
இந்தியாவின் பல்வேறுவகையான, சவால் நிறைந்த வேளாண் விளைநிலங்களில், சிஸில் பிளவ் போன்ற புதுமையான இம்ப்ளிமெண்ட்டுகள் வேளாண்மையில் செயல்திறனையும், நிலைத்தன்மையையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண் கெட்டிப்படுதன்மை, மோசமான நீர் ஊடுருவல் மற்றும் பயிர் விளைச்சல் குறைதல் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிஸில் பிளவ், இந்திய விவசாயிகளுக்கு இன்றியமையாத கருவியாக மாறியுள்ளது. இந்த விரிவான வழிகாட்டி, சிஸில் பிளவ் என்றால் என்ன, அதன் செயல்பாட்டு வழிமுறை, நன்மைகள், பயன்பாடுகள் மற்றும் இந்த அத்தியாவசிய இம்ப்ளிமெண்ட்டின் நம்பகமான வழங்குநராக ஜான் டியர் எப்படி தனித்து நிற்கிறது என்பதை எடுத்துரைக்கிறது.
சிஸில் பிளவ் அதாவது உளி கலப்பை என்றால் என்ன?
சிஸில் பிளவ் என்பது ஆழமான உழவுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான டிராக்டரில் பொருத்தப்படுகின்ற கருவியாகும், இது மேல்புறமாக இருக்கும் மண்ணை கிளரி அடித்தள்ளாமல் கடினமான மண் அடுக்குகளை (ஹார்ட்பான்) உடைக்கிறது. மண்ணைக் கிளரும் வழக்கமான கலப்பைகளைப் போல் இல்லாமல், சிஸில் பிளவு மேற்பரப்பில் நிலைத்தன்மையை பராமரிக்கும் அதே சமயம், கீழே கெட்டியாக இருக்கும் மண் அடுக்குகளைத் தளர்த்துகிறது. இதனால் மண்ணில் காற்றோட்டம் நிறைந்து இருப்பதுடன், நீர் உறிஞ்சும் தன்மையும் மேம்படுகிறது, இதனால் வேர் வளர்ச்சியும் நன்றாக இருக்கிறது.
இந்திய மண் நிலைமைகளுக்கு ஏற்றவாறு அதன் வலுவான வடிவமைப்பு மற்றும் இணக்கத்தன்மைக்கு பெயர் பெற்ற ஜான் டியர் சிஸில் பிளவ், நிலத்தைத் தயார் செய்வதை மேம்படுத்த விரும்பும் விவசாயிகளின் முதல் வரிசை தெரிவாகும்.
சிஸில் பிளவ் வேலை செய்யும் பொறிமுறை
சிஸில் பிளவ்வின் வேலை செய்யும் பொறிமுறை நேரடியாக இருந்தாலும் அதிக செயல்திறன் வாய்ந்ததாகும்:
- டிராக்டருடன் இணைக்கப்படுவது: நிலைத்தன்மை மற்றும் எளிதாக ஆபரேட் செய்யும் வசதியை உறுதிசெய்யும் வகையில் த்ரீ-பாயிண்ட் லிங்கேஜ் சிஸ்டம் பயன்படுத்தி டிராக்டரில் சிஸில் பிளவ் பொருத்தப்பட்டிருக்கிறது.
- அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆழம்: மண்ணின் நிலைமைகள் மற்றும் பயிர் தேவைகளைப் பொறுத்து பொதுவாக 15 முதல் 45 சென்டிமீட்டர் வரையிலான வேலை ஆழத்தை தனிப்பயனாக்கலாம்.
- ஆழமான உழும் செயல்பாடு: வளைந்த ஷாங்குகள் அல்லது டைன்கள் மண்ணுக்குள் ஊடுருவிச் சென்று அடர்த்தியான அடுக்குகளை உடைக்கின்றன. டிஸ்க் அல்லது மோல்ட்போர்டு கலப்பைகளைப் போலல்லாமல், சிஸில் பிளவ் மண்ணை கிளரி மேற்பரப்பு கீழே சென்றுவிடாதபடி அடியில் உள்ள மண்ணை மட்டும் தளர்த்தி, கெட்டித்தன்மையை உடைக்கிறது.
- குறைவான மண் தகர்வு: மேற்புறம் இருக்கும் மண்ணின் கட்டமைப்பைப் பாதுகாப்பதன் மூலம், சிஸில் பிளவ் கரிமப் பொருளைத் தக்கவைத்து, அரிப்பு ஏற்படும் அபாயங்களைக் குறைக்கிறது.
இந்த வேலை பொறிமுறையானது, மண் அதன் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கும் அதே வேளையில் மேம்பட்ட நடவு நிலைமைகளுக்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறது.
