அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அனைத்தையும் விரிவுபடுத்தவும்எல்லாவற்றயும் சுருக்கவும்

இந்தியாவில் ஜான் டியர் டிராக்டர்களை நான் எங்கே வாங்க முடியும்?

ஜான் டீலர்ஷிப்கள் இந்தியா முழுவதும் பல நகரங்கள் மற்றும் மாநிலங்களில் குறிக்கோள் நெறிப்படுத்தி பரவியுள்ளது. உங்களுக்கு அருகிலுள்ள ஜான் டியர் டீலர்ஷிப்பைக் கண்டறிய, Anubhuti ஆப்பை பதிவிறக்கம் செய்து, 'லொக்கேட் டீலர்' என்பதைக் கிளிக் செய்யவும். அல்லது ஜான் டியர் இந்தியா இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் உள்ள "டீலர் லொக்கேட்டர்" என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்தியாவில் உள்ள ஜான் டியர் டிராக்டர்களின் அம்சங்கள் என்னென்ன?

PowerPro, GearPro, PowerTech, CleanPro, Synchrosmart, AutoTrac, PowrReverser, JDLink, Creeper, LiftPro, AC கேபின் போன்ற தொழில்நுட்பங்களால் ஆதரிக்கப்படும் பல அம்சங்களை ஜான் டியர் டிராக்டர்கள் வழங்குகின்றது.

இந்தியாவில் ஜான் டியர் டிராக்டர்களுக்கான உத்தரவாத காலம் என்ன?

ஜான் டியர் இந்தியா டிராக்டர்கள் அனைத்து டிராக்டர்களும் 5 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகின்றது.

இந்தியாவில் ஜான் டியர் டிராக்டரை வாங்க நான் எப்படி கடனைப் பெறுவது?

கடன் மூலம்  டிராக்டரை வாங்க, நீங்கள் அருகிலுள்ள ஜான் டியர் டீலர்ஷிப்பை அணுகி ஜான் டியர் ஃபைனான்ஸ் வசதியைப் பெறலாம். டிராக்டர் ஃபைனான்ஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கைக் கிளிக் செய்யவும்: https://www.deere.co.in/ta/finance/financing/

ஜான் டியர் டிராக்டர்கள் எவ்வளவு மைலேஜ் தருகிறது?

ஜான் டியர் பல்வேறு வேளாண் பயன்பாடுகளுக்கு ஏற்ற பல்வேறு HP டிராக்டர்களை வழங்குகிறது. ஒவ்வொரு டிராக்டரின் மைலேஜ் அதன் ஹார்ஸ்பவர் மற்றும் பயன்பாட்டின் அடிப்படையில் மற்றொன்றிலிருந்து மாறுபடும். ஜான் டியர் டிராக்டர்கள் குறைந்தளவே எரிபொருளை உபயோகிக்கக்கூடியதாகும்.

இந்தியாவில் சிறிய பண்ணைகளுக்கு ஜான் டியர் டிராக்டர்கள் நல்லதா?

ஜான் டியர் ஸ்பெஷாலிட்டி டிராக்டர்கள் மற்றும் 5D  சீரீஸ் டிராக்டர்கள் இந்தியாவில் சிறிய விவசாய வேலைகளுக்கு ஏற்றது. அவைகளின் குறைந்த எரிபொருள் நுகர்வு, குறைவான டயர் ஸ்லிப்பேஜ் மற்றும் எளிதான இயக்கவமைப்பு ஆகியவை இந்தியாவில் உள்ள பல விவசாயிகளின் விருப்பமான தேர்வாக அமைகின்றது. மேலும் அறிந்துகொள்ள, கீழே உள்ள லிங்கைக் கிளிக் செய்யவும்:
சிறப்பு வாய்ந்த டிராக்டர்கள்: https://www.deere.co.in/ta/tractors/speciality-tractors/
5D சீரீஸ்: https://www.deere.co.in/ta/tractors/d-series-tractors/

ஜான் டியர் Anubhuti ஆப் என்றால் என்ன?

