எங்களது தயாரிப்புகளுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்
உங்கள் உபகரணங்களை வரவிருக்கும் ஆண்டுகளில் உச்ச செயல்திறனுடன் இயங்கும்படிசெய்ய நாங்கள் ஏராளமான வளங்களை வழங்குகிறோம். சிறந்த தயாரிப்பு ஆதரவு மற்றும் சேவை ஆகியவை எங்கள் நம்பிக்கையின் பாரம்பரியத்தை வரையறுக்கின்றன, வேறுபடுத்துகின்றன மற்றும் முன்னோக்கி கொண்டு செல்கின்றன. நாடு தழுவிய டீலர்களின் வலையமைப்பு வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு முன், விற்பனைக்குப் பின் மற்றும் ஃபைனான்ஸ் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக உள்ளது.
தேவைப்படும் நேரத்தில் உங்கள் நம்பகமான நண்பர் டீலர் சப்போர்ட் ஊழியர்கள்
ஆத்தரைஸ்டு ஜான் டியர் டீலர்ஷிப்பில் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுக்கள் உள்ளன, எங்களது வாடிக்கையாளர்களுக்கு முதல் முறையே சரியான தீர்வை வழங்குவதற்கு உறுதிபூண்டுள்ளனர்.
பரிந்துரைக்கப்பட்ட சர்வீஸ் இடைவெளியில் உங்கள் John Deere உபகரணங்களின் வழக்கமான சேவையைச் செய்வதன் நன்மைகள்:
எல்லா நேரங்களிலும் உகந்த செயல்திறனை உறுதி செய்கிறது
தடுப்பு பராமரிப்பு காரணமாக குறைக்கப்பட்ட பழுது செலவுகள்
பருவ காலத்தில் வேலையில்லா நேரத்தின் செலவு மிகுதியான ஆபத்து குறைவு
நிரூபிக்கப்பட்ட ஜான் டியர் உண்மையான பாகங்களின் பயன்பாடு
நன்கு பராமரிக்கப்பட்ட உபகரணங்களுக்கு அதிக ரீசேல் வேல்யூ
தயாரிப்புக்கான உதவி
ஜான் டியர் புராடக்ட் சப்போர்ட் என்பது ஜான் டியர் உபகரணங்களின் நீண்டகால செயல்திறன், நம்பகத்தன்மை மற்றும் மதிப்பை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான சேவைசார் ஒருங்கிணைந்த அமைப்பாகும். இது நாடு தழுவிய அங்கீகரிக்கப்பட்ட டீலர்களின் நெட்வொர்க் மூலம் வழங்கப்படும் நிபுணத்துவ தொழில்நுட்ப உதவி, தடுப்பு பராமரிப்பு திட்டங்கள், அசல் பாகங்களின் கிடைக்கும் தன்மை மற்றும் டிஜிட்டல் ஆதரவு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு தீர்வுகளை உள்ளடக்கியதாகும். இந்த ஆதரவு வாடிக்கையாளர்களுக்கு உபகரணங்களின் செயல்படாமல் இருக்கும் நேரத்தைக் குறைக்கவும், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், அவர்களின் இயந்திரங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் உதவுகிறது. விவசாயம், கட்டுமானம் அல்லது தொழில்துறை பயன்பாடுகள் என்று எதுவாக இருந்தாலும், இயந்திரங்கள் அதன் பணி ஆயுள் முழுவதும் சிறப்பாக இயங்குவதற்காக ஜான் டிய புராடக்ட் சப்போர்ட் உருவாக்கப்பட்டுள்ளது. ...
1. ஜான் டியர் புராடக்ட் சப்போர்ட் என்றால் என்ன? உபகரணங்களை திறம்பட இயங்க வைப்பதற்கு ஜான் டியர் டீலர்கள் மூலம் வழங்கப்படும் விரிவான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி சேவைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.
2. ஜான் டியர் உபகரணங்களுக்கு தயாரிப்பு ஆதரவை யார் வழங்குகிறார்கள்? அங்கீகரிக்கப்பட்ட ஜான் டியர் டீலர்கள் மற்றும் அவர்களின் பயிற்சி பெற்ற சர்வீஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்தியா முழுவதும் நிபுணத்துவ ஆதரவையும் சேவையையும் வழங்குகிறார்கள்.
3. வழக்கமான சர்வீஸிங் செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன? வழக்கமாக சர்வீஸ் செய்வதனால் உச்சபட்ச செயல்திறன் கிடைப்பதுடன், பிரேக்டவுன் ஆகும் அபாயத்தைக் குறைக்கிறது, பழுதுபார்க்கும் செலவுகளைக் குறைக்கிறது மற்றும் உபகரணத்தின் அதிக மறுவிற்பனை மதிப்பைப் பராமரிக்கிறது.