சிஸில் பிளவ்வின் நன்மைகள்
மேம்பட்ட மண் வளம்
உளி கலப்பை, மண்ணின் சிறிய அடுக்குகளைத் தளர்த்துவதன் மூலம் காற்றோட்டத்தை ஊக்குவிக்கிறது, நுண்ணுயிர் செயல்பாடு மற்றும் வேர் வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்குகிறது. இதன் விளைவாக செழிப்பான பயிர்களுடன் நீடித்துநிலைத்திருக்கும் விவசாயமும் கிடைக்கிறது.
மேம்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை
கடினமான மண் அடுக்குகளை (ஹார்ட்பான்) உடைப்பதால் நீர் மண்ணுக்குள் ஆழமாக ஊடுருவி, மேற்பரப்பு ஓட்டத்தைக் குறைத்து, நீர் தேங்குவதைத் தடுக்கிறது. பருவமழையை நம்பியுள்ள இந்திய வேளாண் நிலங்களுக்கு இது மிகவும் முக்கியமானது.
உரங்களின் திறன் அதிகரிப்பது
ஆழமாக உழவதால், உரங்கள் மண்ணுடன் நன்கு கலந்து, ஊட்டச்சத்துக்களை நேரடியாக தாவர வேர்களுக்கு வழங்குவதோடு ஒட்டுமொத்த பயிர் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கிறது.
களை கட்டுப்பாடு
சிஸில் பிளவ் ஆழமாக ஊடுருவுவதால், வலுவாக பிடித்துக்கொண்டிருக்கும் களைகளை திறன் வாய்ந்த முறையில் வேரோடு பிடுங்கி, ஊட்டச்சத்து களைகளுக்கு சென்றுவிடாமல் தாவரங்கள் உறிஞ்சும் வகையில் வழிவகுப்பதுடன், இரசாயன களைக் கொல்லிகளின் அவசியத்தையும் குறைத்திருக்கிறது.
ஆற்றல் மற்றும் எரிபொருள் திறன்
பாரம்பரிய கலப்பைகளுடன் ஒப்பிடும்போது, சிஸில் பிளவ்வை இயக்க குறைந்த சக்தி தேவைப்படுகிறது, இது எரிபொருளைச் சேமிக்கிறது மற்றும் டிராக்டர்களின் தேய்மானத்தைக் குறைக்கிறது.
அரிப்பு தடுப்பு
மேற்புற மண்ணைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம், சிஸில் பிளவ் மண் அரிப்பைத் தடுக்க உதவுகிறது, நீண்டகால வளத்தையும் நிலத்தின் நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறது.
இந்திய விவசாய நிலங்களில் சிஸில் பிளவ்வின் பயன்பாடுகள்
இந்திய விவசாய நிலங்களில் சிஸில் பிளவ்வின் சில பயன்பாடுகள் பின்வருமாறு:
விதைப்புக்கு மண்ணை தயார்செய்வது
நடவு செய்வதற்கு முன் கெட்டிப்பட்ட மண்ணை உடைத்து, விதை சிறப்பாக முளைப்பதற்கும், வலுவான தாவர வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் சிஸில் பிளவ் சிறந்தது.
வளம் குறைந்த மண்ணை சீர்செய்கிறது
நீடித்த விவசாயம் அல்லது அதிகப்படியான மேய்ச்சல் காரணமாக மண் வளம் குறைவாக உள்ள பகுதிகளில், சிஸில் பிளவ் மண்ணின் அமைப்பை மேம்படுத்தி ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் நிலம் புத்துயிர் பெற உதவுகிறது.
நீர்ப்பாசன மேலாண்மை
சீரற்ற நீர் விநியோகம் உள்ள பகுதிகளில், சிஸில் பிளவ் நீர் ஊடுருவலை மேம்படுத்துகிறது, நீர் வடிந்துவிடும் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் சீரான நீர்ப்பாசனத்தை ஊக்குவிக்கிறது.
உரம் உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது
சிஸில் பிளவ் கடினமான மண் அடுக்குகளை உடைப்பதால், மண்ணுக்குள் உரம் ஆழமாக ஊடுருவுவதை உறுதிசெய்து, அவற்றின் செயல்திறனை அதிகரித்து, கழிவுகளைக் குறைக்கிறது.
பல பயிர்களுக்கு ஏற்றது
அரிசி மற்றும் கோதுமை முதல் பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் வரை, சிஸில் பிளவ் பல்வேறு பயிர்களுக்கு மண்ணைத் தயார் செய்வதன் மூலம் இந்திய விவசாய நிலங்களுக்கு பல்துறை பயன்பாட்டுக் கருவியாக அமைகிறது.
