நவீன விவசாயத்தில் ஜான் டியர் டிராக்டர்களின் சிறந்த பயன்பாடு

டிராக்டர்களின் சிறந்த பயன்பாடு

விவசாயம் இன்று முன்பை விட வேகமாக மாறிக் கொண்டு இருக்கையில் டிராக்டர்கள் என்பது அடிப்படையான வாகனம் என்பதிலிருந்து இப்போது வேளாண்மையின் ஸ்மார்ட் கூட்டாளிகளாக உருவெடுத்துள்ளது. அவற்றின் செயல்திறன், நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் தொழில்நுட்ப நுணுக்கத்திற்கு பெயர் பெற்ற ஜான் டியர் டிராக்டர்கள் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள விவசாயிகளின் முதன்மைத் தேர்வாக திகழ்கின்றன.

ஜான் டியர் இந்தியா தொடர்ந்து புதுமை படைத்து, இந்திய விவசாயிகளுக்கு ஏற்றவாறு தனித்துவமான தீர்வுகளை வழங்குவதால், டிராக்டர்களின் பங்கு கணிசமாக விரிவடைந்து, நவீன விவசாயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் தொடுகின்றது.

1. சக்திவாய்ந்த இம்ப்ளிமெண்ட்டுகள் கொண்டு நிலத்தைத் தயார் செய்வது

டிராக்டரின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று நிலத்தைத் தயார் செய்வது, மேலும் ரோட்டரி டில்லர்கள், கல்டிவேட்டர்கள் மற்றும் ஹரோஸ் போன்ற இம்ப்ளிமெண்டுகளுக்கான சக்திவாய்ந்த பொருந்தக்கூடிய தன்மை உடன் ஜான் டியர் டிராக்டர்கள் உழவு பணிகளில் சிறந்து விளங்குகின்றன. இந்தக் கருவிகள் மண் கட்டிகளை உடைத்து, கரிமப் பொருட்களைக் கலந்து, சிறந்த விதைப்படுகையைத் தயார் செய்ய உதவுகின்றன, இதுவே பயிர்கள் செழித்து வளர்வதற்கான முதல் படி.

2. சிறப்பான மகசூலுக்கு துல்லியமான நடவு

நிலம் தயார் ஆன பிறகு, அதே டிராக்டர்களை சீட் டிரில்ஸ், ஹை ஸ்பீடு பிளாண்டர்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பிளாண்டர்ஸ் போன்ற நவின நடவு செய்யும் உபகரணங்களுடன் இணைக்கலாம். இதனால் விதைகள் சரியான ஆழத்திலும் இடைவெளியிலும் விதைக்கப்படுவதை உறுதி செய்வதுடன், சீரான வளர்ச்சிக்கும் அதிகபட்ச மகசூலுக்கும் அவசியமான ஒரு தேவையாகும்.

3. திறன்வாய்ந்த பயிர் பாதுகாப்பு

பயிர் பாதுகாப்பு என்பது டிராக்டர்கள் பெரும் பங்கை வகிக்கும் மற்றொரு முக்கியமான பகுதியாகும். ஸ்ப்ரேயர்களின் உதவியுடன், ஜான் டியர் டிராக்டர்கள் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் உரங்களை திறம்பட பயன்படுத்த உதவுகின்றன. தேவைப்படும் இடங்களில் மட்டுமே உள்ளீடுகள் பயன்படுத்தப்பட்டு, கழிவுகளைக் குறைத்து செயல்திறனை அதிகரிக்கும் துல்லியமான விவசாய தொழில்நுட்பத்துடன் இணைகையில் இது மேலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

4. சீராக உரத்தைப் பயன்படுத்துவது

ஃபெர்டிலைசர் ப்ராட்கேஸ்டர்ஸ் போன்ற டிராக்டர் அட்டாச்மெண்ட்டுகள் உடன் உரமிடுதல் என்பது மேலும் திறன்வாய்ந்ததாக ஆகிறது. இவை விவசாயிகளுக்கு ஆட் கூலி அல்லது அதிகப்படியான உரப்பயன்பாடு என இவையெல்லாம் இல்லாமல் மண்ணை வளப்படுத்த உதவுவதுடன், நல்ல சமநிலையான ஊட்டச்சத்து விநியோகம் கிடைப்பதை உறுதி செய்கிறது.

