பயன்படுத்திய உபகரணங்களுக்கான நிதியுதவி

பயன்படுத்திய உபகரணங்களுக்கான நிதியுதவி

விவசாயிகளுக்கான தனிப்பயனாக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட உபகரணத்திற்கான நிதி உதவி தீர்வுகள்

நாங்கள் வெறும் தயாரிப்புகளை மட்டும் விற்பனை செய்யவில்லை. ஜான் டியர் ஃபினான்ஷியலில், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட உபகரண நிதியுதவி தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம். இன்னொருவருக்கு சொந்தமான டிராக்டர்கள் அல்லது பிற வேளாண் உபகரணங்களை வாங்குவதாக இருந்தாலும் சரி, உங்கள் செயல்பாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் எங்கள் நிதி உதவி ஆப்ஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. உங்கள் வருமான ஆதாரங்கள், கடன் தகுதி மற்றும் உங்கள் பண்ணையின் உற்பத்தி மதிப்பு ஆகியவற்றை நாங்கள் கருத்தில் கொண்டு — உபகரணத்தின் மதிப்பில் 90% வரை நிதியளிக்கிறோம்.

இம்ப்ளிமெண்ட் லோன் லோன் EMI

பயன்படுத்தப்பட்ட உபகரணத்திற்கான நிதி உதவியில் நெகிழ்வாக கடன் கால அளவுகள்

எங்கள் பயன்படுத்தப்பட்ட எக்யூப்மெண்ட் நிதி உதவி திட்டங்கள் 5 ஆண்டுகள் வரை நெகிழ்வான கடன் கால அவகாசத்துடன் வருவதால், வாங்கும் திறனை எளிதாகக் கையாள்வதற்கு உங்களுக்கு உதவுகிறது. இந்த நெகிழ்வானது நீண்டகால பண்ணைத் திட்டமிடலுக்கு உதவுகிறது மற்றும் நம்பகமான பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை வாங்குவதை மேலும் எளிதாக்குகிறது.

பயன்படுத்தப்பட்ட உபகரணத்திற்கான நிதி உதவிக்கென வடிவமைக்கப்பட்ட திருப்பிச்செலுத்தும் ஆப்ஷன்கள்

ஒவ்வொரு பயிர் சுழற்சிக்கும் ஏற்ப பணப்புழக்கம் மாறுபடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதனால்தான் ஜான் டியர் ஃபினான்சியல், மாதாந்திர, காலாண்டு மற்றும் அரை ஆண்டு தவணைகள் உள்ளிட்ட நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விருப்பங்களுடன் பயன்படுத்தப்பட்ட உபகரணத்திற்கான நிதி உதவியை வழங்குகிறது. உங்கள் அறுவடை நாட்களுக்கு ஏற்றபடி தவணைகளை அமைத்துக் கொள்ளலாம், ஆண்டு முழுவதும் உங்கள் பண்ணை வேலைகளும் பணப்புழக்கமும் சீராக நடக்கும்.

கட்டணமில்லா எண்- 18002091034
ஈமெயில் அஸ்

பயன்படுத்தப்பட்ட உபகரணத்திற்கான நிதி உதவி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

பயன்படுத்தப்பட்ட உபகரணத்திற்கான நிதி உதவி என்றால் என்ன?

பயன்படுத்தப்பட்ட உபகரணத்திற்கான நிதியுதவி என்பது இன்னொருவருக்குச் சொந்தமான டிராக்டர்கள் மற்றும் இம்ப்ளிமெண்ட்டுகள் போன்ற விவசாய இயந்திரங்களை கட்டமைக்கப்பட்ட EMI அடிப்படையிலான திருப்பிச் செலுத்தும் ஆப்ஷன்கள் மூலம் விவசாயிகள் வாங்க உதவும் ஒரு கடன் வசதியாகும்.

பயன்படுத்தப்பட்ட உபகரணத்திற்கான நிதி உதவி மூலம் நான் எவ்வளவு நிதியைப் பெறமுடியும்?

தகுதியைப் பொறுத்து, பயன்படுத்தப்பட்ட உபகரணங்களின் மதிப்பில் 90% வரை ஜான் டியர் ஃபினான்சியல் நிதியளிக்கலாம்.

பயன்படுத்தப்பட்ட உபகரணத்திற்கான நிதி உதவிக்கு யார் தகுதியுடையவர்கள்?

