ஜான் டியர் 5405 டிராக்டரை ஏன் வாங்க வேண்டும்: மைலேஜ், அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்!

john deere 5405 tractor

ஜான் டியர் 5405 PowerTechTM ரங்களின் போட்டி உலகில் தனித்து நிற்கிறது, இது விவசாயிகள் வேலையைச் சரியாகச் செய்வதற்கான ஆற்றல், திறன் மற்றும் பன்முகத்தன்மை, ஆகியவற்றை வழங்குகிறது. நீங்கள் பெரிய வயல்களில் வேலை செய்தாலும் சரி அல்லது சிறிய நிலங்களில் வேலை செய்தாலும் சரி, திறன்வாய்ந்த உற்பத்தித்திறன் நிறைந்த விவசாய அனுபவத்திற்கு தேவையான அனைத்தையும் இந்த டிராக்டர் வழங்குகிறது.

ஆனால் ஜான் டியர்  5405 PowerTechTM டிராக்டரை மிகவும் மதிப்புமிக்கதாக்குவது எது?

ஜான் டியர்  5405 PowerTechTM 63 HP 4WD டிராக்டரில் முதலீடு செய்வது உங்களுக்கு சரியான முடிவாக இருக்கலாம் என்பதற்கான முக்கிய அம்சங்கள், நன்மைகள் மற்றும் காரணங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள். நிதியுதவிக்கான ஆப்ஷன்கள், இந்தியாவில் ஜான் டியர் டிராக்டரின் விலை, மற்றும் பலவற்றையும் விவாதிப்போம்.

இப்போது தொடங்கலாம்!

5405 டிராக்டரின் முக்கிய அம்சங்கள்

ஜான் டியர்  5405 என்பது ஒரு டிராக்டர் மட்டுமல்ல; இது தரம், புதுமை மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் குறிக்கும் புகழ்பெற்ற GearPro சீரிஸின் ஒரு பகுதியாகும். உயர் கியர் ஸ்பீடு ஆப்ஷன்களுக்கு பெயர் போன, GearPro சீரிஸ், உற்பத்தித்திறன் மற்றும் பலதுறைப் பயன்பாட்டுக்கான தன்மையை மேம்படுத்தும் வகையில் ஆபரேட்டர்களை பல்வேறு விவசாய இம்ப்ளிமெண்ட்டுகளுடன் தடையின்றி வேலை செய்ய அனுமதிக்கிறது.

ஜான் டியர்  5405 டிராக்டரை வேறுபடுத்தும் காரணங்கள் இதோ:

  1. சிறந்த செயல்திறனுக்கான CRDI தொழில்நுட்பம்

    ஜான் டியர்  5405 PowerTechTM  ஆனது CRDI தொழில்நுட்பத்துடன் கூடிய வலுவான 3029H இஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது, இது சிறந்த செயல்திறன் மற்றும் எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது. கடினமான பணிகளுக்கு ஏற்றது, இது வயல்களில் ஆற்றல்மிக்கது.
  1. டுயல் டார்க் மோடு

    டுயல்  டார்க் மூலம் ஸ்டாண்டர்டு மற்றும் எக்கனாமிக் மோடுகளுக்கு இடையில் மாறலாம், இதன் மூலம் உங்கள் தேவைகளுக்கான எரிபொருள் மற்றும் செயல்திறனை மேம்படுத்தலாம். 
  1. நீண்ட சர்வீஸ் இடைவெளி

    பராமரிப்பு நேரத்தையும் செலவுகளையும் மிச்சப்படுத்தும் வகையில் 500 மணிநேர சர்வீஸ் இடைவெளியுடன் குறைவான வேலையில்லா நேரத்தை அனுபவிக்கலாம்.
  1. எளிதான பயன்பாட்டிற்கான காம்பினேஷன் ஸ்விட்ச்

    குறைந்த வெளிச்சம் இருக்கும் இடங்களில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் காம்பினேஷன் ஸ்விட்ச் மூலம் அனைத்து லைட்டுகளையும் சிரமமின்றி கட்டுப்படுத்தலாம்.
  1. ஸ்டைலான மற்றும் செயல்பாட்டுக்குரிய வடிவமைப்பு

