம்பிக்கையுடன் முதலீடு செய்ய உதவுவதே எங்கள் குறிக்கோள்.
கட்டணமில்லா எண்- 18002091034
ஈமெயில் அஸ்
இம்ப்ளிமெண்ட் நிதி உதவி என்பது வேளாண் இம்ப்ளிமெண்ட்டுகளையும் அட்டாச்மெண்ட்டுகளையும் குறிப்பாக விவசாயிகள் வாங்குவதற்கு உதவும் வகையில் வழங்கப்படும் கடன் ஆகும்.
வருமானம் மற்றும் நில உடைமைச் சான்றுகளின் அடிப்படையில் தனிநபர் விவசாயிகள், விவசாய தொழில்முனைவோர் மற்றும் வணிக பண்ணை உரிமையாளர்கள் ஆகியோர் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
தகுதி மற்றும் இம்ப்ளிமெண்ட் வகையைப் பொறுத்து, இம்ப்ளிமெண்ட் விலையில் 50%–60% வரை நிதியுதவி பெறலாம்.
பருவகால வருமானத்தின் அடிப்படையில் திருப்பிச் செலுத்தும் திட்டங்களைத் திட்டமிட விவசாயிகளுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்கும் வகையில், நாங்கள் 5 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலத்தை வழங்குகிறோம்.
ஆம். உங்கள் பண்ணையின் பணப்புழக்க சுழற்சியின்படி மாதாந்திர, காலாண்டு அல்லது அரை ஆண்டு EMI-களில் இருந்து தேர்வு செய்யவும்.
ஆம். நிதி உதவிக்கு இம்ப்ளிமெண்ட் தகுதியுடையதாக இருந்தால், இம்ப்ளிமெண்ட் நிதி உதவி தனிப்பட்ட முறையில் கிடைக்கும்.
ஆம், கடன் தகுதியை தீர்மானிக்க நிலையான வருமானம் அல்லது பண்ணை வருவாய் வரலாறு தேவைப்படலாம்.
ரோட்டவேட்டர்கள், ப்ளவுகள், பிளாண்டர்கள், ஹார்வெஸ்டர்கள் மற்றும் பிற இணக்கமான ஜான் டியர் அட்டாச்மெண்ட்டுகள் போன்ற இம்ப்ளிமெண்ட்டுகள் பொதுவாக தகுதியானவை.
ஆம், முன்கூட்டியே பணம் செலுத்த அனுமதிக்கப்படுகிறது. பொருந்தக்கூடிய விதிமுறைகள் அல்லது கட்டணங்களுக்கு உங்கள் ஜான் டியர் டீலரைத் தொடர்பு கொள்ளவும்.
தாமதமான EMI-களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். உங்களுக்கு தவணை செலுத்த சிரமம் ஏற்பட்டால், விரைவாக எங்களைத் தொடர்பு கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம், இப்படிச் செய்வதனால் கட்டணங்களைச் செலுத்த மீண்டும் திட்டமிட நாங்கள் உதவ முடியும்.
உங்கள் அருகிலுள்ள ஜான் டியர் டீலர்ஷிப்பைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது "ஈமெயில் அஸ்" லிங்க் வழியாக ஆன்லைனில் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலமோ நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்கு அடிப்படை KYC ஆவணங்கள், வருமானச் சான்று, நில உரிமைச் சான்று மற்றும் இம்ப்ளிமெண்ட்டுக்கான மதிப்பிடப்பட்ட விலைப்புள்ளி (கொடேஷன்) தேவைப்படும்.
சில சந்தர்ப்பங்களில், கடனுடன் இம்ப்ளிமெண்ட் காப்பீடு சேர்க்கப்படலாம். தயவு செய்து உங்கள் டீலரிடம் உறுதிப்படுத்தவும்.
இம்ப்ளிமெண்ட் நிதி உதவி என்பது கடனை கட்டி முடித்த பிறகு இம்ப்ளிமெண்ட்டை சொந்தமாக்கிக்கொள்ளலாம், அதே சமயம் குத்தகை எடுப்பது உரிமையை வழங்காது.
நீங்கள் 18002091034 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம் அல்லது ஆதரவுக்காக வலைத்தளத்தில் உள்ள ஈமெயில் அஸ் ஆப்ஷனைப் பயன்படுத்தலாம்.