இலாபகரமானதா டிராக்டர்கள்: விலை vs செயல்திறன் - இது இலாபகரமானதா?

விலை vs செயல்திறன்

எந்தவொரு விவசாயிக்கும் டிராக்டரை வாங்குவது என்பது பெரிய விசயம். சந்தையில் 30 HP முதல் 75 HP வரையிலான பல வகைகள்  இருப்பதால், தேர்வு செய்து வாங்குவது எளிது. இதில் ஒளிந்திருக்கும் உண்மையான கேள்வி : ஹை-என்டு அதிக ஹார்ஸ்பவர் கொண்ட டிராக்டரில் முதலீடு செய்வது இலாபகரமானதா அல்லது நீங்கள் கொஞ்சம் பணத்தைச் சேமிப்பதன் மூலம் எளிமையான மாடலை வாங்கலாமா?

உங்களிடம்  பெரிய பண்ணை இருந்தாலோ அல்லது வயல் வேலை அதிகம் செய்ய வேண்டியிருந்தாலோ, 5075E PowerTech™ அல்லது 5405 PowerTech™ போன்ற ஜான் டீயர் ஹை-என்டு HP டிராக்டரே சரியான பொருத்தமாக இருக்கும். இந்த டிராக்டர்கள் சக்தி வாய்ந்தவை மட்டுமல்ல, நீண்ட காலத்திற்கு உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் அம்சங்களைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த மாடல்கள் ஏன் தனித்து இருக்கின்றது மற்றும் அவை உண்மையிலேயே முதலீட்டிற்கு மதிப்புள்ளதா என்பதைப் பார்ப்போம்.

தேர்வு செய்யக்கூடிய வகைகள்: பேசிக் முதல் பவர்-பேக்டு வரை

இந்தியாவின் டிராக்டர் சந்தை மிகவும் பெரிது மற்றும் ஒவ்வொரு பண்ணையின் தனிப்பட்ட தேவைகளையும் பூர்த்தி செய்ய ஏராளமான விருப்பத் தெரிவுகளை வழங்குகிறது. சிறிய நிலங்களுக்கு, 30 HP மற்றும் 50 HP வரையிலான டிராக்டர்கள் பெரும்பாலும் உழதல், விதை விதைத்தல் மற்றும் அடிப்படை பராமரிப்பு போன்ற வேலைகளைக் கையாள போதுமானது. ஆனால் வேலை அதிகரிக்கும் போது, அல்லது பெரிய இயந்திரங்களை இயக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உங்களுக்கு அதிக ஆற்றலும் அதிக ஹார்ஸ்பவர் கொண்ட டிராக்டரும் தேவைப்படும். 60-75 HP-யில் நீங்கள் உண்மையான ஹெவி-லிஃப்டர்களைப் பார்க்க முடியும்.

இங்கு தான் ஜான் டீயர் 5075E மற்றும் 5405 போன்ற ஹை-என்டு மாடல்கள் இடம்பெருகின்றன. பெரிய பண்ணைகளுக்காகவும் கடினமான வேலைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட இந்த டிராக்டர்கள் கடினமாக வேலை செய்வது மட்டுமின்றி புத்திசாலித்தனமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜான் டீயர் டிராக்டர் விலையைக் கருத்தில் கொள்வது முக்கியமாக இருந்தபோதிலும் இந்த மாடல்கள் கொடுக்கக்கூடிய நீண்ட கால இலாபத்தையும் புரிந்துகொள்வது முக்கியமாகும்.

ஒவ்வொன்றிலும் என்ன இருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

ஜான் டீயர் 5075E  PowerTech™

ஜான் டீயர் 5075E PowerTech™ -இல் 75 HP பொருத்தப்பட்டுள்ளது, உழவு செய்தல் அல்லது விதை விதைத்தல் போன்ற வழக்கமான பண்ணை வேலைகளுக்கு மட்டுமே அல்ல. பாரம் ஏற்றுதல் வேலைகள் (லோடர்) அல்லது சமப்படுத்தும் வேலைகள் (டோசர்) போன்ற விவசாயம் அல்லாத பயன்பாடுகள் உள்ளிட்ட பரந்த அளவிலான வேலைகளைக் கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஜான் டீயர் ஹை HP டிராக்டரைத் தேடுகிறீர்கள் என்றால், இந்த மாடல் உங்களுக்கான சிறந்த தெரிவாகும் இதன் மூலம் நீங்கள் பல்வேறு வேலைகளை திறம்பட கையாள முடியும்.

5075E -ஐ தனித்துவமாக இருக்கச் செய்வது எது?

