ஹைட்ராலிக் ரிவர்சிபிள் MB பிளவ்

கிரீன்சிஸ்டம் ஹைட்ராலிக் ரிவர்சிபிள் MB பிளவ் நிலத்தை தயார் செய்வதற்கு ஏற்றது. இது மண் கெட்டியாக இருப்பதை உடைத்துப்போடவும் மிச்சமிருக்கும் பயிர் தண்டுகளை பெயர்த்தெடுக்கவும் உதவுகிறது. இந்த டிராக்டர் இம்ப்ளிமெண்ட் கரும்பு, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களுக்கும் நடுத்தர மற்றும் கடினமான மண்ணுக்கும் ஏற்றது.இது ஜான் டியர் 5000 சீரிஸ் டிராக்டர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

  • அட்ஜஸ்டபிள் சாயில் இன்வர்ஷன் டர்ன்பக்கிள்
  • ஆப்டிக்விக் அட்ஜஸ்ட்மெண்ட் மெக்கானிசம்
  • அதிக அண்டர்ஃப்ரேம் க்ளியரன்ஸ்: வெவ்வேறு மண் நிலையில் அதிக ஆழத்தை கொடுக்கிறது