இந்தியாவில் கிடைக்கும் பரந்த அளவிலான ஜான் டியர் டிராக்டர் மாடல்களை ஆராய்தல்

John deere power tech tractors

விவசாயம், நிலத்தை தயார் செய்வது அல்லது மைதானத்தை பராமரிப்பது என்று வரும்போது, சரியான உபகரணங்களை வைத்திருப்பது மாற்றங்கள் அனைத்தையும் ஏற்படுத்தும். இந்தியாவில் முன்னணி டிராக்டர் உற்பத்தியாளராக, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், நிலத்தை தயார் செய்பவர்கள் மற்றும் மைதானத்தை பராமரிப்பவர்களின் பல்வேறு தேவைகளை ஜான் டியர் புரிந்துகொள்கிறது. பல்வேறு அப்ளிகேஷன்களுக்கு ஏற்றவாறு பரந்த அளவிலான டிராக்டர் மாடல்களுடன், ஜான் டியர் நம்பகத்தன்மை, செயல்திறன் மற்றும் புதுமை ஆகியவற்றின் மொத்த உருவமாக மாறியுள்ளது.

இந்தியாவில் கிடைக்கும் ஜான் டியர் டிராக்டர் மாடல்களின் பல்வேறு வரிசைகளை கூர்ந்து கவனிப்போம், ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது:

D சீரீஸ் டிராக்டர்கள்

ஜான் டியரின் 5D சீரீஸ் டிராக்டர்கள் பல்துறை பயன்பாடு மற்றும் செயல்திறனுக்கான சான்றாகும். 36 HP முதல் 50 HP வரையிலான, இந்த டிராக்டர்கள் வேளாண் பணிகள் மற்றும் கனரக ஹாலேஜ் ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விசாலமான ஆபரேட்டர் ஸ்டேஷன், நியூட்ரல் சேஃப்டி ஸ்விட்ச் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள் போன்ற அம்சங்களுடன் 5D சீரீஸ் அதிக அளவு சௌகர்யத்தைக் கொண்டுள்ளது. 5D சீரீஸுக்குள், ஒவ்வொரு தேவைக்கும் ஏற்ற டிராக்டர் இருப்பதை உறுதிசெய்து கொள்ளும் வகையில், வாடிக்கையாளர்கள் PowerPro மாடல்கள் மற்றும் Value+++ மாடல்களில் இருந்து தேர்வு செய்யலாம்.

சில தனித்துவமான மாடல்களை இன்னும் விரிவாகப் பார்ப்போம்:

  • 5036 - 2WD மற்றும் ஸ்டாண்டர்டு க்ளட்ச் ஆப்ஷன்களுடன் 36 HP டிராக்டர்.
  • 5105 - 40 HP மற்றும் டுயல் க்ளட்ச் ஆப்ஷன்களுடன் 2WD மற்றும் 4WD ஆகிய இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.
  • 5205 - 48 HP வழங்கும் இந்த 2WD டிராக்டர் ஸ்டாண்டர்டு மற்றும் டுயல் க்ளட்ச் ஆப்ஷன்களை வழங்குகிறது.
  • 5039D PowerPro – திறன்மிக்க விவசாயத்திற்கு 41 HP இஞ்சின் மற்றும் 8+4 காலர் ஷிஃப்ட் ட்ரான்ஸ்மிஷன் உள்ள பல திறன் வாய்ந்த 2WD டிராக்டர்.
  • 5042D PowerPro - மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறனுக்கான 44 HP இஞ்சின் மற்றும் ஸ்டாண்டர்ட்/டுயல்/ரிவர்ஸ் PTO ஆப்ஷன்களுடன் சக்திவாய்ந்த 2WD டிராக்டர்.
  • 5045D PowerPro - சீரான செயல்பாட்டிற்காக 46 HP இஞ்சின் மற்றும் சிங்கிள்/டுயல் க்ளட்ச் ஆப்ஷன்களை நம்பகமான 2WD மற்றும் 4WD டிராக்டர் வழங்குகிறது.
  • 5045D GearPro – அனைத்து வேளாண் பயன்பாடுகளுக்கும் ஹை பேக் அப் டார்க் மற்றும் அதிகரிக்கப்பட்ட உற்பத்தித்திறன் உடன் சக்திவாய்ந்த 46 HP வேளாண் டிராக்டர். 
  • 5050D GearPro – சிறந்த செயல்திறனுக்கு 50 HP இஞ்சின் மற்றும் காலர் ஷிஃப்ட் ட்ரான்ஸ்மிஷன் உள்ள உயர் செயல்திறன் கொண்ட 2WD மற்றும் 4WD டிராக்டர்.