    LED ஹெட்லேம்ப்கள் உங்கள் பாதைக்கு வெளிச்சம் காட்டும் வேளையில்,  ஸ்டைல் மற்றும் செயல்படும் லூவர்களுடன் கூடிய நேர்த்தியான முன்பக்க கிரில் கூலிங்கை உறுதி செய்கிறது.
  1. வசதியான அகல பிளாட்ஃபார்ம்

    பின்புற ஃப்ளோர் எக்ஸ்டென்ஷன்களுடன் கூடிய அகலமான பிளாட்ஃபார்ம் வயலில் நீண்ட நேரம் வேலை செய்வதற்கான பணிச்சூழலியல் வசதியை வழங்குகிறது.
  2. CleanPro™ கூலிங் தொழில்நுட்பம்

    தூசி நிறைந்த நிலையில் பராமரிப்பு தேவைகளை குறைக்கும் வகையில் CleanPro™ இஞ்சினை குளிர்ச்சியாகவும் சுத்தமாகவும் வைக்கிறது.

வேறு சில அம்சங்கள் மற்றும் நன்மைகள்

ஜான் டியர்  5405 க்கான சில கூடுதல் அம்சங்கள் மற்றும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்:

  #1. GearPro சீரிஸ் நன்மை

  • பலதுறைப் பயன்பாட்டுக்கு பெயர்போனவை.
  • 12 ஃபார்வார்டு மற்றும் 4 ரிவர்ஸ் கியர்களுடன் கூடிய அதிக கியர் ஸ்பீடு ஆப்ஷன்கள்.
  • டில்லிங், உழுதல் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லுதல் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஏற்றது.
  • உங்கள் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை வழங்குகிறது.

  #2. அபாரமான தூக்கும் திறன்

  • 2500 kgf தூக்கும் திறன் கொண்டது.
  • கணிசமான விவசாயக் கருவிகளை எளிதாகக் கையாளுகிறது.
  • கடுமையான விவசாயம் மற்றும் இலகுரக தொழில்துறை பணிகளுக்கு ஏற்றது.
  • பல்வேறு சூழல்களில் மதிப்புமிக்கதாக நிரூபிக்கிறது.

  #3. ஃபேக்டரி-ஃபிட்டட் இரண்டாவது SCV

  • ஃபேக்டரி- ஃபிட்டட் இரண்டாவது செலக்ட்டிவ் கண்ட்ரோல் வால்வுடன் (SCV) வருகிறது.
  • மிகவும் சிக்கலான செயல்பாடுகளுக்கு ஹைட்ராலிக் திறன்களை மேம்படுத்துகிறது.
  • ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கிறது.
  • இடையூறுகள் இல்லாமல் நீண்ட நேரம் வேலை செய்ய 71 லிட்டர் எரிபொருள் டேங்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

  #4. EQRL ஆப்ஷன்கள்

  • டிரை மற்றும் வெட் கிளட்ச் ஆப்ஷன்களை வழங்குகிறது.
  • பல்வேறு பணிகளைக் கையாள்வதற்கான பலதுறைப் பயன்பாட்டுக்கான தன்மையை வழங்குகிறது.
  • தேவைக்கேற்ப துல்லியமான கட்டுப்பாடு அல்லது வலுவான சக்தியை உறுதி செய்கிறது.
  • செயல்திறன் மற்றும் ஆபரேட்டர் திருப்தியை மேம்படுத்துகிறது.

  #5. டில்ட் ஸ்டீயரிங் மற்றும் சீட் அட்ஜஸ்ட்மெண்ட்டுகள்

  • வயலில் நீண்ட நேரம் வேலை செய்யும் வகையில் ஆபரேட்டர் வசதிக்கு முன்னுரிமை அளிக்கிறது.
  • டில்ட் ஸ்டீயரிங் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய சீட்களின் அம்சங்கள் உள்ளன.
  • சோர்வைக் குறைக்க மிகச்சரியான ஓட்டும் நிலையை உறுதி செய்கிறது.
  • உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது.

