ஜான் டியர் டிராக்டர் விலை / ஜான் டியர் இம்ப்ளிமெண்ட் விலை

ஜான் டியர் 28HP முதல் 75HP வரையிலான பரந்த அளவிலான டிராக்டர்களை வழங்குகிறது. டிராக்டரின் விலையைப் பற்றி மேலும் அறிய கீழே உள்ள படிவத்தை நிரப்பவும்.

Loading...please wait

இந்தியாவில் ஜான் டியர்  டிராக்டரின் விலை

விவசாய கண்டுபிடிப்புகளில் முன்னணி நிறுவனமான ஜான் டியர் , 1998 முதல் இந்திய விவசாயிகளை மேம்படுத்துவதில் முன்னணி வகுத்து வருகிறது. சிறிய வயல்கள் முதல் பெரிய அளவிலான செயல்பாடுகள் வரை, இந்திய விவசாயிகளின் பல்வேறு வகையான விவசாயத் தேவைகளை ஜான் டியர்  பூர்த்தி செய்கிறது. வாங்கும் திறனை பொறுத்தவரை, இந்தியாவில் ஜான் டியரின் விலைகள் அனைத்து விவசாயிகளுக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய வகையில் பல்வேறு பட்ஜெட்டுகளுக்கு தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிறந்த தரம் மற்றும் நிபுணத்துவ சேவைகளை வழங்குவதற்கான அர்ப்பணிப்பு நோக்கம் கொண்ட ஜான் டியர் , ஆற்றல்மிக்க டிராக்டர்களை உபயோகிக்கும் ஒவ்வொரு விவசாயியும், வசதி மற்றும் மதிப்பை அனுபவிப்பதை உறுதிசெய்கிறது.

ஒரு விவசாயி ஜான் டியரை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?

இந்திய விவசாய நிலங்களின் நிலைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜான் டியர்  டிராக்டர்கள் இந்திய விவசாயிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.  சிறந்த தொழில்நுட்பத்தையும் இந்தியாவில் ஜான் டியர்  விலைகளையும் இணைத்து வாங்கும் திறனை அதிகரிக்கிறது. உங்கள் நிலங்களுக்கு ஜான் டியர்  சிறந்த தேர்வாக இருப்பதற்கான காரணம் இதோ இங்கே:

  • மேம்பட்ட தொழில்நுட்பம்

பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருவதால், தனது டிராக்டர்களில் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் டியர்  ஒரு முக்கியப் பங்கு வகித்துவருகிறது. எடுத்துக்காட்டாக, விவசாயிகள் தங்கள் செயல்பாடுகளை எப்போதும் முழு நம்பிக்கையுடனும் எளிதாகவும் நிர்வகிக்க அனுமதிக்கும் வகையில், JD-Link தொழில்நுட்பம் வயல்களில் டிராக்டர்களை தொலைவிலிருந்து கண்காணிக்க உதவுகிறது. மேலும் அறிய கிளிக் செய்யவும்: நவீன விவசாயத்திற்கான Precision Ag தொழில்நுட்பம் | ஜான் டியர்  இந்தியா

  • வாங்கும் திறன்

ஜான் டியர்  டிராக்டர்கள் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் விவசாயக் கருவிகளை உள்ளடக்குகிறது. இருந்தாலும், இந்தியாவில் ஜான் டியர்  டிராக்டரின் விலைகள் இந்திய விவசாயிகள் எளிதாக வாங்கும் அளவிலேயே உள்ளன, இதனால் சிறந்த மதிப்பு மற்றும் முதலீட்டு லாபத்தை அவர்களுக்கு அளிக்கின்றன.

  • நம்பகத்தன்மை மற்றும் நீடித்து நிலைப்பது

ஜான் டியர்  டிராக்டர்கள் நீண்ட காலத்திற்கு நிலையான மற்றும் உகந்த செயல்திறனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதால், பராமரிப்புச் செலவுகளைக் குறைத்து நிலங்களில் நம்பகத்தன்மையை உறுதி செய்கின்றன.

  • எரிபொருள் சிக்கனம் கொண்டது

எந்தவொரு டிராக்டருக்கும் எரிபொருள் சிக்கனம் என்பது ஒரு முக்கியமான பண்பாகும். எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஜான் டியர்  டிராக்டர்கள் செயல்பாட்டுச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க உதவுகிறது.

இந்தியாவில் ஜான் டியர்  டிராக்டர்களின் வகைகள்

பல்வேறு டிராக்டர்களின் அவசியத்தை ஜான் டியர்  புரிந்துகொள்கிறது, அதனால், ஒவ்வொரு விவசாயத் தேவைக்கும் பல டிராக்டர்களை ஜான் டியர்  வைத்துள்ளது. அவை:

  • ஸ்பெஷல்டி டிராக்டர்கள் (28 HP - 35 HP)

இந்தியாவில் ஜான் டியரின் விலைகளில் சிறப்பாக விளங்குவதோடு மட்டுமல்லாமல், ஜான் டியர்  மற்றுமொரு பண்பையும் கொண்டுள்ளது. மிகச் சிறிய இடங்களில் கூட சிறந்த செயல்திறனுடன் ஜான் டியர்  ஸ்பெஷல்டி டிராக்டர்களால் வேலை செய்ய முடியும் என்பதால் அவை பழத்தோட்ட விவசாயம் மற்றும் பல்வகை-செயல்பாட்டுப் பணிகளுக்கு ஏற்றதாக இருக்கிறது. குறுகலான பகுதிகளில் இயங்குவதற்கான தேவையான அளவு ஆற்றல் மற்றும் கட்டுப்பாட்டை அவை வழங்குகின்றன.