இந்தியாவில் சிஸில் பிளவ்வின் விலை
சிஸில் பிளவ்வின் விலை பிராண்ட், அளவு மற்றும் கட்டுமானத் தரம் போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும். ஜான் டியர், அதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் செயல்திறனுக்கு பெயர்பெற்ற, போட்டித்தன்மை வாய்ந்த விலையில் மாடல்களை வழங்குகிறது. ஆரம்ப செலவுகள் அதிகமாகத் தோன்றினாலும், எரிபொருள் சேமிப்பு, குறைவான பராமரிப்பு மற்றும் மேம்பட்ட மகசூல் ஆகியவற்றில் நீண்டகால நன்மைகள் இருப்பதால், இதை சிக்கனமான முதலீடாக ஆக்குகின்றன.
ஜான் டியர் இம்ப்ளிமெண்ட்ஸ் பக்கத்தில் விவசாயிகள் குறிப்பிட்ட மாடல்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
சிஸில் பிளவ் மற்றும் டிராக்டர் இம்ப்ளிமெண்ட்டுகளுக்கு ஜான் டியரை ஏன் தேர்வு செய்யவேண்டும்?
ஜான் டியர் நிறுவனம், இந்திய வேளாண் தேவைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட பரந்த அளவிலான டிராக்டர் அட்டாச்மெண்ட்டுகளையும் டிராக்டர் இம்ப்ளிமெண்ட்டுகளையும் வழங்கும், விவசாயத் தீர்வுகளுக்கான உலகளாவிய முன்னணி வகிக்கும் நிறுவனமாக உள்ளது. ஜான் டியர் சிஸில் பிளவ் இவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது:
- நீடித்து உழைக்கும் தன்மை: கடினமான மண் நிலைமைகளைத் தாங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
- செயல்திறன்: ஜான் டியர் டிராக்டர்களுடன் தடையற்ற ஒருங்கிணைப்புக்கு உகந்ததாக உள்ளது.
- பல்துறை பயன்பாடு: பல்வேறு மண் வகைகள் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு ஏற்றது.
விவசாயிகள் தங்கள் ஜான் டியர் டிராக்டர்களின் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில், கல்டிவேட்டர்கள், ஹாரோக்கள் மற்றும் சீட் டிரில்கள் போன்ற பிற இம்ப்ளிமெண்ட்டுகளையும் அணுகலாம்.
சிஸில் பிளவ்வை திறம்பட எவ்வாறு பயன்படுத்துவது
- மண் நிலையை மதிப்பிடுங்கள்: உங்கள் மண்ணின் கெட்டித்தன்மை மற்றும் ஈரப்பதத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.
- ஆழம் சார்ந்த செட்டிங்ஸை அட்ஜஸ்ட் செய்யவும்: உங்கள் பயிர் மற்றும் மண் தேவைகளுக்கு ஏற்ற ஆழத்திற்கு சிஸில் பிளவ்வை செட் செய்யவும்.
- அதற்கேற்ற டிராக்டரைப் பயன்படுத்தவும்: ஜான் டியரில் வழங்கப்பட்டுள்ளது போல சக்திவாந்த, திறன்வாய்ந்த டிராக்டருடன் இணைக்கவும்.
- வறண்ட நிலையில் இயக்கவும்: அடைபடுவது, தேவையான வகையில் உழமுடியாமல் போவதைத் தடுப்பதற்கு அதிகப்படியாக ஈரமாக இருக்கும் மண்ணில் கலப்பையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
மண் கெட்டிப்படுதன்மை, மோசமான நீர் ஊடுருவல் மற்றும் குறைந்து வரும் மகசூல் போன்ற பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிஸில் பிளவ், இந்திய விவசாய நிலங்களுக்கு இன்றியமையாத கருவியாக மாறியுள்ளது. மண்ணின் வளத்தை மேம்படுத்துதல், நீர் மேலாண்மையை மேம்படுத்துதல் மற்றும் நிலையான விவசாயத்தை ஆதரித்தல் போன்ற அதன் திறன் இதை ஒரு அவசியமான கருவியாக ஆக்குகிறது.
ஜான் டியர் சிஸில் பிளவ்வின் நம்பகத்தன்மை மற்றும் ஜான் டியர் டிராக்டரின் சக்தியுடன், விவசாயிகள் சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை அடைய முடியும். சிஸில் பிளவ் பயன்பாடுகள், விலை நிர்ணயம் மற்றும் பொருந்தக்கூடிய தன்மை பற்றி மேலும் ஆராய, ஜான் டியர் இம்ப்ளிமென்ட்ஸ் அல்லது ஜான் டியர் டிராக்டர்களைப் பார்வையிடவும்.
சிஸில் பிளவ் போன்ற நவீன கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்திய விவசாயிகள் தங்கள் வளம் நிறைந்த நிலத்தில், வளமான எதிர்காலத்தை பயிரிட முடியும்.