
விவசாயம் என்பது வெறும் கடின உழைப்பு அல்ல, அதில் புத்திசாலித்தனமாக வேலை செய்வதும் அடங்கியிருக்கும். சரியான டூல்கள் இருந்தால், விவசாயிகளின் நேரம் மிச்சம், முயற்சி குறைவு, பயிர் சாகுபடி அதிகரிப்பதுடன், அவர்களின் வருமானமும் உயரும். அதனால்தான் சரியான விவசாய உபகரணங்களைத் தேர்ந்தெடுப்பது எப்போதையும் விட முக்கியமானது.
ஜான் டியரில், நவீன விவசாயிகளின் தேவைகளை நாங்கள் புரிந்துகொள்கிறோம். பல தசாப்தங்களின் நம்பகத்தன்மையும் மேம்பட்ட தொழில்நுட்பமும் இணைந்து, நிலத்தை தயார் செய்வது முதல் அறுவடை வரை ஒவ்வொரு படியையும் எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, முழுமையான மற்றும் நம்பகமான வேளாண் தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம்.
விவசாயத்தில் சரியான உபகரணங்கள் எவ்வளவு முக்கியம், உங்கள் விவசாய பயணத்திற்கு தேவையான அத்தியாவசிய கருவிகள் எவை என்று பார்க்கலாம்!
இன்றைய காலத்தில் விவசாய உபகரணங்கள் ஏன் முக்கியமானது?
நவீன விவசாயத்திற்கு வெறும் மனித உழைப்பு மட்டும் போதாது. நல்ல உபகரணங்கள் பின்வருவனவற்றில் உதவுகின்றன:
- உச்சகட்ட பருவ காலங்களில் நேரத்தை மிச்சப்படுத்தும்
- உடல் உழைப்பு மற்றும் சோர்வைக் குறைக்கிறது
- துல்லியம் மற்றும் பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது
- பெரிய அளவிலான வயல்களை திறம்பட நிர்வகிக்கிறது
- கடினமான வயல் நிலைமைகளை எளிதில் கையாள முடிகிறது
முற்போக்கான விவசாயத்திற்கு அவசியம் வைத்திருக்கவேண்டிய ஜான் டியர் விவசாய உபகரணங்கள்
1. ஜான் டியர் 5405 PowerTechTM டிராக்டர்
ஜான் டியர் 5405 PowerTechTM டிராக்டர், அதிக சக்தி தேவைப்படும் செயல்பாடுகளுக்கென உருவாக்கப்பட்ட 63 HP கொண்ட உறுதியான டிராக்டர். அதன் டர்போசார்ஜ் செய்யப்பட்ட PowerTech™ இஞ்சின் மற்றும் வலுவான ஹைட்ராலிக்ஸ் ஆகியவை ஆழமான உழுதல் மற்றும் லோடிங் போன்ற கனரக பணிகளுக்கு ஏற்றவாறு இதை ஆக்குகிறது. அதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் சீரான டிரான்ஸ்மிஷனுக்குப் பெயர் பெற்ற இந்த டிராக்டர், கடினமான சூழ்நிலைகளிலும் நிலையான வயல் செயல்திறனை உறுதி செய்கிறது. ஒரு வசதியான ஆபரேட்டர் ஸ்டேஷன் மற்றும் மிகச்சிறந்த தூக்கும் திறனுடன், இது இம்ப்ளிமெண்ட் செயல்பாடுகள் மற்றும் ஹாலேஜ் என இரண்டையும் எளிதாகச் செய்திட உதவுவதால், பெரிய வயல்கள் மற்றும் துணிச்சலாக கையாளக்கூடிய இலக்குகளுக்கு நம்பகமான துணையாக அமைகிறது.
2. ஜான் டியர் 5075E டிராக்டர்
5075E டிராக்டர் என்பது 75 HP திறன் கொண்ட டிராக்டர் ஆகும், இதனை பலதரப்பட்ட பணிகளுக்கும் அதன் நவீன அம்சங்களுக்கும் பெயர் பெற்றது. சக்திவாய்ந்த 3-சிலிண்டர் இஞ்சின் மற்றும் ஹை டார்க் ரிசர்வ் உடன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த டிராக்டர், ரோட்டரி டில்லர்கள் முதல் ஸ்ப்ரேயர்கள் மற்றும் பிளாண்டர்கள் என பலவிதமான இம்ப்ளிமெண்ட்டுகளை சீராக கையாள்கிறது. 4WD திறன் மற்றும் ஆயில்-இம்மர்ஸ்டு பிரேக்குகள், சீரற்ற நிலங்களில் மிகச்சிறப்பான கட்டுப்பாட்டை வழங்குகிறது. விவசாயிகள் இதை அதன் வலிமை மற்றும் குறிப்பாக நீண்ட வேலை நேரங்களில் ஆபரேட்டருக்கான சௌகரியம் என இவற்றுக்காக விரும்புகிறார்கள். நடுத்தரமானது முதல் பெரிய வயல் நிலங்கள் வரை உயர் உற்பத்தித்திறனுக்கும் நம்பகத்தன்மைக்கும் இது மிகவும் பொருத்தமானது.