மற்றவற்றில் இருந்து தனித்துவமாகக் காண்பிக்கும் பல்வேறு அம்சங்கள் 5075E -இல் உள்ளது. அவற்றில் சில இதோ:

  • மல்டிபிள் கியர் தெரிவுகள்: 5075E PowerTech™ ஒரு வகையான வேலையை மட்டும் செய்யக்கூடியது அல்ல. நீங்கள் வயலில் இல்லாமல் வெளிப்பகுதியில் இருந்தாலும் அல்லது லோடர் அல்லது டோசருக்கு மாற வேண்டியிருந்தாலும், இதில் உள்ள மல்டிபிள் கியர் தெரிவுகள், வேலை எதுவாக இருந்தாலும் உங்களை எப்போதும் செய்யும் அளவில் இருப்பதை உறுதி செய்கிறது.
  • டுயல் டார்க் மோடு: இந்த சிறப்பம்சமானது இரண்டு மோடுகளுக்கு இடையே நீங்கள் விரும்பியதைத் தெரிவு செய்ய உங்களை அனுமதிக்கிறது. இதில் முதலாவது  உங்களுக்கு கூடுதல் ஆற்றல் தேவைப்படும்போதும் மற்றும் இரண்டாவது எரிபொருளைச் சிக்கனப் படுத்த நினைக்கும் போதும் உபயோகித்துக் கொள்ளலாம். வெவ்வேறு சூழல்களுக்கு ஏற்ப உங்கள் டிராக்டரைப் பயன்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்.
  • நீண்ட சர்வீஸ் இடைவெளிகள்: 500-மணிநேர சர்வீஸ் இடைவெளியில், பராமரிப்பு பற்றி கவலைப்படுவதில் குறைந்த நேரத்தையும் வேலையை செய்து முடிக்க அதிக நேரத்தையும் செலவிடுவீர்கள்.
  • பெர்மாகிளட்ச் டுயல் PTO: இந்த அமைப்பானது மென்மையான மற்றும் திறனுடைய செயல்பாட்டை அனுமதிக்கிறது, இது ரோட்டரி டில்லர் அல்லது பவர் ஹாரோ போன்ற வேலைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • மேம்படுத்தப்பட்ட கூலிங்கிற்கான CleanPro™: வேலை செய்துகொண்டிருக்கும்போது நடுவில் டிராக்டர் அதிக வெப்பமடைவதை யாரும் விரும்புவதில்லை. CleanPro™ அமைப்பு நாள் முழுவதும் வேலை செய்தாலும்கூட, என்ஜினை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

5075E PowerTech™ இல் முதலீடு செய்வது நல்லதா?

நீங்கள் நடுத்தரம் முதல் பெரிய அளவிலான பண்ணையை வைத்துள்ளீர்கள் என்றால், 5075E PowerTech™ நம்பகமாக வேலை செய்யக்கூடிய குதிரையைப் போன்றதாகும். இது பன்முகத்தன்மை வாய்ந்தது, எரிபொருளைச் சிக்கனப்படுக்கிறது மற்றும் அதன் நீண்ட சர்வீஸ் இடைவெளிகளால் வேலையில்லா நேரத்தைக் குறைக்கிறது. நீங்கள் விவசாய வேலைகளைச் செய்தாலும் அல்லது விவசாயம் அல்லாத வேலைகளுக்குத் தேவைப்பட்டாலும், இந்த ஹை ஹார்ஸ்பவர் டிராக்டர் உங்களுக்கு நிறைய இலாபத்தைக் கொடுக்கிறது இந்தியாவில் ஜான் டீயர் டிராக்டர் விலை மற்றதை ஒப்பிடுகையில் குறைவாகவும் மதிப்புமிக்கதாகவும் உள்ளது.

ஜான் டீயர் 5405 PowerTech™

உங்கள் பண்ணையின் தேவைகள் இன்னும் அதிகமாக இருந்தால், ஜான் டீயர் 5405 PowerTech™ , அதன் 63 HP எஞ்சினுடன், பெரிய கருவிகள் மற்றும் அதிக சுமைகளைச் சமாளிக்கும் ஆற்றலை வழங்குகிறது. இது கடினமான வேலைக்காக கட்டமைக்கப்பட்டது மற்றும் எவ்வளவு பெரிய வேலைகளை எளிதாகவும் திறமையாகவும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜான் டீயர் ஹை HP டிராக்டர், நம்பகத்தன்மையுடன் அதிக செயல்திறன் தேவைப்படும் விவசாயிகளுக்கு ஏற்றது.