5D சீரீஸ் முழுவதும் உள்ள நிலையான அம்சங்களில் கியர்பாக்ஸில் டாப் ஷாஃப்ட் லூப்ரிகேஷன், பிஸ்டன் ஸ்ப்ரே கூலிங் ஜெட் மற்றும் ரியர் ஆயில் ஆக்சில் மெட்டல் ஃபேஸ் சீல், ஆயுள் மற்றும் குறைந்த பராமரிப்பை உறுதி செய்கிறது.

E சீரீஸ் டிராக்டர்கள்

கனரக அப்ளிகேஷன்களுக்கும், பெரிய இம்ப்ளிமெண்ட்களை எளிதாக கையாள்வதற்கும், ஜான் டியர் 5E சீரீஸ் டிராக்டர்களை வழங்குகிறது. 50 HP முதல் 74 HP வரையிலான இந்த டிராக்டர்கள், திறன் மற்றும் நம்பகத்தன்மையுடன் கடினமான விவசாயப் பணிகளைச் சமாளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முன்னிலைப்படுத்தப்பட்ட மாடல்களில் அடங்குபவை:

  • 5210 GearPro - 2WD மற்றும் 4WD ஆகிய இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கும் பல திறன்வாய்ந்த 50 HP டிராக்டர்.
  • 5310 PowerTech™ - 57 HP உடன், இந்த டிராக்டர் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை வழங்குகிறது.
  • 5405 PowerTech™ - திறன்வாய்ந்த எரிபொருள் பயன்பாடு மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டிற்கான மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய சக்திவாய்ந்த மற்றும் பல திறன்வாய்ந்த 63 HP டிராக்டர்.
  • 5075 PowerTech™ - வலுவான 74 HP வழங்கும் இந்த டிராக்டரில் மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்கான டுயல் க்ளட்ச் ஆப்ஷன்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சிறப்பம்சம் வாய்ந்த டிராக்டர்கள்

பழத்தோட்ட விவசாயம், ஊடு பயிறு மற்றும் பட்லிங் செயல்பாடுகள் போன்ற குறுகலான அகலம் கொண்ட அப்ளிகேஷன்களுக்காக 28 HP முதல் 35 HP வரம்பிலான ஜான் டியரின் சிறப்பம்சம் வாய்ந்த டிராக்டர்கள் திறம்பட வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிராக்டர்கள் சௌகரியத்திற்கு முன்னுரிமை அளிப்பது மட்டுமல்லாமல், சிறப்பு வேளாண் பணிகளில் அபரிமிதமான வசதியையும் அளிக்கின்றன.

தனித்துவமான மாடல்களில் அடங்குபவை:

  • 3028EN - டுயல் க்ளட்ச் ஆப்ஷன்களுடன் ஒரு 28 HP 4WD டிராக்டர்.
  • 3036EN –நிலையான மற்றும் பரந்த டயர் வகைகளில் கிடைக்கும், இந்த 35 HP டிராக்டர் விதிவிலக்கான இயங்கும்திறன் மற்றும் செயல்திறனை வழங்குகிறது

ஜான் டியரின் பரந்த அளவிலான டிராக்டர் மாடல்களுடன், இந்தியாவில் உள்ள விவசாயிகள் தங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப உபகரணங்களை அணுகலாம். பன்முகத்தன்மை, ஆற்றல் அல்லது சிறப்பு செயல்பாடு எதுவாக இருந்தாலும், ஜான் டியர் டிராக்டர்கள் இந்த துறையில் ஒப்பிடமுடியாத செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகின்றன. எனவே, நீங்கள் ஒரு சிறிய அளவிலான விவசாயியாக இருந்தாலும் அல்லது பெரிய விவசாய நடவடிக்கைகளை நிர்வகிப்பவராக இருந்தாலும், உங்கள் விவசாய அனுபவத்தை உயர்த்த ஜான் டியர் டிராக்டர் காத்திருக்கிறது.

மேலும் தகவலுக்கு மற்றும் இந்தியாவில் கிடைக்கும் ஜான் டியர் டிராக்டர்களின் முழுமையான வரம்பை ஆராய, ஜான் டியர் இந்தியா இணையதளத்தைப் பார்வையிடவும்