3. ஜான் டியர் 5050D
தினசரி விவசாய சவால்களை எளிதாகக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்ட ஜான் டியர் 5050D டிராக்டர், 50 HP உடன் நம்பகமான செயல்திறனை வழங்குகிறது. நிலம் தயார் செய்வது, விதைத்தல் மற்றும் போக்குவரத்து போன்ற பல்வேறு வகையான வேளாண் செயல்பாடுகளுக்கு இது ஏற்றது. எரிபொருள் திறன் மற்றும் குறைந்தபட்ச பராமரிப்புக்கு பெயர் பெற்ற இது, விவசாயிகளுக்கு சிறந்த மதிப்பை வழங்குகிறது. வலுவான கட்டுமானத் தரம் மற்றும் பல்வேறு இம்ப்ளிமெண்ட்டுகளுடன் பொருந்தக்கூடிய தன்மை ஆகியவை இருப்பதனால் இந்த டிராக்டர், ஒவ்வொரு பருவத்திலும் சீரான உற்பத்தியை உறுதி செய்கிறது. விவசாய பணிகளை தங்குதடையின்றி செய்வதற்கு ஏற்ற நம்பகமான ஒன்று.
4. ஜான் டியர் 5210 GearProTM டிராக்டர்
5210 GearProTM டிராக்டர் 50 HP மற்றும் கூடுதல் டார்க் மற்றும் தூக்கும் சக்தியையும் வழங்குகிறது, இதனால் கனரக இம்ப்ளிமெண்ட்டுகள் மற்றும் தினசரி வேளாண் செயல்பாடுகளுக்கு ஏற்றதாக இது அமைகிறது. விவசாயிகள் 5210 ஐ அதன் திடமான இஞ்சின், சிறந்த PTO செயல்திறன் மற்றும் குறிப்பாக நீண்ட செயல்பாடுகளின் போது சீரான கியர் ஷிஃப்டிங்கிற்கு நம்புகிறார்கள். இதன் வலுவான சேசிஸ் மற்றும் பவர் ஸ்டீயரிங் வயல் பணிகளை மிகவும் திறம்படச் செய்வதுடன், குறைவாகவே சோர்வு ஏற்படுகிறது. மல்சிங், லெவலின் அல்லது விதைப்பது என எதுவாக இருந்தாலும், 5210 எல்லாவற்றையும் துல்லியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் கையாளுகிறது.
5. லேசர் லெவலர்
வயல் சீராக இருந்தால் நீர் பயன்பாடும் சிறப்பாக இருப்பதுடன் பயிர் வளர்ச்சியும் சீராக இருக்கும். GreenSystemTM லேசர் லெவலர், லேசர் வழிகாட்டப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கச்சிதமாக தட்டையான வயல்களை விவசாயிகள் பெற உதவுகிறது. இது நீர்ப்பாசன செலவைக் குறைப்பதுடன், நீர் தேங்குவதைத் தடுக்கிறது மற்றும் விதை முளைப்பை மேம்படுத்துகிறது. இதன் துல்லியமான செயல்திறன் நேரத்தையும் எரிபொருளையும் மிச்சப்படுத்துவதன் காரணமாக, திறன்மிக்க நீர் மற்றும் மண் மேலாண்மையில் கவனம் செலுத்தும் வளர்கின்ற விவசாயிகளுக்கு ஒரு அத்தியாவசிய கருவியாக அமைகிறது.
6. ஹை ஸ்பீடு பிளாண்டர்
விதைப்பு வேகம் மற்றும் துல்லியம் ஆகியவை முக்கியமானதாக இருக்கும்போது, GreenSystemTM ஹை ஸ்பீடு பிளாண்டர் ஒப்பிடமுடியாத செயல்திறனை வழங்குகிறது. சீரான விதை இடுதல் மற்றும் ஆழத்திற்காக வடிவமைக்கப்பட்ட இது, முளைப்பு விகிதங்களை அதிகரிக்கிறது மற்றும் சிறந்த பயிர் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. அதிக வேகத்திலும் துல்லியத்தை இழக்காமல், சீராக வேலை செய்கிறது. செயல்பாட்டு நேரத்தைக் குறைத்து, உற்பத்தித்திறனை அதிகரிப்பதனால், பெரிய வயல்வெளிகளுக்கும் சரியான நேரத்தில் விதைப்புக்காக முயற்சிக்கும் விவசாயிகளுக்கும் இது விருப்பமான தேர்வாக உள்ளது.