ஜான் டியர் மொபைல் ஆப் "Anubhuti"- ஜான் டியர் சாதனங்கள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் உங்களின் உகந்த நண்பன். விவசாயிகள், டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் விவசாய நிபுணர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த சக்திவாய்ந்த ஆப் மூலம் உங்கள் விரல் நுனியில் உலகில் உள்ள அனைத்து வசதியைக் கண்டறியலாம். இப்போதே ஆப்-ஐ பதிவிறக்கவும்: https://play.google.com/store/apps/details?id=com.deere.anubhuti.main&hl=en_IN&pli=1

ஜான் டியர் Anubhuti ஆப்-ஐ எவ்வாறு பதிவிறக்கம் செய்வது?

ஜான் டியர் Anubhuti ஆப் Google Play Storeல் கிடைக்கிறது. ஆப்-ஐ பதிவிறக்க, பின்வரும் படிகளைப் பின்பற்றவும்:
1. லிங்கைக் கிளிக் செய்யவும்: https://play.google.com/store/apps/details?id=com.deere.anubhuti.main&hl=en_IN&pli=1
2. திருப்பிவிடப்பட்டதும், 'இன்ஸ்டால்' என்பதைக் கிளிக் செய்யவும்

Anubhuti ஆப்பில் என்னென்ன சேவைகள் உள்ளது?

உங்கள் வேளாண் கருவிகளை விரைவாகவும் துல்லியமாகவும் கையாள்வதன் மூலம் உங்கள் விவசாயத்தை மேம்படுத்திடும் பல அம்சங்களை Anubhuti ஆப் வழங்குகிறது. இங்கே சில அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது
1. பல மொழி இன்டர்ஃபேஸ்
2. உபகரண மேலாண்மை மற்றும் பராமரிப்பு
3. ஜான் டியர் டீலர் நெட்வொர்க்குடன் இணைதல்
4. உதிரி பாகங்களை ஆர்டர் செய்தல்
5. சிரமமற்ற சர்வீஸ் கோரிக்கைகள்
6. இம்பிளிமென்ட் செலக்டர் மற்றும் சர்வீஸ் கிட் கிடைக்கும் தன்மை
7. செய்திகள் மற்றும் அறிவிப்புகளை தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்
8. விரிவான தகவல் களஞ்சியம்
9. அதிவேக டிராக்டர் 3D அனுபவம்

ஜான் டியர் Anubhuti ஆப்-இல் நான் எவ்வாறு பதிவு செய்வது?

இந்த எளிய வழிமுறைகளுடன் Anubhuti ஆப்பில் உங்கள் சேஸிஸ் எண்ணைப் பதிவு செய்யவும்: 
1. உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்
2. 'புரஃபைல்' என்பதைக் கிளிக் செய்யவும்
3. புரஃபைல்  பிரிவின் கீழ் உள்ள 'ஆட் மெஷின்' என்பதைக் கிளிக் செய்யவும்
4. உங்கள் டிராக்டர் சேஸிஸ் எண்ணைச் சேர்க்கவும். 
5. 'சேவ்' என்பதைக் கிளிக் செய்யவும்

Anubhuti ஆப் மூலம் டிராக்டர் சர்வீஸை முன்பதிவு செய்ய முடியுமா?

ஜான் டியர் Anubhuti ஆப்பைப் பயன்படுத்தி உங்கள் டிராக்டர் சர்வீசிங் அப்பாயின்மென்ட்டை எளிதாக பதிவு செய்யலாம்.

டிராக்டர் பராமரிப்புக்கு Anubhuti ஆப் எவ்வாறு உதவுகிறது?

சேஸிஸ் எண் பதிவை பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் சர்வீஸ் அப்பாயின்மென்டுகளை தடையின்றி திட்டமிடலாம், பராமரிப்பு கோரிக்கைகளை கண்காணிக்கலாம் மற்றும் சரியான நேரத்தில் புதுப்பிப்புகளைப் பெறலாம், வேலையில்லா நேரத்தைக் குறைக்கலாம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம்.

Anubhuti ஆப் பிராந்திய மொழிகளில் கிடைக்குமா?

Anubhuti ஆப்-பின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் பல மொழி இண்டர்ஃபேஸ் ஆகும், இது 9 பிராந்திய மொழிகளில் வருகிறது. இந்த உள்ளடக்கம் உங்களுக்கு விருப்பமான மொழியில் புராடெக்டுகள் மற்றும் சர்வீஸ்களை சிரமமின்றி பார்க்கவும், பரிச்சய உணர்வையும் வழிசெலுத்தலை எளிதாக்குவதையும் உறுதி செய்கிறது.

