GreenSystem™ லின்க்
GreenSystem™ லின்க் அம்சமாகிய Trem-IIIA டிராக்டர்களுக்கான ஒரு ஃபீல்டு இன்ஸ்டலேஷன் கிட் (FIK), ஐடில் நேரம் மற்றும் வேகம், GPS டிராக் மற்றும் டிரேஸ், ஃப்யூல் கண்காணிப்பு மற்றும் ஒரு ஏக்கரேஜ் மீட்டர் போன்ற நிகழ்நேர செயல்பாட்டு எச்சரிக்கைகள் மூலம் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துகிறது. மையப்படுத்தப்பட்ட செயல்பாட்டு மையத்திலிருந்து பல டிராக்டர்களைக் கண்காணித்து நிர்வகிக்க அனுமதிப்பதன் மூலம் வாகனத் தொகுப்பை (ஃப்ளீட்) நிர்வாகம் செய்ய உதவுகிறது, இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முடிவெடுக்கும் திறனை அளித்து வளங்களை நன்கு உபயோகம் செய்ய உதவுகிறது.
இவற்றைக் கவனிக்கவும்:
- வேகமான தரவு பரிமாற்றத்திற்காக எங்கள் GreenSystem™ Linkமோடம், எந்த ஜான் டீயர் Trem-IIIA டிராக்டர்களுடனும் இணைகிறது, இதனால் உபகரணங்களின் ஆயுள் ஏதுவாக இருந்தாலும் முழு வாகனத் தொகுப்பிற்கும் (ஃப்ளீட்) இணைப்பைக் கொண்டு வருகிறது.
- உங்கள் ஜான் டயர் செயல்பாட்டு மையக் கணக்கிற்கு இயந்திரம் மற்றும் செயல்பாட்டுத் தரவை ஸ்ட்ரீம் செய்யவும்.