4. தடுப்புப் பராமரிப்பை ஜான் டியர் வழங்குகிறதா? ஆம், எதிர்பாராத பழுதுகளைக் குறைக்கவும், உபகரணங்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும், தடுப்புப் பராமரிப்புக்கு முதன்மையான முன்னுரிமை வழங்கப்படுகிறது.
5. புராடக்ட் சப்போர்ட் எந்த வகையான உபகரணங்களை உள்ளடக்குகிறது? டிராக்டர்கள், ஸ்ப்ரேயர்கள் மற்றும் பிற ஜான் டியர் வேளாண் மற்றும் தொழில்துறை இயந்திரங்களுக்கு புராடக்ட் சப்போர்ட் கிடைக்கிறது.
6. உத்தரவாதக் காலம் முடிந்த பிறகு எனக்கு சப்போர்ட் கிடைக்குமா? ஆம், அசல் பாகங்கள் மற்றும் திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் உங்கள் சேவைக்காக இருப்பதால், உத்தரவாதம் காலாவதியான பிறகும் சப்போர்ட் மற்றும் சர்வீஸ் கிடைக்கும்.
7. எனக்கு அருகிலுள்ள ஜான் டியர் சர்வீஸ் செண்டரை நான் எப்படி கண்டுபிடிப்பது? உங்கள் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் செண்டரைக் கண்டறிய ஜான் டியர் வலைத்தளத்தில் உள்ள “லொகேட் எ டீலர்” கருவியைப் பயன்படுத்தவும்.
8. சர்வீஸ் செய்யப்படும்போது அசல் ஜான் டியர் பாகங்கள் பயன்படுத்தப்படுகிறதா? ஆம், உங்கள் வாகனத்தின் தரம் மற்றும் இணக்கத்தன்மையை உறுதி செய்வதற்காக டீலர்கள் ஜான் டியர் அசல் பாகங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
9. அவசரநிலை அல்லது பிரேக்டவுனுக்கான சப்போர்ட் கிடைக்குமா? பெரும்பாலான டீலர்கள் அவசரகால பிரேக்டவுன்களுக்கு அவசரநிலை உதவியை (எமர்ஜன்சி சப்போர்ட்டை) வழங்குகிறார்கள். குறிப்பிட்ட உதவி விவரங்களுக்கு உங்கள் உள்ளூர் டீலரைத் தொடர்பு கொள்ளலாம்.
10. சர்வீஸ் அப்பாயின்மெண்ட்டை நான் எப்படி திட்டமிடுவது? உங்கள் அருகிலுள்ள டீலரை நேரடியாகத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது சர்வீஸ் செண்டரை சென்று பார்ப்பதன் மூலமோ நீங்கள் சர்வீஸுக்கு திட்டமிடலாம்.
11. மறுவிற்பனை மதிப்பை அதிகரிக்க வழக்கமான சப்போர்ட் உதவுமா? ஆம், சரியான சர்வீஸ் செய்த பதிவோடு நன்கு பராமரிக்கப்படும் வாகனங்களுக்கு அதிக மறுவிற்பனை மதிப்பு உள்ளது.
12. டீலர் சப்போர்ட் ஊழியரின் பங்கு என்ன? இவர்கள் முதல் முறையிலேயே சரியான தீர்வுகளை வழங்கி, உபகரணம் இயங்காமல் இருக்கும் நேரத்தைக் குறைத்து, ஆண்டு முழுவதும் சீராக இயங்குவதை உறுதிசெய்கின்றனர்.
13. எனது ஜான் டியர் உபகரணங்களை எத்தனை முறை சர்வீஸ் செய்ய வேண்டும்? பயன்பாடு மற்றும் இயக்க நிலைமைகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட சர்வீஸ் இடைவெளிகளுக்கு உபகரண கையேட்டைப் பார்க்கவும்.
14. பருவகால சோதனைகளுக்கு ஜான் டியர் உதவுமா? ஆம், உச்சபட்ச விவசாயம் செய்யும் காலங்களில் பருவகாலத்தில் ஏற்படும் பிரேக்டவுன்களைத் தவிர்க்க பருவகால சோதனைகள் மற்றும் சர்வீஸ் செய்வது ஊக்குவிக்கப்படுகிறது.
15. சர்வீஸ் அல்லது பழுதுபார்ப்புகளுக்கு நிதியுதவி கிடைக்குமா? சர்வீஸ், பாகங்கள் அல்லது பராமரிப்புத் திட்டங்கள் தொடர்பான நிதியுதவி ஆப்ஷன்களுக்கு உங்கள் உள்ளூர் ஜான் டியர் ஃபினான்ஷியல் பிரதிநிதியைத் தொடர்பு கொள்ளவும்.