வேளாண் மற்றும் தொழில்துறை இயந்திரங்களின் செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் ஆயுட்காலம் ஆகியவற்றிற்கு இஞ்சின் பாகங்கள் மிக முக்கியமானவை. எஞ்சின் கூறுகளை தவறாமல் ஆய்வு செய்து சரியான நேரத்தில் மாற்றுவதனால் விலைமிகுதியான செயலிழப்புகளைத் தடுக்கவும், செயல்பாட்டுத் திறனைப் பராமரிக்கவும் உதவுகிறது. உயர்தர, இணக்கமான இஞ்சின் பாகங்களைப் பயன்படுத்துவதன் மூலம், உபகரணத்தின் உரிமையாளர்கள் தங்கள் வாகனங்கள் மாறுபட்ட பணிச்சுமைகள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் சீராக இயங்குவதை உறுதிசெய்ய முடியும்.
வழக்கமான பராமரிப்பு என்றாலும் சரி, பெரிய பழுதுகள் என்றாலும் சரி, பணிநேரத்தையும் உற்பத்தித்திறனையும் அதிகப்படுத்துவதற்கு சரியான இஞ்சின் பாகங்களை அணுகுவது அவசியம். வேளாண் மற்றும் தொழில்துறை உபகரணங்களின் நீண்டகால செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு தரமான கூறுகளைப் பயன்படுத்தி வழக்கமான பராமரிப்பு செய்வது அவசியம். Engine oils, ஃபில்டர்கள் மற்றும் ஃப்ளூயிட்கள் போன்ற அசல் maintenance parts பயன்படுத்துவது, பிரேக் டவுன் ஆவதைத் தடுக்கவும், செயல்படாமல் நிற்கும் நேரத்தைக் குறைக்கவும், ஒட்டுமொத்த வாகன செயல்திறனைப் பராமரிக்கவும் உதவுகிறது.....
1. இந்தப் பக்கத்தில் என்ன வகையான இஞ்சின் பாகங்கள் கிடைக்கின்றன? ஜான் டியர் இயந்திரங்களுக்கான அசல் கிராங்ஷாஃப்டுகள், சிலிண்டர் ஹெட்டுகள், இஞ்செக்டர்கள், பிஸ்டன்கள், கேம்ஷாஃப்ட்கள் மற்றும் பல இஞ்சின் கூறுகளை நீங்கள் காணலாம்.
2. ஒரு குறிப்பிட்ட இஞ்சின் பகுதியை நான் எவ்வாறு தேடுவது? தேவையான இஞ்சின் பாகங்களைக் கண்டறிய உங்கள் மாடல், பின், உபகரணங்கள் அல்லது கேட்டலாக் எண்ணை உள்ளிட்டு சர்ச் பாரைப் பயன்படுத்தவும்.
3. நான் ஏன் அசல் ஜான் டியர் இஞ்சின் பாகங்களைத் தேர்வு செய்ய வேண்டும்? அசல் பாகங்கள் கச்சிதமாகப் பொருந்து, உகந்த செயல்திறனை வழங்கும் மற்றும் நீடித்த வாகன ஆயுளை உறுதிசெய்கின்றன, இதற்கு ஜான் டியரின் தரத்திற்கான நியமங்கள் ஆதரவு அளிக்கின்றன.
4. . இந்த பாகங்கள் எல்லா ஜான் டியர் வாகனங்களுடனும் இணக்கமாக உள்ளதா? ஒவ்வொரு பாகமும் அந்தந்த மாடலுக்கு ஏற்றது, இணக்கத்தன்மையை உறுதிப்படுத்த உங்கள் வாகனத்தின் மாடல் அல்லது சீரியல் எண்ணுடன் பாகங்களை பொருத்த வேண்டும்.
5. பழைய ஜான் டியர் மாடல்களுக்கான பாகங்களை இங்கே காண முடியுமா? ஆம், ஜான் டியர் தற்போதைய மற்றும் பரம்பரையாகப் பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கு கிடைக்கும் தன்மையைப் பொறுத்து ஆதரவையும் பாகங்களையும் வழங்குகிறது.
