ஜான் டியர் ஸ்பெஷாலிட்டி டிராக்டர்கள், தனித்துவமான விவசாயத் தேவைகளுக்கு சிறிய ஆனால் சக்திவாய்ந்த தீர்வுகளை வழங்குகின்றன. இந்த டிராக்டர்கள் நுணுக்கம் மற்றும் செயல்திறன் அதிகம் தேவைப்படுகிற பழத்தோட்டங்கள், திராட்சைத் தோட்டங்கள் மற்றும் சதுப்பு நில விவசாயத்திற்கு ஏற்றவை.
28 HP முதல் 35 HP வரையிலான இஞ்சின் ஆப்ஷன்களுடன், 8F+8R டிரான்ஸ்மிஷன், டுயல் PTO ஆப்ஷன்கள் மற்றும் பல்வேறு விவசாய பணிகளை ஆதரிக்க சிங்கிள்-கிளட்ச் சிஸ்டம்களுடன் இந்த டிராக்டர்கள் வருகின்றன. அவற்றின் 4WD திறன் சமதளமற்ற நிலப்பரப்பில் சிறந்த இழுவை சக்தியை வழங்கி, சவாலான விவசாய நிலைமைகளில் அவற்றை மிகவும் நம்பகமானதாக ஆக்குகிறது.
விவசாயிகள் இது குறித்து விவரங்கள் அனைத்தையும் அறிந்த பின் கொள்முதல் செய்வதற்கான முடிவுகளை எடுக்க உதவும் வகையில் ஜான் டியர் ஃபைனான்சிங், டீலர் ஆதரவு மற்றும் தயாரிப்பு பிரசுரங்களையும் வழங்குகிறது. ...
1. ஜான் டியர் ஸ்பெஷாலிட்டி டிராக்டர்கள் என்றால் என்ன? ஸ்பெஷாலிட்டி டிராக்டர்கள் என்பவை பழத்தோட்டங்கள், திராட்சைத் தோட்டங்கள் மற்றும் ஈரநில சாகுபடி போன்ற குறிப்பிட்ட விவசாய பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
2. ஸ்பெஷாலிட்டி டிராக்டர்கள் வரம்பில் என்னென்ன மாடல்கள் கிடைக்கின்றன? கிடைக்கக்கூடிய மாடல்களில், 3028EN, 3036EN, 3036EN (அகலமான டயர்கள்) மற்றும் 3036E, ஆகியவை அடங்கும், ஒவ்வொன்றும் வெவ்வேறு விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன.
3. இந்த டிராக்டர்களின் ஹார்ஸ்பவர் வரம்பு என்ன? ஸ்பெஷாலிட்டி டிராக்டர்கள் 28 HP முதல் 35 HP வரையிலான இஞ்சின் திறன்களுடன் கிடைக்கின்றன.
4. இந்த டிராக்டர்கள் 4WD-யில் கிடைக்கிறதா? ஆம், ஸ்பெஷாலிட்டி டிராக்டர்கள் பிரிவில் உள்ள அனைத்து மாடல்களும் சிறந்த இழுவை மற்றும் கட்டுப்பாட்டிற்காக 4WD உடன் வருகின்றன.
5. இந்த டிராக்டர்களை பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு ஏற்றதாக மாற்றுவது எது? அவற்றின் கச்சிதமான அளவு, அதிக கையாளும் தன்மை மற்றும் இலகுரக வடிவமைப்பு ஆகியவை பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்கள் போன்ற குறுகிய இடங்களில் வேலை செய்வதற்கு ஏற்றதாக ஆக்குகின்றன.
6. இந்த டிராக்டர்களில் என்ன வகையான டிரான்ஸ்மிஷன் உள்ளது? இந்த டிராக்டர்களில் 8F+8R டிரான்ஸ்மிஷன் உள்ளது, இவற்றில் சில மாடல்கள் மென்மையாக கியர் மாற்றுவதற்காக சிங்க் ரிவர்சர்/காலர் ரிவர்சர் ஐ வழங்குகின்றன.
7. என்னென்ன PTO ஆப்ஷன்கள் உள்ளன? இந்த சீரீஸில் உள்ள அனைத்து மாடல்களும் பல இம்ப்ளிமெண்ட்டுகளைக் கையாள்வதற்காக டுயல் PTO ஆப்ஷன் உடன் வருகிறது.
8. இந்த டிராக்டர்களில் சிங்கிள் அல்லது டுயல் கிளட்ச் அமைப்புகள் உள்ளதா? திறன் மிக்க பவர் டிரான்ஸ்மிஷனை வழங்குவதற்காக ஸ்பெஷாலிட்டி டிராக்டர்களில் சிங்கிள் – கிளட்ச் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
9. இந்த டிராக்டர்கள் சதுப்பு நில விவசாயத்திற்கு ஏற்றதா? ஆம், 3036E போன்ற மாடல்கள் சதுப்பு மற்றும் சேறு நிறைந்த சூழ்நிலைகளில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன, இதனால் அவை நெல் வயல்களுக்கு ஏற்றதாக அமைகின்றன.
10. 3036EN இன் அகலமான டயர் வகை விவசாயிகளுக்கு எவ்வாறு பயனளிக்கிறது? அகலமான டயர்கள் நிலைத்தன்மையை மேம்படுத்துகின்றன, மண் கெட்டிப்படுவதைக் குறைக்கின்றன மற்றும் இயக்குவதற்குக் கடினமான நிலப்பரப்புகளில் இழுவையை மேம்படுத்துகின்றன.
11. ஜான் டியர் ஸ்பெஷாலிட்டி டிராக்டரை நான் எங்கே வாங்குவது? இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஜான் டியர் டீலர்களிடம் இந்த டிராக்டர்களை நீங்கள் வாங்கலாம்.
12. இந்த டிராக்டர்களுக்கு கடன் உதவி ஆப்ஷன்கள் உள்ளதா? ஆம், ஜான் டியர் ஃபைனான்ஸ் விவசாயிகளின் கொள்முதல்களுக்கு உதவ பல்வேறு கடன் உதவி ஆப்ஷன்களை வழங்குகிறது.
13. வாங்குவதற்கு முன் பார்க்கவேண்டுமென நான் கோரிக்கை வைக்கலாமா? வலைத்தளத்தில் உள்ள "ரிக்வெஸ்ட் எ டெமோ" பிரிவின் மூலமாகவோ அல்லது ஜான் டியர் டீலரைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ நீங்கள் ஒரு டெமோவைக் கோரலாம்.
14. இந்த டிராக்டர்களுக்கான உத்தரவாதம் என்ன? அனைத்து ஸ்பெஷாலிட்டி டிராக்டர்களும் 5 ஆண்டுகள் அல்லது 5000 மணிநேர உத்தரவாதத்துடன் வருகின்றன, இது நம்பகத்தன்மை மற்றும் மன அமைதியை உறுதி செய்கிறது.
15. எனது டிராக்டருக்கான சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்களை நான் எங்கே வாங்குவது? அங்கீகரிக்கப்பட்ட ஜான் டியர் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டீலர்கள் மூலம் உண்மையான பாகங்கள் மற்றும் சர்வீசிங் கிடைக்கிறது.