
இந்தியாவில் சோளம் இனி சம்பா சாகுபடிக்கான பயிர் மட்டுமல்ல. பீஹாரிலிருந்து கர்நாடகா வரை, விவசாயிகள் ஆண்டுக்கு இருமுறை மக்காசோளத்தை நடுகின்றனர்; நீர்ப்பாசன வசதியுள்ள பகுதிகளில் குருவை பருவத்திலும் சாகுபடி செய்கின்றனர். ஏக்கருக்கு 20-25 குயின்ட்டல்களுக்குப் பதிலாக 35-40 குயின்ட்டல்கள் பெற, உங்களுக்குச் சரியான சக்தி, சரியான நேரம் மற்றும் சரியான டிராக்டர் இம்ப்ளிமெண்ட்டுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
Tஇங்குதான் ஜான் டியர் டிராக்டர்கள் மற்றும் அவற்றுடன் சரியாகப் பொருந்தும் இம்ப்ளிமெண்ட்டுகள், சாதாரண சோள வயல்களை தங்கச் சுரங்கங்களாக மாற்றுகின்றன. ஆயிரக்கணக்கான வளர்ந்துவரும் சோள விவசாயிகள், இப்போது ஜான் டியர் 5310 மாடல் மற்றும் அதனுடன் வரும் இம்ப்ளிமெண்ட்டுகளின் முழுமையான தொகுப்பை நம்பியுள்ளனர்.
ஜான் டியர் 5310 PowerTechTM எதனால் கச்சிதமான சோள டிராக்டராக உள்ளது
ஜான் டியர் 5310 ஜான் டியர் 5310 (55 HP, PowerTechTM இஞ்சின்), ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தெலுங்கானாவின் சோளப் பிரதேசங்களை ஆள்வதற்கான காரணங்கள் இதோ:
- உயர் டார்க் பேக் அப் உடன் டர்போ சார்ஜ் இஞ்சின் – ஒட்டும் கருமண்ணில் கூட கனரக இம்ப்ளிமெண்ட்டுகளை வேகம் குறையாமல் இழுக்கும்.
- 12 ஃபார்வேர்டு + 4 ரிவர்ஸ் GearPro கியர்கள் – சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்க 1600-1800 RPM என்கிற சரியான வேகப் புள்ளியில் எப்போதும் இயங்கும்.
- டுயல் PTO வேகங்கள் (540/540E) – பிளாண்டர் அல்லது ஹார்வெஸ்டர் இயந்திரத்தை குறைந்த இஞ்சின் RPM ல் இயக்கி டீசலை மிச்சப்படுத்தும்.
- உயர் ஹைட்ராலிக் தூக்கும் திறன் (2000 kg) – பெரிய நடவு இயந்திரங்களையும் உரப்பெட்டிகளையும் எளிதாகத் தூக்கும்.
- ஆயில்-இம்மர்ஸ்டு பிரேக்குகள் மற்றும் MFWD (4WD) ஆப்ஷன் – நடவு அல்லது தெளிப்பு பணியின் போது ஈர வயல்களில் வழுக்குவதில்லை.
- எகனாமி மோடு + பவர் மோடு ஸ்விட்ச் – லேசான வேலைகளுக்கு எகோ, கனரக இடைப்பயிர் பணிகளுக்கு பவர்.
விவசாயிகளின் பதிவுகளின்படி, ஜான் டியர் 5310 சுமார் 4-5 மணி நேரத்தில் 10 ஏக்கர் நடவை முடிக்கிறது, அத்துடன் அன்றைய பணி முடிந்தபோதும், டேங்கில் பாதி டீசல் எஞ்சியிருக்கும்.
மக்காச்சோள பயிரிடுதலில் ஒவ்வொரு பணிக்கான சிறந்த ஜான் டியர் இம்ப்ளிமெண்ட்டுகள்
1. நிலம் தயார்செய்தல்
- GreenSystem ரிவர்ஸ்பிள் MB கலப்பை – பயிர் கழிவுகளை சுத்தமாக மண்ணுக்கடியில் புதைக்கிறது.