7. வாழை மல்சர்
வாழைத் தண்டுகள் போன்ற தடிமனான பயிர் எச்சங்களைக் கையாள இது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவற்றை நன்றாக துண்டாக்கி, வயல் முழுவதும் சமமாகப் பரப்பி, மண்ணின் ஊட்டச்சத்தை மேம்படுத்தி, எரிப்பதற்கான தேவையைக் குறைக்கிறது. அடர்ந்த வயல்களில் கூட நிலையான தழைக்கூளம் அமைப்பதற்காக இது கனரக பிளேடுகள் மற்றும் அதிவேக ரோட்டர்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேம்பட்ட மண் வளம் மற்றும் உரம் மற்றும் வேலையாட்களைக் குறைப்பதனால் விவசாயிகள் பயனடைகிறார்கள், இது நிலையான விவசாயத்திற்கான ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
8. பட்லர் லெவலர்
நெல் வயல்களுக்கு, தண்ணீர் மற்றும் மண் ஆகியவற்றின் மட்டத்தை நிர்வகிப்பது மிக முக்கியமானது. GreenSystemTM பட்லர் லெவலர், நாற்று நடுவதற்கு முன் திறன்வாய்ந்த பட்லிங் மற்றும் கச்சிதமாக சமன் செய்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. நீர் தேக்கத்தை மேம்படுத்துவதன் மூலமும் களை வளர்வதைக் குறைப்பதன் மூலமும் நெல் நடவு செய்வதற்கு ஏற்ற நிலைமைகளை இது உருவாக்குகிறது. இதன் உறுதியான ஃப்ரேம் மற்றும் உயர்ந்தவகை பிளேடு வடிவமைப்பு சீரான செயல்திறன் மற்றும் நீண்ட சர்வீஸ் ஆயுளை உறுதி செய்கிறது, இதன் மூலம் நெல் விவசாயிகள் தண்ணீரையும் உழைப்பையும் சேமிக்க உதவுகிறது.
9. சப் சாயிலர்
மண்ணின் கடின அடுக்கு (கெட்டியான மண்) வேர் ஊடுருவலையும், நீர் உறிஞ்சும் தன்மையையும் குறைக்கும். GreenSystemTM சப் சாயிலர், மேற்பரப்புக்குக் கீழே ஆழத்தில் உள்ள கெட்டியான மண் அடுக்குகளை உடைத்து, காற்றோட்டம் மற்றும் நீர் ஊடுருவலை மேம்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். இது ஆழமாக வேர் அமைப்புகளை ஊடுருவிச் செல்லவும், சிறந்த ஊட்டச்சத்து கிடைக்கவும் செய்வதன் மூலம் பயிர் விளைச்சலை அதிகரிக்க உதவுகிறது. கடினமான மண்ணைத் தாங்கும் அளவுக்கு கனரகமாக கட்டமைக்கப்பட்ட இந்த இம்ப்ளிமெண்ட், மண்ணின் வளத்தை மீட்டெடுப்பதற்கும் நீண்டகால உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும் அவசியம்.
விவசாயம் வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. இந்தத் துறையில் முன்னேறிச் செல்வதற்கு நீங்கள் கடின உழைப்பை மட்டும் நம்பி இருக்காமல், ஸ்மார்டாகவும் வேலை செய்திடவேண்டும். சரியான கருவிகளில் முதலீடு செய்வது என்பது நேரத்தை மட்டும் மிச்சப்படுத்தவில்லை, உங்கள் வயலுக்கு சிறந்த, அதிக உற்பத்தித் திறன் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குகிறீர்கள்.
டிராக்டர்கள், இம்ப்ளிமெண்ட்டுகள் மற்றும் விற்பனைக்குப் பிறகான ஆதரவு என ஒவ்வொரு அடியிலும் நாங்கள் உங்களுக்கு உதவிட இருக்கிறோம்!
அதிகம் விளைவிப்போம்! செலவைக் குறைப்போம்! புத்திசாலித்தனமாக விவசாயம் செய்வோம்!