சரிபார்க்கக்கூடிய வருமானம் மற்றும் நல்ல கடன் வரலாற்றைக் கொண்ட விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோர் மற்றும் வணிக வேளாண்மை நிறுவனங்கள் பொதுவாக தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

இந்த நிதியுதவியின் கீழ் என்னென்ன வகையான உபகரணங்களுக்கு நிதியளிக்கப்படுகின்றன?

பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள், ஹார்வெஸ்டர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேளாண் இயந்திரங்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்ட உபகரண நிதியுதவிக்கு தகுதியானவை.

கிடைக்கக்கூடிய அதிகபட்ச கடன் காலம் என்ன?

கடன் தவணைக்காலங்கள் நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதுடன், உங்கள் திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் பயிர் சுழற்சியைப் பொறுத்து 5 ஆண்டுகள் வரை இருக்கலாம்.

நிதி உதவி பெறுவதற்கு முன்பணம் செலுத்தவேண்டுமா?

ஆம், ஒரு சிறிய தொகையை வழக்கமாக முன்கூட்டியே செலுத்த வேண்டும், மீதமுள்ள தொகையை நிதி உதவியாகப் பெறலாம்.

நிலையான வட்டிவிகிதமா அல்லது மிதக்கும் வட்டி விகிதமா?

வட்டி விகிதங்கள் மாறுபடலாம், தயாரிப்பு மற்றும் உங்கள் கடன் சுயவிவரத்தைப் பொறுத்து நிலையானதாகவோ அல்லது மிதக்கும் வட்டி விகிதமாகவோ இருக்கலாம்.

பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுக்கான கடன் தொகை எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது?

கடன் தகுதி என்பது உபகரணங்களின் மதிப்பீடு, உங்கள் நிதிசார்ந்த பின்னணி மற்றும் உங்கள் விவசாய வருமானத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

நான் முன்கூட்டியே செலுத்தலாமா (ப்ரீபே) அல்லது முன்கூட்டியே அடைக்கலாமா (ஃபோர்க்ளோஸ்)?

ஆம், முன்கூட்டியே பணம் செலுத்துதல் மற்றும் முன்கூட்டியே கடன் அடைக்கும் ஆப்ஷன்கள் பொதுவாக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டுக் கிடைக்கின்றன.

விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

பொதுவாக, உங்களுக்கு KYC ஆவணங்கள், நில உரிமைப் பதிவுகள், உபகரண விவரங்கள் மற்றும் வருமானச் சான்று தேவைப்படும்.

கடன் ஒப்புதல் செயல்முறைக்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்த பிறகு- பொதுவாக ஒரு சில வேலை நாட்களுக்குள் ஒப்புதல் விரைவாக முடியும்.

ஆன்லைனில் நிதி உதவிக்கு நான் விண்ணப்பிக்கலாமா?

ஆம், நீங்கள் ஆன்லைனில் அல்லது உங்கள் அருகிலுள்ள ஜான் டியர் டீலரைத் தொடர்புகொள்வதன் மூலம் கடன் கோரிக்கையைத் தொடங்கலாம்.

உபகரணத்திற்குக் காப்பீடு தேவையா?

ஆம், உங்கள் முதலீட்டைப் பாதுகாக்க நிதி உதவி அளிக்கப்பட்ட உபகரணங்களுக்கான காப்பீடு பெரும்பாலும் கட்டாயமாகும்.

பருவகால முறையில் திருப்பிச் செலுத்தும் ஆப்ஷன்கள் ஏதும் உள்ளதா?

ஆம், உங்கள் பயிர் சுழற்சியுடன் ஒத்துப்போக அரை ஆண்டு அல்லது காலாண்டு EMI-கள் போன்ற பருவகால திருப்பிச் செலுத்தும் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

பயன்படுத்தப்பட்ட உபகரணத்திற்கான நிதி உதவிக்கு நான் ஏன் ஜான் டியரை தேர்ந்தெடுக்கவேண்டும்?

விவசாய வருமானத்தின் யதார்த்தங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட விதிமுறைகளுடன், ஜான் டியர் தனிப்பயனாக்கப்பட்ட நிதி உதவி, நம்பகமான ஆதரவு மற்றும் விரைவான செயலாக்கத்தை வழங்குகிறது.