6. இஞ்சின் பராமரிப்பு சிற்றேட்டில் என்ன சேர்க்கப்பட்டுள்ளது? இந்த சிற்றேடு இஞ்சின் சர்வீஸ் பாகங்கள், பராமரிப்பு குறிப்புகள், ஆயில் மற்றும் ஃப்ளூயிட் பரிந்துரைகள் மற்றும் சர்வீஸ் இடைவெளிகள் பற்றிய விவரங்களை வழங்குகிறது.
7. இந்த சிற்றேட்டை நான் எங்கே பதிவிறக்கலாம்? எஞ்சின் பாகங்கள் பக்கத்தில் "மேலும் அறிய சிற்றேட்டைப் பார்க்கவும்" என்று பெயரிடப்பட்ட லிங்கில் இருந்து நீங்கள் சிற்றேட்டைப் பார்க்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்யலாம்.
8. என்னென்ன பராமரிப்பு தயாரிப்புகள் இங்கே இடம்பெற்றுள்ளன? தயாரிப்புகளில் இஞ்சின் ஆயில்கள் (பிளஸ்-50 II), கூலண்ட்டுகள், ஹைட்ராலிக் ஃப்ள்யூயிட்கள், ஃப்யூயல் ப்ரொடெக்டண்டுகள், டீகிரேசர்கள் மற்றும் செயின் லூப்ரிகெண்ட்டுகள் ஆகியவை அடங்கும்.
9. இஞ்சின் பராமரிப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட சர்வீஸ் இடைவெளி உள்ளதா? ஆம், ஜான் டியர் உபகரண கையேடுகள் அல்லது சிற்றேடுகளில் குறிப்பிட்ட மாடலுக்கான சர்வீஸ் இடைவெளிகளை வழங்குகிறது, இது உகந்த இஞ்சின் நலனை உறுதி செய்கிறது.
10. வலைத்தளத்திலிருந்து நேரடியாக நான் இஞ்சின் பாகங்களை வாங்க முடியுமா? தற்போது, வலைத்தளம் உதிரிபாகங்கள் எந்த இடத்தில் கிடைக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகிறது, ஆனால் கொள்முதல்கள் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஜான் டியர் டீலர்கள் மூலம் செய்யப்படுகின்றன.
11. அசல் பாகங்களைப் பயன்படுத்துவதற்கு ஏதேனும் உத்தரவாத நன்மைகள் உள்ளதா? ஆம், அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலமாக இன்ஸ்டால் செய்யப்படும் போது, அசல் ஜான் டியர் பாகங்கள் உத்தரவாதக் காப்பீட்டுடன் கிடைக்கின்றன.
12. என் எஞ்சின் பாகங்கள் மாற்றப்பட வேண்டும் என்பதற்கான அறிகுறிகள் என்ன? குறைவான செயல்திறன், புகை வெளியேற்றம், அதிக வெப்பமடைதல், அசாதாரண சத்தங்கள் அல்லது மோசமான எரிபொருள் திறன் ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும்.
13. ஜான் டியர் இஞ்சின் பழுதுபார்க்கும் சர்வீஸ்களை வழங்குகிறதா? ஆம், அங்கீகரிக்கப்பட்ட ஜான் டியர் சர்வீஸ் செண்டர்கள் இஞ்சின் சிஸ்டம்களுக்கான பழுதை தெரிந்துகொள்வது, பழுதுபார்ப்பது மற்றும் பாகங்களை மாற்றுதல் ஆகிய சர்வீஸ்களை வழங்குகின்றன.
14. அருகிலுள்ள ஜான் டியர் டீலரை நான் எப்படி கண்டுபிடிப்பது? உங்கள் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஜான் டியர் டீலரைக் கண்டறிய வலைத்தளத்தில் உள்ள “Locate a Dealer”கருவியைப் பயன்படுத்தவும்.
15. சரியான இஞ்சின் பாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தொழில்நுட்ப உதவியை நான் பெற முடியுமா? ஆம், உங்கள் உள்ளூர் ஜான் டியர் டீலர் அல்லது சேவை ஆலோசகர் உங்கள் உபகரணத்திற்கான சரியான பாகத்தைத் தெரிந்துகொள்ள உதவுவதுடன், பரிந்துரைக்கவும் செய்வார்.