ஜான் டியரில், எப்போதுமே எங்கள் இயந்திரங்கள் மற்றும் அதைப் பயன்படுத்தும் மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக ஆதரவளித்து நிற்போம். வாகனத்தின் வேலை நேரத்தை அதிகரிக்கவும், வேலையில்லாமல் நிற்கும் நேரத்தைக் குறைக்கவும், அத்துடன் உங்கள் உபகரணங்கள் வரவிருக்கும் ஆண்டுகளில் பலன் தரும் வகையில் எங்கள் ஜான் டியர் சப்போர்ட் சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விரிவான தயாரிப்பு ஆதரவு மூலமாக, ஜான் டியர் எக்யூப்மெண்ட் அதன் ஆயுள் முழுவதும் உச்சபட்ச செயல்திறனுடன் இயங்குவதை நாங்கள் உறுதிசெய்கிறோம். நிபுணத்துவ சர்வீசிங் மற்றும் அசல் பாகங்கள் முதல் டயக்நோஸ்டிக் டூல்கள் மற்றும் பராமரிப்பு வளங்கள் வரையில், ஜான் டியர் சப்போர்ட் உங்கள் உபகரணங்களை வலுவாக இயங்க வைக்க தேவையான அனைத்தையும் உங்களுக்கு வழங்குகிறது.
எங்கள் அர்ப்பணிப்புள்ள ஜான் டியர் சப்போர்ட் குழுவை நொடியில் அனுகலாம். உங்களுக்கு தயாரிப்பு தகவல், சேவை வழிகாட்டுதல் அல்லது டீலர் உதவி என எதுவாக இருந்தாலும், உதவ நாங்கள் இங்கே இருக்கிறோம்.
ஜான் டியர் சப்போர்ட் என்பது புராடக்ட் சப்போர்ட், பழுதுபார்ப்பு, வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதல் உள்ளிட்ட நிறுவனத்தின் விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவையைக் குறிக்கிறது.
நீங்கள் 1800 209 6310 என்ற கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம் அல்லது ஜான் டியரின் வலைத்தளம் மூலம் ஆதரவு குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
இதில் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான அணுகல், அசல் பாகங்கள், டயக்நோஸ்டிக் டூல்கள், செயல்திறன் மேம்படுத்தல் மற்றும் வழக்கமான பராமரிப்பு உதவிக்குறிப்புகள் ஆகியவை அடங்கும்.
ஆம், ஜான் டியர் அதன் அனைத்து டிராக்டர்கள் ஹார்வெஸ்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கும் ஆதரவை வழங்குகிறது.
ஆம், பரந்தளவிலான டீலர் நெட்வொர்க் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் இருப்பதனால் நாடு முழுவதும் ஆதரவு கிடைக்கிறது.
ஆதரவு குழு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை ஆதரவளிக்க உள்ளனர்.
ஆம், நீங்கள் ஆன்லைனில் அல்லது சேவை குழுவை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
வலைத்தளத்தில் "லொகேட் எ டீலர்" என்ற டூலைப் பயன்படுத்தவும் அல்லது வழிமுறைகளுக்கு வாடிக்கையாளர் சேவையை அழைக்கவும்.
அசல் மாற்றீடு (ரீப்ளேஸ்மெண்ட்) பாகங்கள், பருவகால பாகங்கள் சலுகைகள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த இன்ஸ்டலேஷன் வழிகாட்டுதல் அனைத்தும் சேவையின் ஒரு பகுதியாகும்.
ஆம், உத்தரவாதக் கோரிக்கை ஆதரவை (வாரண்டி கிளெயிம் சப்போர்ட்) ஜான் டியர் வழங்குகிறது மற்றும் சேவை தொடர்பான சிக்கல்களை விரைவாக தீர்க்க உதவுகிறது.
ஆம், அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலமாகவோ அல்லது வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை அழைப்பதன் மூலமாகவோ நீங்கள் அப்பாயின்மெண்ட்டுகளை திட்டமிடலாம்.
அனைத்து ஜான் டியர் சர்வீஸ் நிபுணர்களும் தொழிற்சாலையில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் சமீபத்திய டூல்களையும், இது தொடர்பான நிபுணத்துவத்தையும் கொண்டவர்கள்.
ஆம், உங்கள் உபகரணங்கள் திறம்பட இயங்கவும், செயலிழப்புகளைக் குறைக்கவும் தடுப்பு பராமரிப்பு திட்டங்கள் உள்ளன.
பல ஜான் டியர் மாடல்கள் ரிமோட் டயக்நோஸ்டிக்ஸை ஆதரிக்கின்றன, மேலும் பழுது நீக்குவதில் சேவை குழு உதவ முடியும்.
சான்றளிக்கப்பட்ட சேவை, அசல் பாகங்கள், நீண்டகால நம்பகத்தன்மை மற்றும் நிபுணர் பராமரிப்பு போன்றவற்றை உள்ளூரில் எப்போதும் பெறமுடியாது, ஆனால் ஜான் டியர் சப்போர்ட் இதை உறுதி செய்கிறது.