  #6. PowrReverserTM தொழில்நுட்பம் (PR)

  • புதுமையான தொழில்நுட்பம் மூலமாக கிளட்ச்சைப் பயன்படுத்தாமலேயே திசையை மாற்ற முடிகிறது.
  • செயல்பாடுகளை எளிதாக்குகிறது மற்றும் தேய்மானத்தை குறைக்கிறது.
  • குறிப்பாக அடிக்கடி திசை மாற்றங்கள் தேவைப்படும் பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
  • செயல்திறனை மேம்படுத்துகிறது மற்றும் செயல்பாட்டு சிரமத்தை குறைக்கிறது.

ஜான் டியர்  5405 PowerTechTM  டிராக்டரின் சிறந்த விவரக்குறிப்புகள்

ஜான் டியர்  5405 PowerTechTM டிராக்டர் வெறும் இயந்திரம் மட்டுமல்ல, அதற்கும் மேலாகஆற்றல் மற்றும் புதுமைகளின் கலவையை வழங்கும் விவசாயியின் பங்காளியாகும். உங்கள் வயலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய அதன் முக்கிய விவரக்குறிப்புகளைப் பற்றி விவாதிப்போம்.

  #1. இஞ்சின்

  • வகை: ஜான் டியர் 3029H
  • ஹார்ஸ்பவர்: 63 HP (42 kW)
  • RPM: 2100
  • சிலிண்டர்கள்: 3
  • டர்போசார்ஜ்டு: ஆம்
  • ஃப்யூயல் இஞ்செக்‌ஷன் சிஸ்டம்: HPCR
  • கூலிங்: ஓவர்ஃப்ளோ ரிசர்வயர் உடன் குளிர்விக்கப்பட்ட கூலண்ட்
  • ஏர் ஃபில்டர்: டிரை வகை, டுயல் எலிமெண்ட்

  #2. மேம்படுத்தப்பட்ட கூலிங் திறன்

  • உகந்த இஞ்சின் வெப்பநிலைகள் - உகந்த இஞ்சின் இயக்க வெப்பநிலையை பராமரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
  • அதிக வெப்பமாகுதலைத் தடுக்கிறது - ஃபேன் அதிக வெப்பத்தை திறம்பட தடுத்து திறன்வாய்ந்த கூலிங்கை உறுதி செய்கிறது.
  • திறன்வாய்ந்த கூலிங் - சவாலான சூழல்களில் கூட திறன்வாய்ந்த கூலிங்கை வழங்குகிறது.

  #3. ரிவர்சிபிள் ஃபேன்

இஞ்சின் திறனைப் பராமரிப்பதில் ரிவர்சிபிள் ஃபேன் மிகச் சிறந்த ஒன்றாகும். ஹூட் ஸ்கிரீன் மற்றும் ரேடியேட்டரை சுத்தம் செய்யும் திறனுடன், உங்கள் டிராக்டர் ஒவ்வொரு நாளும் சிறந்த முறையில் இயங்குவதை நீங்கள் உறுதிசெய்கிறீர்கள்.

  • ஹூட் ஸ்கிரீனை சுத்தம் செய்தல் - குப்பைகளை உள்ளே விடாமல் சீரான செயல்பாட்டை உறுதி செய்கிறது.
  • ரேடியேட்டரை சுத்தம் செய்தல் - உகந்த காற்றோட்டத்தை பராமரிப்பதன் மூலம் அதிக வெப்பமாகுதலைத் தடுக்கிறது.

