ஜான் டியர் இந்தியா ஆப்ரேஷன் சென்டர்

PowerTech™ டிராக்டர்களுக்கான JDLink™ தொழில்நுட்பத்தின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட கருவிகள் கண்காணிப்பு மற்றும் வணிக மேலாண்மைக்கான ஒர் விரிவான தீர்வை ஜான் டியர் ஆப்ரேஷன் சென்டர் வழங்குகிறது. நாங்கள் இப்போது Trem 3A டிராக்டர்களுக்கான GreenSystemLink தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறோம், இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்கள் Trem 3A வாகனங்களைக் கொண்டு John Deere Operations Center™ ஆப்ஸைப் பயன்படுத்தலாம்.

 

ஆப்ரேஷன் சென்டர் உங்களுக்கு என்ன வழங்குகிறது:

  • மெஷின் ஹெல்த் விழிப்பூட்டல்கள்
  • உங்கள் டிராக்டர் எங்கே இருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடிக்கலாம்
  • எளிதான களப்பணி ஆவணமாக்குதல்
  • உங்கள் டிராக்டரை கண்காணித்தல் & பாதுகாத்தல்
  • எளிதான வாகனங்கள் மேலாண்மை
  • உங்கள் டிராக்டரைப் பாதுகாக்கிறது
Machine health alerts

மெஷின் ஹெல்த் விழிப்பூட்டல்கள்

வாகன பாதுகாப்பை வழங்குகிறது மற்றும் வாடிக்கையாளருக்கு எவ்வித தொந்தரவும் இல்லாமல் வேலை செய்ய அனுமதிக்கிறது.

  • அதிக இஞ்சின் வெப்பநிலை
  • ஆயில் பிரஷர் குறைவு எச்சரிக்கை
  • எரிபொருளில் நீர் கலந்திருப்பது
  • ஏர் கிளீனர் அடைப்பட்டுள்ளது
  • பேட்டரி சார்ஜிங் சிஸ்டத்தில் கோளாறு

Note: பவர்டெக் டிராக்டர்களுக்கு மட்டும் பொருந்தும்

Machine track and trace

மெஷின் ட்ராக் மற்றும் டிரேஸ்

வாகனம் தற்போது எங்கு உள்ளது, வேலை முன்னேற்றம் மற்றும் வேலை ஆர்டர்களை தொலைவிலிருந்து (ரிமோட்) சிறப்பாக கையாள்வதன் மூலம் உபகரணப் பயன்பாட்டை மேம்படுத்துகிறது.

  • ட்ராக் - நிகழ்நேர தற்போதைய வாகனம் இருக்குமிடம் குறித்த தகவலைப் பெறுங்கள்
  • டிரேஸ் - அன்றாட டிராக்டர் இயக்கும் வரலாறு
Field work documentation

களப்பணி ஆவணப்படுத்தல்

டிஜிட்டல் முறையில் வேலையை ஆவணபடுத்துவது பிரச்சனைகளைத் தவிர்க்கிறது! எரிபொருள் நுகர்வு, உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை மேம்படுத்த இஞ்சின் செயல்திறன் போன்ற வேலை சார்ந்த செயல்திறன் பற்றிய தரவுகள்.

வயல் வேலை கண்காணிப்பு பின்வரும் தகவல்களை வழங்குகிறது:

  • பரப்பளவு
  • கவரேஜ்
  • மொத்த நேரம்
  • தொடக்க மற்றும் முடிவு நேரம்
  • மொத்த எரிபொருள் நுகர்வு லிட்டர்
East fleet management

எளிமையான வாகனங்கள் மேலாண்மை (ப்ளீட் மேனேஜ்மென்ட்)

பல டிராக்டர்களைக் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஏற்றது
இடம், ஹெல்த் மற்றும் தற்போதைய நிலையுடனான வாகனங்கள் கண்காணிப்பு

கருவியின் செயல்திறனை கண்காணிப்பது

கருவியின் செயல்திறனை கண்காணிப்பது

இந்த அம்சமானது கருவியின் முக்கியமான செயல்திறன் அளவுருக்கள் குறித்த புரிதலை வழங்குகிறது, இதனால் கருவியின் மூலம் கிடைக்கும் உற்பத்தித்திறன் அதிகரிப்பதுடன், சரியான நிலைமைகளின் கீழ் கருவி ஆபரேட் செய்யப்படுகிறது என்பதை உறுதிசெய்கிறது. தற்போதைய ஆபரேட் செய்யும் நிலைமைகளைப் புரிந்துகொள்வதற்கு ஆபரேஷன்ஸ் செண்டர் மொபைலின் “Right Now” டேபில் நேரடி இஞ்சின் RPM மற்றும் லோடை உங்களால் கண்காணிக்க முடியும். கூடுதலாக, ஆபரேஷன்ஸ் செண்டர் மொபைலின் “Today” டேப் மூலமாக அன்றைய தினத்தில் பயன்படுத்தப்பட்ட மணிநேரங்கள் மற்றும் மொத்த எரிபொருள் நுகர்வு உட்பட தினசரி கருவி பயன்பாட்டின் சுருக்கத்தைப் பெறலாம்.