Anubhuti ஆப் மூலம் ஜான் டியர் டிராக்டர் கையேடுகளை நான் அணுக முடியுமா?

சர்வீஸ் கிட் கிடைக்கும் தன்மை மற்றும் ஆர்டர் செயல்பாடுகள், பராமரிப்பு செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உபகரணங்களின் நீண்ட ஆயுளை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான அணுகலைப் பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் பெறுகின்றனர்.

ஜான் டியர் Anubhuti ஆப் மூலம் டிராக்டர் பாகங்கள் அல்லது உதிரி பாகங்களை வாங்க முடியுமா?

உங்கள் ஜான் டியர் டிராக்டருக்கான உதிரி பாகங்களை ஆர்டர் செய்வதை Anubhuti ஆப் எளிதாக்குகிறது. உங்கள் மொபைலில் ஒரு சிலவற்றை கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் அசல் ஜான் டியர் உதிரிபாகங்களின் விரிவான விபரங்களைப் பார்க்கலாம் மேலும் அதன் கிடைக்கும் தன்மையை தெரிந்துகொண்டு, தடையின்றி ஆர்டர் செய்யலாம்.
இந்த ஆப் விரிவான புராடெக்ட் தகவல் மற்றும் இணக்கத்தன்மையை வழங்குகிறது, உங்கள் குறிப்பிட்ட கருவிக்கான சரியான உதிரி பாகங்களைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்கிறது. இது யூகத்தின் அடிப்படையில் வேலை செய்வதைத் தவிர்த்து, தவறான அல்லது பொருந்தாத உதிரிபாகங்களை ஆர்டர் செய்வதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.

இந்தியாவில் கிடைக்கும் பல்வேறு வகையான GreenSystem இம்ப்ளிமெண்ட்டுகள் என்னென்ன?

GreenSystem இம்ப்ளிமெண்ட்டுகள் உங்கள் ஜான் டியர் டிராக்டர்களுக்கு சரியான பொருத்தமாகும். உங்கள் தேவைக்கு ஏற்ப நீங்கள் டிராக்டரைத் தேர்ந்தெடுக்கலாம்
1. நிலத்தை தயார் செய்தல்
2. விதைத்தல் & நடவு செய்தல்
3. பயிர் பராமரிப்பு
4. மேலாண்மை

எனது டிராக்டர் மாடலுக்கு எந்த GreenSystem இம்ப்ளிமெண்ட்டுகள் சிறப்பாக இருக்கும்?

உங்களின் விவசாயத் தேவைகளுக்கு ஏற்ற கருவியைக் கண்டறிய, ஜான் டியர் இம்பிளிமென்ட் செலக்டர் அம்சத்தைப் பயன்படுத்தவும். இங்கே கிளிக் செய்யவும்: https://johndeereindia-implement-selector.in/

நான் GreenSystem இம்ப்ளிமெண்ட்டுகளுக்கு ஃபைனான்ஸ் பெற முடியுமா?

அதிக மகசூலைப் பெற முதலீடு செய்வது எங்களிடம் எளிதானது. கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் கருவிகளை முதலில் உருவாக்கியவர்களிடமிருந்து எளிதாக ஏற்பாடு செய்யக்கூடிய நிதியுதவியைப் பெறுங்கள்.

ஜான் டியர் ஃபைனான்ஸ் என்றால் என்ன?

ஜான் டியர் ஃபைனான்சியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் (JDFIPL) என்பது இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட வங்கி அல்லாத ஓர் நிதி நிறுவனமாகும். JDFIPL தனிப்பயனாக்கப்பட்ட ஃபைனான்ஸ் புராடெக்டுகள் மற்றும் தீர்வுகளை வழங்குகிறது, இது ஜான் டியர் உபகரணங்கள் மற்றும் வர்த்தக தயாரிப்புகளை வாங்குவதற்கு வாடிக்கையாளர் தேவைக்கு பொருந்தும்வகையில் உள்ளது. மேலும் அறிய கிளிக் செய்யவும்: https://www.deere.co.in/ta/finance/financing/

JDFIPL வாடிக்கையாளர்களின் மொத்த ஃபைனான்ஸ் தீர்வுகளை வேகமாகவும் வெளிப்படையாகவும் வழங்குவதில் பெருமை கொள்கிறது. JDFIPL  அனைத்து ஜான் டியர் தயாரிப்பதற்கும், டிராக்டர்கள், ஹார்வெஸ்டர்கள் மற்றும் இம்ப்ளிமெண்ட்ஸ் போன்ற வர்த்தக புராடெக்டுகளுக்கும் நிதி தீர்வுகளை வழங்குகிறது.