5. நீர்பாசன ஆதரவு

நீர்ப்பாசனத்தை நம்பியுள்ள பகுதிகளில், டிராக்டர்கள் குறிப்பாக மின்சாரம் சீராக இல்லாத பகுதிகளில் நீர் பம்புகளுக்கு மின்சாரம் வழங்கவும், நீர்ப்பாசன உபகரணங்களை நிர்வகிக்கவும் உதவுகின்றன. ஜான் டியர் டிராக்டர்களின் நம்பகமான PTO (பவர் டேக்-ஆஃப்) அமைப்புகள் அத்தகைய செயல்பாடுகளை இடர்பாடு இல்லாததாகவும், நம்பகமானதாகவும் ஆக்குகின்றன.

6. துல்லியமான வேளாண்மையை வழங்குகிறது

சமீப காலங்களில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னேற்றங்களில் ஒன்று ஜான் டியர் டிராக்டர்களைப் பயன்படுத்தி துல்லியமான விவசாயம் செய்வது (ப்ரிசிஷன் ஃபார்மிங்) ஆகும். GPS மூலம் இயக்கப்பட்ட சிஸ்டம்கள், சென்சார்கள் மற்றும் தரவு அடிப்படையில் முடிவெடுப்பதன் மூலம், விவசாயிகள் தங்கள் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மேம்படுத்தலாம். மாறி விகித விதைப்பு (வேரியபிள் ரேட் சீடிங்), தான்னியக்க ஸ்டீயரிங் அல்லது நிகழ்நேர வயல் மேப்பிங் என எதுவாக இருந்தாலும், துல்லியமான விவசாயம் அதிக உற்பத்தித்திறன், சிறப்பான வள பயன்பாடு மற்றும் அதிகமான தகவலறிந்து செய்கின்ற பண்ணை மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்கிறது.

7. அறுவடைக்குப் பிறகான ஆதரவு

கம்பைன் போல நேரடியாக தானிய அறுவடையில் ஈடுபடவில்லை என்றாலும், டிராக்டர்கள் அறுவடை தொடர்பான இம்ப்ளிமெண்ட்டுகளை இயக்குதல் மற்றும் துணை உபகரணங்களுக்கு மின்சாரம் வழங்குவது மூலம் அறுவடை செயல்பாடுகளுக்கு உதவுகின்றன, இதனால் அறுவடைக்குப் பிறகு திறம்பட கையாள முடிவதுடன், கடுமையாக உழைக்கவேண்டியதையும் குறைக்கிறது.

8. சரக்கு மற்றும் வயலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்வது

ஜான் டியர் டிராக்டர்கள் பயிர்கள், வயலுக்குத் தேவையான பொருட்களை மற்றும் பிற பொருட்களை வயலுக்கு உள்ளேயும் வெளியேயும் கொண்டு செல்வதற்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. டிரெய்லர்கள் மற்றும் டிராலிகளுடன், அவை நம்பகமான போக்குவரத்து கூட்டாளர்களாகச் செயல்படுவதுடன், முடுக்க நேரத்தைக் குறைத்து, அன்றாட நடவடிக்கைகளில் செயல்திறனை அதிகரிக்கின்றன.

 

விவசாயத்தில் டிராக்டர்களின் பயன்பாடு சமீப காலங்களில் பெரிதும் விரிவடைந்துள்ளது, மேலும் நவீன விவசாயத்தில் ஜான் டியர் டிராக்டர்கள் இயந்திரங்கள் என்பதையும் தாண்டி, வளர்ச்சிக்கான சொத்து என்றாகிவிட்டது. நிலத்தைத் தயார் செய்வது, விதைத்தல், பயிர் பராமரிப்பு, போக்குவரத்து அல்லது தரவு சார்ந்த துல்லியமான விவசாயம் என எதுவாக இருந்தாலும், ஜான் டியர் இந்தியா முழுவதும் குறைந்த உழைப்பு, அதிக விளைச்சல் என்பதை நிஜமாக்கும் வகையில் விவசாயிகளை மேம்படுத்துகிறது.

மேம்பட்ட தொழில்நுட்பம், நம்பகமான கட்டுமானத் தரம் மற்றும் புதுமைக்கான அர்ப்பணிப்புடன், ஜான் டியர் டிராக்டர்கள் இன்றைய விவசாயத்திற்கு மட்டுமல்ல, நாளைய பசுமைப் புரட்சிக்கும் அடித்தளமாகின்றன.