  • D சீரிஸ் டிராக்டர்கள் (36 HP - 50 HP)

நடுத்தர மற்றும் பெரிய அளவிலான விவசாய செயல்பாடுகளுக்கு, D சீரிஸ் டிராக்டர்கள் மிகவும் பன்முகத்தன்மை கொண்டவை மற்றும் திறன்மிக்கவை. அவை குறைந்த பணியில்லா நேரத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன மற்றும் மேம்பட்ட வசதி அம்சங்களுடன் வருவதால், அவற்றை பராமரிப்பதை எளிதாக்குகிறது.

  • E சீரிஸ் டிராக்டர்கள் (50 HP - 74 HP)

பெரிய நிலங்களில் மற்றும் கடுமையான பணிகளில், E சீரிஸ் டிராக்டர்கள் மிக சிறப்பாகச் செயல்படுகின்றன. கனமான விவசாயக் கருவிகளைக் கையாளத் தேவையான ஆற்றல் மற்றும் நம்பகத்தன்மையுடன் அவை வருகின்றன. துல்லியம் மற்றும் மேம்பட்ட திறனைக் கோரும் விவசாய செயல்பாடுகளுக்கு அவை பொருத்தமானவை.

ஜான் டியர்  டிராக்டர் மாடல்களைப் பார்க்க கிளிக் செய்யவும்: பண்ணை டிராக்டரை வாங்கவும் | விலை மற்றும் விவரக்குறிப்புகள் | ஜான் டியர்  இந்தியா

ஜான் டியர்  டிராக்டர்கள் ஏன் அவ்வளவு சிறப்பானவை?

வாங்கத் தூண்டும் வகையிலும் மலிவான விலைகளிலும் இந்தியாவில் ஜான் டியர்  டிராக்டர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் சிறந்த கலவையுடன் ஜான் டியர்  டிராக்டர்கள் வருகின்றன. இந்த அம்சங்களில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • JD-Link

தங்கள் டிராக்டர்களை தொலைவிலிருந்து கண்காணித்து நிர்வகிக்க இந்தத் தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு உதவுகிறது.

  • GearPro டிராக்டர்கள்

இந்த டிராக்டர்கள் 12-ஸ்பீடு கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் வருகின்றன, இது விவசாயிகளுக்கு சிறந்த கட்டுப்பாட்டை அளிப்பதுடன் பராமரிப்பும் குறைவாகவே தேவைப்படுகிறது. இது விவசாயிகளுக்கு செலவைச் சேமிக்க உதவுகிறது.

  • 5E PowerTech டிராக்டர்கள்

இந்த டிராக்டர்களில் சக்திவாய்ந்த இஞ்சின்கள் மற்றும் குறைந்த வேக க்ரீப்பர் கியர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், இவை கடினமான சூழ்நிலைகளில் விவசாயிகள் திறம்பட வேலை செய்ய உதவுகிறது.

  • ரிவர்சிபிள் ஃபேன் தொழில்நுட்பம்

இந்தத் தொழில்நுட்பம் பேருதவியாக இருக்கிறது ஏனெனில் இது வைக்கோல் மற்றும் குப்பை மேலாண்மையை எளிதாக்கி டிராக்டரின் ஆயுளை அதிகரிக்கிறது.

விவசாயிகள் உதவிக்கு எங்கு செல்லலாம்?

ஜான் டியர்  இந்தியா விவசாயிகளுக்கு ஜான் டியர்  டிராக்டர்களை வாங்கி பயன்படுத்துவதை எளிதாக்குகிறது. இருப்பினும், ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது உதவி தேவைப்பட்டால், அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் தலைமையில் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவை வழங்குவதற்கு ஜான் டியர்  நாடு முழுவதும் சேவை மையங்களின் பரவலான நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.

விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள ஜான் டியர்  சேவை மையத்தை எளிதாகக் கண்டரிந்து தங்கள் டிராக்டர்கள் சீராகவும் திறம்படவும் இயங்குவதை உறுதிசெய்ய நிபுணர்களின் உதவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டீலர்ஷிப்பைக் கண்டுபிடிக்க கிளிக் செய்யவும்: ஜான் டியர்  | குளோபல் டீலர் லொக்கேட்டர்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஜான் டியர் டிராக்டர்களால் என்ன வகையான விவசாயப் பணிகளை கையாள முடியும்?

