நடவு உபகரணங்கள்: வேளாண் புதுமைகளின் விதைகளை விதைத்தல்

implement blog

நிலைத்தன்மை மற்றும் செயல்திறன் அவசியமானதாக இருக்கின்ற, தொடர்ந்து மாறிவரும் விவசாய நிலப்பரப்பில் விவசாயத்தின் அடுத்த கட்டத்தை தீர்மானிப்பதில் நடவு இயந்திரங்களின் தேர்வு முக்கியமானதாகும். சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பைக் குறைத்து விளைச்சலை மேம்படுத்த விவசாயிகள் உழைக்கும்போது புதுமையான தீர்வுகளின் தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது.

ஜான் டியர் இந்தியா நிறுவனமானது டிராக்டரில் புதுமையை புகுத்துவதில் முன்னோடியாக உள்ளது. இது நவீன விவசாயிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விரிவான நடவு கருவிகளை வழங்குகிறது.

வேளாண் தொழில்துறையில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு நடவுக்கான சரியான இம்ப்ளிமெண்ட்களைத் தேர்ந்தெடுப்பது ஏன் அவசியம் என்பதை ஆராய்வோம்.

நடவுக்கான சரியான இம்ப்ளிமெண்ட்டை தேர்ந்தெடுப்பது ஏன் முக்கியம்?

நடவு செய்வதற்கான கருவிகள் முக்கியம் என்பதற்கான விவரங்களைப் பார்ப்பதற்கு முன்பாக, சரியான கருவிகளை ஏன் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதை தெரிந்துகொள்வது முக்கியம். நல்ல அறுவடைக்கு அடித்தளமாக அமையும் நடவு உபகரணங்கள் வேளாண் செயல்பாடுகளுக்கு முக்கியமானதாகும்.

ஏன் முக்கியம் என்பது இங்கே உள்ளது:

துல்லியம் மற்றும் செயல்திறன்

நவீன நடவு கருவிகளுடன், விதைகள் துல்லியமாக வைக்கப்பட்டு, கழிவுகளை குறைக்கும் அதே வேளையில் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

அதிகரித்த உற்பத்தித்திறன்

நடவு செய்யும் வேகத்தை மேம்பட்ட உபகரணங்கள் விரைவுபடுத்துகின்றன, இதன் மூலம் கைமுறை வேலைகளை குறைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்கின்றன.

சிக்கனமானது

தரமான கருவியானது, கழிவு மற்றும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதன் வழியாக, செயல்திறனை மேம்படுத்தி, நீண்ட காலத்திற்கு பணத்தைச் சேமிக்கிறது.

நிலைத்தன்மை

சுற்றுச்சூழலுக்கு உகந்த உபகரணங்களைத் தேர்ந்தெடுப்பது, குறைந்த மண் சீர்குலைவு மற்றும் இரசாயனப் பயன்பாட்டுடன் நிலையான விவசாயத்தை ஆதரிக்கிறது.

ஜான் டியர் இந்தியா குறிப்பிட்ட விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட நடவு உபகரணங்களின் விரிவான வரிசையை வழங்குகிறது. ஜான் டியர் வழங்கிய சில புதுமையான தீர்வுகளை ஆராய்வோம்:

டிராக்டர் இம்ப்ளிமெண்ட்கள்!

டிராக்டர் இம்ப்ளிமெண்ட்களின் பயன்பாடு வேளாண் செயல்பாடுகளை மாற்றியமைத்துள்ளது, குறைந்த உழைப்புச் செலவில் இருந்து அதிக உற்பத்தி வரை பல நன்மைகளை வழங்குகிறது. ஜான் டியர் இந்தியா வழங்கும் பல குறிப்பிடத்தக்க நடவு உபகரணங்களில் வாக்யூம் பிளாண்டரும் ஒன்றாகும், மேலும் இது படைப்பாற்றல் மற்றும் துல்லியமான விவசாயத்திற்கான நினைவுச்சின்னமாகும்.

1. சூப்பர் சீடர்: ஒன்றில் மூன்றுக்கான தீர்வு

கிரீன் சிஸ்டம் சூப்பர் சீடர் மூன்று அத்தியாவசிய செயல்பாடுகளான-உழவு, விதைப்பு மற்றும் பாத்தியை மூடுதல்-ஆகியவற்றை ஒரே பாஸாக இணைப்பதன் மூலம் செயல்திறனை வெளிப்படுத்துகிறது. ஒருங்கிணைந்த அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்களில் கோதுமை விதைப்பதற்கு ஏற்றவாறு, இந்த புரட்சிகர இம்ப்ளிமெண்ட் ஆனது விவசாயிகளின் செயல்திறனையும் வருவாயையும் அதிகரிக்கிறது மற்றும் நெல் வைக்கோல் எரிவதைத் தடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

