உயர்தர ஃபில்ட்ரேஷன்: மாசுபாடு ஏற்படுத்துபவற்றை திறம்பட அகற்றி, ஆயிலின் தூய்மையை பராமரிப்பதன் மூலம் ஜான் டியர் இஞ்சின் ஆயில் ஃபில்டர் மேம்பட்ட செயல்திறனை உறுதிசெய்கிறது.
நீடித்த இஞ்சின் ஆயுள்: இஞ்சின் தேய்மானத்தைத் தடுப்பதன் மூலமும், இஞ்சின் ஆயுளை நீட்டிப்பதன் மூலமும், இந்த ஃபில்டர் சீரான இயக்கத்தையும், அதிகரித்த நீடித்துழைக்கும் தன்மையையும் உறுதிசெய்கிறது.
மேம்பட்ட செயல்திறன்: ஜான் டியர் இஞ்சின் ஆயில் ஃபில்டரைப் பயன்படுத்துவதன் மூலம் சீரான இஞ்சின் செயல்திறனைப் பராமரிக்க உதவுவதுடன், மேம்பட்ட செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மைக்கு பங்களிக்கிறது.
பல்வேறு இஞ்சின்களுடன் இணக்கத்தன்மை: இந்த ஃபில்டர் பல்வேறு வகையான ஜான் டியர் இஞ்சின்களுடன் பொருந்தும் வகையிலும், தடையின்றி செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எளிதான மாற்றீடு (ரீப்ளேஸ்மெண்ட்): ஃபில்டர்களை மாற்றுவதற்கும், மேம்பட்ட இஞ்சின் செயல்திறனை பராமரிப்பதற்கும் பரிந்துரைக்கப்பட்ட சர்வீஸ் இடைவெளிகளைப் பின்பற்றவும்.
ஏர் ஃபில்டர்ஸ் எலிமெண்ட்
சீரான ப்ளீட்ஸ் மற்றும் அதிக மீடியா: உட்புற ஃபில்டர் எலிமெண்டில் சீரான ப்ளீட்டுகள் மற்றும் அதிக அளவு மீடியா உடன் இருப்பதனால், மாசுபாடு ஏற்படுத்துபவற்றை உயர் செயல்திறனுடன் வடிகட்டுவதை உறுதிசெய்வதன் மூலம் சர்வீஸ் இடைவெளிகளுக்கு இடையிலான காலத்தை நீட்டிக்கிறது.
நீடித்த இஞ்சின் ஆயுள்: உட்புற ஃபில்டர் எலிமெண்ட் வழங்கும் கூடுதல் ஃபில்டரிங் மூலம் இஞ்சின் தேய்மானத்தைக் குறைப்பதுடன், அதன் ஆயுளை நீட்டித்து, பராமரிப்புச் செலவுகளையும் குறைக்கிறது.
எளிதான பராமரிப்பு: செக்கண்டரி ஏர் ஃபில்டர் எலிமெண்ட் எளிதாக அகற்றும் வகையிலும் மாற்றும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதனால் வழக்கமான பராமரிப்பை எளிதாகவும் சிக்கலின்றியும் செய்யமுடிவதனால், வாடிக்கையாளரின் நேரமும் முயற்சியும் மிச்சப்படுத்துகிறது.
உகந்த செயல்திறன்: ஜான் டியர் உபகரணங்களில் உகந்த இஞ்சின் செயல்திறன், எரிபொருள் திறன் மற்றும் குறைக்கப்பட்ட உமிழ்வு ஆகியவற்றிற்காக சுத்தமான காற்று உட்கொள்ளலை உறுதி செய்கிறது.
ஹைட்ராலிக் ஆயில் ஃபில்டர்
மேம்பட்ட ஃபில்டரிங்: ஜான் டியர் டிரான்ஸாக்சில் ஆயில் ஃபில்டர்களில் சீரான ஓட்ட்த்திற்கும், தீங்கு விளைவிக்கும் துகள்களை அதிகளவில் ஃபில்டர் செய்வதற்கும் பெரிய இன்லெட் துளைகள், அதிக மீடியா பேப்பர் மற்றும் இரப்பர் சீல்கள் இருக்கிறன.
கசிவு தடுப்பு: ஃபில்டரின் வடிவமைப்பு உட்புற கசிவை தடுக்க உதவுவதன் மூலம் இஞ்சினின் நீண்ட ஆயுளை உறுதிசெய்கிறது.
உகந்த செயல்திறன்: உங்கள் உபகரணங்கள் சீராக இயங்குவதற்கு வழக்கமான பராமரிப்பு மற்றும் ஃபில்டர் மாற்றீடு பரிந்துரைக்கப்படுகிறது.
அசல் ஜான் டியர் பாகம்: தரம் மற்றும் நம்பகத்தன்மைக்கு உண்மையான உபகரண உற்பத்தியாளர் பாகத்தை நம்புங்கள்.
அசல் OEM பாகம்: அசல் ஜான் டியர் உண்மையான உபகரண உற்பத்தியாளர் பாகமாக வருகிறது, கச்சிதமான பொருத்தம் மற்றும் செயல்பாட்டை உறுதிசெய்கிறது.