ஜான் டியர்  டிராக்டர்கள் பன்முகத்தன்மை கொண்டவை, மேலும் உழுதல், டில்லிங், இழுத்தல், நடுதல் மற்றும் அறுவடை செய்தல் போன்ற பணிகளுக்கும், பழத்தோட்டம் விவசாயம் மற்றும் பல்வகை-செயல்பாடு போன்ற சிறப்புப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.

கடுமையான பணிகளுக்கு ஜான் டியர் டிராக்டர்களில் ஏதேனும் சிறப்பு அம்சங்கள் உள்ளதா?

டூயல் பெர்மா கிளட்ச் மற்றும் க்ரீப்பர் கியர் போன்ற அம்சங்கள் பொருத்தப்பட்ட 5E சீரிஸ் போன்ற ஜான் டியர்  டிராக்டர்கள் கடுமையான பணிகளையும் பெரிய விவசாயக் கருவிகளையும் திறமையாக கையாள வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறிய பண்ணைகளுக்கு எந்த ஜான் டியர் டிராக்டர் மாடல் சிறந்தது?

28 HP உடன் கூடிய ஜான் டியர் 3028 EN, அதன் பொருத்தமான அளவு மற்றும் ஆற்றல் காரணமாக சிறிய பண்ணைகள் மற்றும் பழத்தோட்ட வேலைகளுக்கு சிறந்தது.

ஜான் டியர் டிராக்டர்களை மற்ற பிராண்டுகளிலிருந்து தனித்து நிற்க வைப்பது எது?

பல்வேறு விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுமையான தொழில்நுட்பம், நீடித்த ஆயுள், எரிபொருள் திறன் மற்றும் பரந்த அளவிலான மாடல் வரம்புகளுக்கு ஜான் டியர்  டிராக்டர்கள் அறியப்படுகின்றன.

ஜான் டியர் டிராக்டர்களுக்கு நல்ல மறுவிற்பனை மதிப்பு உள்ளதா?

ஆம், நம்பகத்தன்மை மற்றும் பரவலான புகழ் காரணமாக, ஜான் டியர்  டிராக்டர்கள் தன் மதிப்பைத் தக்கவைத்துக் கொள்வதில் பெயர் பெற்று விளங்குகிறது.

இந்தியாவில் ஜான் டியர் டிராக்டர் டீலர்ஷிப்பை நான் எங்கு காணலாம்?

ஜான் டியருக்கு 480+ டீலர்ஷிப்புகள், இந்தியா முழுவதும் 21 க்கும் மேற்பட்ட பகுதி அலுவலகங்களின் ஆதரவோடு 932 க்கும் மேற்பட்ட விற்பனை, சேவை மற்றும் பாகங்களின் மையங்கள் இருக்கின்றன. அருகில் உள்ள டீலரைக் கண்டறிய நீங்கள் ஜான் டியர்  டீலர் லொக்கேட்டரை இங்கு பார்வையிடலாம்: ஜான் டியர்  | குளோபல் டீலர் லொக்கேட்டர்.

இந்தியாவில் ஜான் டியர் டிராக்டர்களுக்கான குதிரைத்திறன் வரம்பு என்ன?

பல்வேறு விவசாய நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்தியாவில் ஜான் டியர்  டிராக்டர்கள் 28 HP முதல் 74 HP வரம்புக்கு மேல் வருகிறது.

ஜான் டியர் டிராக்டர்களுக்கு ஃபைனன்சிங் ஆப்ஷன்கள் இருக்கிறதா?

ஆம், விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்குவதை எளிதாக்குவதற்கு ஜான் டியர்  அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்புகள் மற்றும் பார்ட்னர்கள் மூலம் நிதியுதவி தீர்வுகளை வழங்குகிறது.

மேலும் அறிய கிளிக் செய்யவும்: விவசாயிகளுக்கான டிராக்டர் ஃபைனன்சிங்தீர்வுகள் - ஜான் டியர்   இந்தியா

ஜான் டியர் டிராக்டர்களுக்கான சேவை இடைவெளிகள் என்ன?

ஜான் டியர்  டிராக்டர்கள் நீட்டிக்கப்பட்ட சேவை இடைவெளிகளைக் கொண்டுள்ளன, இது அடிக்கடி பராமரிப்பு தேவையைக் குறைக்கின்றன மற்றும் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்க உதவுகின்றன.

எனது ஜான் டியர் டிராக்டரை நான் தொலைவிலிருந்து கண்காணிக்க முடியுமா?

ஆம், JD-Link இணைப்பு மூலம், சிறந்த செயல்திறனுக்காக உங்கள் டிராக்டரின் செயல்திறன் மற்றும் பராமரிப்பு தேவைகளை தொலைவிலிருந்து கண்காணிக்கலாம்.

App Store இல் பதிவிறக்கவும்: App Store (apple.com) இல் ஆபரேஷன்ஸ் செண்டர் மொபைல்

PlayStore இல் பதிவிறக்கவும்: Google Play இல் ஆபரேஷன்ஸ் செண்டர் மொபைல் ஆப்ஸ்