JDFIPL வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்றவாறு மாதாந்திர/காலாண்டு/அரை ஆண்டு கடன் திருப்பிச் செலுத்தும் விருப்பத் தெரிவுகளை வழங்குகிறது. JDFIPL உடனடி லோன் அனுமதியை உறுதிசெய்ய பெஸ்ட்-இன்-கிளாஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது மற்றும் பலவகையான டிஜிட்டல் மூலம் பணத்தைத் திருப்பிச் செலுத்தும் விருப்பத் தெரிவுகளை வழங்குகிறது.

அதன் பல்வேறு புரடெக்டுகள் மற்றும் சிறந்த  சேவைகள்/தொழில்நுட்ப உந்துதல் அணுகுமுறை மூலம், JDFIPL கடந்த பல ஆண்டுகளாக ஜான் டியர் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான ஓர் தேர்வாக இருக்கிறது.

இந்தியாவில் ஜான் டியர் டிராக்டர் ஃபைனான்ஸ்-க்கு நான் எப்படி விண்ணப்பிப்பது?

விவசாயிகள் விரும்பிய செயல்திறனை அடைய உதவும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை நாங்கள் வழங்குகிறோம். விவசாயிகளுக்கு கடன் வழங்கும் போது, ஜான் டியர் ஃபைனான்சியல் விவசாய பண்ணையின் மொத்த மகசூல் மதிப்புடன் விவசாயிகளின் வருமான ஆதாரங்கள் மற்றும் நிதி வலிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு உபகரணங்களில் 90% வரை பைனான்ஸ் செய்யலாம். இந்தியாவில் ஜான் டியர் டிராக்டர் ஃபைனாஸ்சைப் பெற, உங்களுக்கு  அருகிலுள்ள டீலரைச் சென்று பார்க்கவும் அல்லது கீழே உள்ள லிங்கில் எங்கள் இணையதளத்தைப் பார்க்கலாம்: https://www.deere.co.in/ta/request-a-call-back/tractor-pricelist /

ஜான் டியர் ஃபைனான்ஸ் கடன்களுக்கான திருப்பிச் செலுத்தும் காலம் என்ன?

நாங்கள் விவசாயிகளின் பயிர்செய்யும் முறை மற்றும் அவர்களின் தேவைக்கேற்ப பணப்புழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மாதாந்திர அல்லது காலாண்டு மற்றும் அரையாண்டு தவணைகளை வழங்குகிறோம்.

ஜான் டியர் ஃபைனான்ஸ் மூலம் ஜான் டீயர் இம்ப்ளிமெண்ட்டுகளுக்கு கடன் பெற முடியுமா?

விவசாயிகளுக்கு கடன் வழங்கும் போது, ஜான் டியர் ஃபைனான்சியல் விவசாய பண்ணையின் மொத்த மகசூல் மதிப்புடன் விவசாயிகளின் வருமான ஆதாரங்கள் மற்றும் நிதி வலிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இணைப்புகள் மற்றும் கருவிகளின் மீது 50%-60% வரை சமமாக ஃபைனான்ஸ் செய்யலாம்.

ஜான் டியர் டிராக்டர் ஃபைனாஸ்-க்கான EMI ஐ நான் எவ்வாறு கணக்கிடுவது?

பயன்படுத்த எளிதான டிராக்டர் லோன் EMI கால்குலேட்டர் எங்கள் இணையதளத்தில் உள்ளது. உங்கள் EMI தொகையைக் கணக்கிட கீழே உள்ள லிங்கைக் கிளிக் செய்யவும்: https://www.deere.co.in/en/finance/financing/tractor-loan-emi-calculator/