  #4. டிரான்ஸ்மிஷன்

ஜான் டியர் 5405 டிராக்டரில் உள்ள டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் நெகிழ்வுத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் பல்வேறு விவசாயத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

  • கிளட்ச் - டுயல் கிளட்ச், டிரை கிளட்ச், EH கிளட்ச் (ஆப்ஷனல்)
  • கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்:
    • 12F + 4R (GearPro ஸ்பீடு)
    • 12F + 12R (PowrReverser ஸ்பீடு)
    • 9F + 3R (Creeper ஸ்பீடு)
  • ஸ்பீடு ஆப்ஷன்கள்
    • GearPro ஸ்பீடு - 1.9 முதல்6 Kmph
    • PowerReverser ஸ்பீடு - 1.4 முதல்3 Kmph
    • Creeper ஸ்பீடு - 0.35 முதல்87 Kmph

  #5. பிரேக்குகள்

ஜான் டியர்  5405 டிராக்டர் எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இதன் அதிநவீன ஆயில்-இம்மர்ஸ்டு டிஸ்க் பிரேக்கிங் சிஸ்டம் நம்பகமான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. நம்பகமான மற்றும் திறன்வாய்ந்த நிறுத்தும் சக்தியை வழங்குவதன் மூலம் ஆபரேட்டரின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த பிரேக்குகளின் நோக்கமாகும்.

  #6. ஹைட்ராலிக்ஸ்

ஜான் டியர்  5405 டிராக்டரின் ஹைட்ராலிக் சிஸ்டம், துல்லியமாகவும் எளிதாகவும் எடை தூக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  • அதிகபட்ச தூக்கும் திறன்
  • 2000 Kgf
  • 2500 Kgf (ஆப்ஷனல்)

  #7. ஸ்டீயரிங்

ஜான் டியர்  5405 களின் ஸ்டீயரிங் ஆப்ஷன்களுடன் சௌகரியம் மற்றும் கட்டுப்பாடு இணைந்து கிடைக்கின்றது.

  • வகை - பவர் ஸ்டீயரிங் / டில்ட் ஸ்டீயரிங் ஆப்ஷன் (ஓபன் ஆபரேட்டர் ஸ்டேஷன்)
  • கேப் ஆப்ஷன்- பவர் ஸ்டீயரிங் / டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங்

இந்தியாவில் ஜான் டியர்  டிராக்டரின் விலை

இந்தியாவில் ஜான் டியர்  5405 இன் விலையானது பிராந்தியம், கூடுதல் அம்சங்கள் மற்றும் டீலர் சார்ந்த சலுகைகள் உட்பட பல காரணிகளைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, இந்தியாவில் ஜான் டியர்  5405 PowerTechTM 63 HP 4WD இன் விலையானது அதன் மிகச்சிறந்த உருவாக்கத் தரம் மற்றும் மேம்பட்ட அம்சங்களைப் பிரதிபலிக்கிறது. இது பல்வேறு விவசாயத் தேவைகளை ஆதரிக்கும் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை வழங்கும் நீண்ட காலத்திற்கு பலனளிக்கும் ஒரு முதலீடாகும்.

எங்கள் டிராக்டர் விலையைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தைப் பார்வையிடவும்.

ஜான் டியர்  5405 PowerTechTM 63 HP டிராக்டர் புதுமை, செயல்திறன் மற்றும் பயனர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்பிற்கு சான்றாக உள்ளது. அதன் சக்திவாய்ந்தஇஞ்சின், டுயல்  டார்க் மோடு போன்ற மேம்பட்ட அம்சங்கள் மற்றும் ஆபரேட்டர் வசதியை முன்னிறுத்தும் அர்ப்பணிப்புடன், இது இன்றைய விவசாய நிபுணர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு சிறந்த விவசாய அனுபவத்தை வழங்குகிறது.

அதன் GearPro சீரிஸ் நன்மைகள் முதல் அதன் அதிநவீன கூலிங் தொழில்நுட்பம் வரை, உங்கள் செயல்பாடுகளை மேம்படுத்த தேவையான அனைத்தையும் 5405 வழங்குகிறது. நெகிழ்வான நிதியுதவி விருப்பத்தெரிவுகள் மற்றும் தரத்திற்கான நற்பெயருடன், ஜான் டியர்  5405 என்பது கொள்முதல் மட்டுமல்ல; இது உங்கள் விவசாய எதிர்காலத்திற்கான முதலீடாகும்.