- பவர் ஹாரோ அல்லது ரோட்டாவேட்டர் – ஒரே முறை செல்லும்போதே மண்ணை நேர்த்தியாக பொடியாக்கி, உரத்தையும் நன்றாகக் கலக்கிறது.
துல்லியமான நடவு (மகசூல் உருவாக்கி)
ஜான் டியர் மல்டி கிராப் பிளான்டெர் (6-வரிசை அல்லது 8-வரிசை)
- சரியான 75 cm வரிசை இடைவெளி மற்றும் 20-22 cm தாவர இடைவெளி
- வெற்றிட அளவீட்டு அமைப்பு (வாக்யூம் மீட்டரிங்) 99% தனி விதை வைப்பை தருகிறது – இரட்டை விதைகள் விதைப்பதுல்லை, வெற்று இடங்கள் விடுவதில்லை
- ஒரே நேரத்தில் விதைக்கும்போது 5 cm பக்கத்திலும், 5 cm அடியிலும் உர வைப்பு
3. GreenSystem சாகுபடியாளர்
சோள வயல்களில் ஊடுபயிர் பணிகளுக்கு சிறந்ததாகும். இது மண்ணின் மேலோட்டப் பகுதியை உடைக்கிறது, ஆரம்பகட்ட களைகளைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் நிற்கும் பயிர்களை பாதிக்காமல் வேர் மண்டலத்துக்கு காற்று செல்ல வழி செய்கிறது.
4. GreenSystem ரிட்ஜர்
சோள வரிசைப்பயிர்களுக்கான மேடு உருவாக்கம் மற்றும் முதல் களை எடுத்த பிறகு வரிசைகளை மீண்டும் வடிவமைப்பதற்கு சிறந்தது. ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், வேர் வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
சரியான இம்ப்ளிமெண்ட்டுகளுடன் ஒரு 5310 இணையும் போது, ஒரே பருவத்தில் 80-100 ஏக்கர் பரப்பிற்கான நடவு, இரண்டு முறை ஊடுபயிர் பணி, மூன்று முறை தெளித்தல் மற்றும் அறுவடைக்கான உதவி ஆகிய அனைத்துப் பணிகளையும் – ஒரே ஒரு டிராக்டரைக் கொண்டு, ஒரே ஒரு ஓட்டுநரைக் கொண்டே முடிக்க முடியும்.
ஜான் டியர் மனநிம்மதியை மட்டுமே தரும்
- ஜான் டியர் 5310 மாடலுக்கு 5-ஆண்டு / 5000-மணி நேர வாரண்டி
- 480க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள் மூலம் சில மணிநேரங்களுக்குள் உதிரி பாகங்கள் மற்றும் சேவை
- ஜான் டியர் ஃபைனான்ஷியல் மூலம் எளிதான நிதியுதவி மற்றும் பை-பேக் திட்டங்கள்
முடிவுரை: குறைந்த நேரத்திலும் செலவிலும் அதிக சோளம் விளைவித்திடுங்கள்
அதிக சோள மகசூல், குறைந்த விதை மற்றும் உரச் செலவுகள் மற்றும் ஒவ்வொரு காலையும் முதல் இழுப்பில் எளிதாக ஸ்டார்ட் ஆகும் டிராக்டர் என இவையெல்லாம் உங்களுக்கு வேண்டுமென்றால் அசல் ஜான் டியர் டிராக்டர் இம்ப்ளிமெண்ட்டுகள் உடன், ஜான் டியர் 5310 -ஐ இணையுங்கள்.
இன்றே உங்களுக்கு அருகிலுள்ள ஜான் டியர் டீலரைச் சென்று பாருங்கள். 5310 டெஸ்ட் டிரைவ் செய்து பாருங்கள், மல்டி-கிராப் பிளாண்டர் மாயாஜாலம்போல் விதைகளை விதைக்கும் அதிசயத்தைக் கண்டு, உங்களது சிறந்த சோளப் பருவத்திற்கான திட்டமிடலையும் இன்றே தொடங்குங்கள்.
5310 டிராக்டருடன் ஒரே ஒரு பருவமே, உங்கள் பண்ணையின் எதிர்காலத்தை என்றென்றைக்கும் மாற்றிவிடும்.