5405 PowerTech™ ஐ ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

  • டுயல் எஞ்சின் மோடு: 5075E PowerTech™ போலவே, 5405 PowerTech™ இரட்டை இயந்திர மோடுகள், எக்கனாமி மற்றும் ஸ்டாண்டர்ட் உடன் வருகிறது. வேலையைப் பொறுத்து, எரிபொருளைச் சேமிப்பது அல்லது அதிக ஆற்றலை அதிகரிப்பது ஆகியவற்றுக்கு இடையே மாற அவை உங்களை அனுமதிக்கின்றது.
  • 500 மணிநேர சர்வீஸ் இடைவெளி: அதன் உடன்பிறப்பைப் போலவே, 5405 PowerTech™ நீட்டிக்கப்பட்ட 500 மணிநேர சர்வீஸ் இடைவெளியை வழங்குகிறது, வேலையில்லா நேரம் மற்றும் பராமரிப்பு செலவுகளைச் சிக்கனப்படுத்தி குறைந்தபட்சமாக வைத்திருக்கிறது.
  • பெர்மாகிளட்ச் டுயல் PTO: நீடித்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கிளட்ச் சிஸ்டம், மல்ச்சிங் அல்லது பவர் ஹாரோவை இயக்குவது போன்ற பெரிய அளவிலான பயன்பாடுகளை எளிதாகவும் துல்லியமாகவும் கையாள உதவுகிறது.
  • அட்வான்ஸ்டு ஹைட்ராலிக்ஸ் மற்றும் CleanPro™ கூலிங்: கடினமான சூழ்நிலைகளில் அதிக வேலை செய்ய, அதன் அட்வான்ஸ்டு ஹைட்ராலிக்ஸ் மற்றும் திறமையான குளிரூட்டும் அமைப்புகளால் 5405 PowerTech™ சீராக இயங்குகிறது.

5405 PowerTech™ என்பது ஒரு புத்திசாலித்தனமான தேர்வா?

நீங்கள் பெரிய பண்ணையை நிர்வகித்தால் அல்லது தொடர்ந்து பெரிய கருவிகளைப் பயன்படுத்தினால், 5405 PowerTech™ உங்களுக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கும். இது வலுவானது, நம்பகமானது மற்றும் அதிக செயல்திறனை வழங்கும் போது எரிபொருளைச் சிக்கனமாக்கிச் சேமிக்கிறது. இந்தியாவில் ஜான் டீயர் டிராக்டர் விலை எரிபொருள் மற்றும் பராமரிப்பு மீதான நீண்ட கால சேமிப்பின் மூலம் சமநிலைப்படுத்தப்படுகிறது, இந்த மாடலானது கனரக செயல்பாடுகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

விலை vs செயல்திறன்: உண்மையான மதிப்பு என்ன?

எனவே, 5075E அல்லது 5405 போன்ற ஹை-என்டு டிராக்டரில் நீங்கள் அதிகம் செலவிட வேண்டுமா? இதற்கான பதில் உங்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பொறுத்தது ஆனால் பல விவசாயிகளுக்கு, நீண்ட கால சேமிப்பு மற்றும் அதிகரித்த உற்பத்தித்திறன் அதிக விலைக் குறியீட்டை நியாயப்படுத்துகிறது.

கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய காரணிகள்:

  • எரிபொருள் திறன்: இரண்டு டிராக்டர்களும் எரிபொருள் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது, இது இயக்கச் செலவைக் குறைக்க உதவும், குறிப்பாக நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்யும் போது அல்லது பல வேலைகளைச் செய்யும் போது.
  • பராமரிப்பு செலவுகள்: 500-மணிநேர சர்வீஸ் இடைவெளியில், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்காக நீங்கள் குறைவாகச் செலவழிப்பீர்கள், இதனால் ஒட்டுமொத்த செலவினங்கள் குறையும் மற்றும் அப்டைம் அதிகமாகும்.
  • மறுவிற்பனை மதிப்பு: ஜான் டீயர் டிராக்டர்களை மறுவிற்பனை செய்யும் போது சந்தையில் அவற்றின் மதிப்பு எப்போதும் நன்றாகவே இருக்கும். ஒருவேளை நீங்கள் எதிர்காலத்தில் மேம்படுத்த முடிவு செய்தால், உங்கள் முதலீட்டில் குறிப்பிடத்தக்க பகுதியை மீண்டும் உங்களால் பெற முடியும் என்பதே இதன் பொருளாகும்.

முடிவுரை

சரியான டிராக்டரைத் தேர்ந்தெடுப்பது என்பது விலைப் பட்டியலை பார்ப்பது மட்டுமே அல்ல. இது உங்கள் பண்ணையின் நீண்டகால ஆதாயங்களைப் புரிந்துகொள்வதும் வரும் சவால்களைக் கையாள நீங்கள் தயாராக இருப்பதையும் உறுதிசெய்வதாகும். ஜான் டீயர் 5075E PowerTech™ மற்றும் 5405 PowerTech™ இரண்டும் செயல்திறன், வாழ்நாள் மற்றும் செலவு-திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நம்பமுடியாத மதிப்பை வழங்குகின்றது.

இந்த  ஹை ஹார்ஸ்பவர் டிராக்டர்களில் நீங்கள் முதலீடு செய்யும்போது, நீங்கள் ஒரு டிராக்டரை மட்டும் வாங்கவில்லை, உங்கள் துறைகளின் எதிர்காலத்தில் முதலீடு செய்கிறீர்கள். அவற்றின் சக்திவாய்ந்த என்ஜின்கள், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் நீண்ட கால சேமிப்புகளுடன், இந்த ஹை-என்டு டிராக்டர்கள் உங்கள் பண்ணையை வளர்க்கவும், ஆண்டுதோறும் உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான கருவிகளை உங்களுக்கு வழங்குகின்றது.