 • கோதுமை விதைப்புக்கான சிங்கிள்-பாஸ் தீர்வு
 • சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் திறமையான செயல்பாடு
 • துல்லியமாக விதையை வைப்பதற்கு டபுள் ஃபரோ டிஸ்க் ஓபனர்

2. கிரீன்சிஸ்டம் சீட் கம் ஃபெர்டிலைசர் டிரில்: பன்முகத்தன்மைக்கு பெயர்போனது

ஒரே நேரத்தில் உரங்களையும் தூவி, பல்வேறு விதைகளை விதைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கிரீன்சிஸ்டம் கிரீன்சிஸ்டம் சீட் கம் ஃபெர்டிலைசர் டிரில் ஒப்பிடமுடியாத பல்துறை திறனை வழங்குகிறது. கோதுமை, மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள் அல்லது பருப்பு வகைகள் எதுவாக இருந்தாலும், மண்ணின் வகையைப் பொருட்படுத்தாமல், இந்த இம்ப்ளிமெண்ட், உகந்தமுறையில் விதையை வைப்பது மற்றும் உரமிடுதலை உறுதி செய்கிறது.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்:

 • விதை மற்றும் உர விகிதத்தை சரிசெய்யும் நுட்பம்
 • தனிப்பயனாக்கப்பட்ட நடவுக்காக சரிசெய்யக்கூடிய வரிசை இடைவெளி
 • துல்லியமான ஆழக் கட்டுப்பாட்டுக்கான டெப்த் அட்ஜஸ்டிங் வீல்

3. மல்டி-க்ராப் வாக்யூம் பிளாண்டர்: துல்லியத்துக்கான மறுபெயர்

அதன் உயர் துல்லியம் மற்றும் குறைந்தபட்ச விதை விரயத்துடன், கிரீன் சிஸ்டம் மல்டி-கிராப் வாக்யூம் பிளாண்டர், துல்லியமான நடவுக்கான தரத்தை அமைக்கிறது. பருத்தி, சோளம், சோயாபீன் மற்றும் தானியங்கள் உட்பட பலதரப்பட்ட பயிர்களை விதைக்கும் திறன் கொண்ட இந்த மேம்பட்ட உபகரணமானது குறைந்த பராமரிப்புச் செலவில் உகந்த மகசூலைத் தேடும் விவசாயிகள் அவசியம் வைத்திருக்க வேண்டிய ஒன்று.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்: -

 • அதிக முளைப்பு விகிதம்
 • குறைந்த பராமரிப்பு செலவுகள்
 • அனைத்து மண் வகைகளுடனும் இணக்கம்

4. கிரீன்சிஸ்டம் ரோட்டோ சீடர்: செயலில் செயல்திறன்

கிரீன்சிஸ்டம் ரோட்டோ சீடர் ஒரு ரோட்டரி டில்லர் மற்றும் ஒரு சீடரின் அம்சங்களை ஒருங்கிணைத்து, அடாப்ட் செய்யக்கூடிய கருவியாக மாற்றுகிறது மற்றும் கோதுமை நடவு செய்வதற்கு சிக்கலில்லா தீர்வை வழங்குகிறது. அதன் மலிவான விலை மற்றும் திறன் வாய்ந்த வடிவமைப்பிற்கு நன்றி, சீரான விதை நடவு, கழிவுகளை குறைத்தல் மற்றும் நவீன விவசாயத்தில் இந்த கருவி முக்கிய பங்கு வகிக்கிறது.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்: -

 • நேரத்தையும் வேலையாட்களையும் திறம்பட பயன்படுத்தமுடிகிறது
 • சிக்கனம் மற்றும் பன்முகத்தன்மை
 • அனைத்து மண் வகைகளுடனும் இணக்கம்

5. கிரீன்சிஸ்டம் மெக்கானிக்கல் பிளாண்டர்: சீராக இருப்பதற்கு உத்தரவாதம்

கிரீன்சிஸ்டம் மெக்கானிக்கல் பிளாண்டர் சீரான விதை இடைவெளி மற்றும் ஆழத்தை உறுதி செய்வதனால், பல்வேறு மண் வகைகளில் பல்வேறு பயிர்களை நடவு செய்வதற்கு ஏற்றதாகும். இந்த கருவியானது ஜான் டியர் 3000 மற்றும் 5000 சீரீஸ் டிராக்டர்களுடன் அதன் விதிவிலக்கான துல்லியம் மற்றும் இணக்கத்தன்மை காரணமாக விதை குறைவாகவே விரயமாவது மற்றும் அதிகரித்த முளைப்பு விகிதங்களை வழங்குகிறது.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்: -

 • அதிக முளைப்பு விகிதம்
 • விதைகளை வைப்பதில் அதிக துல்லியம்
 • பல பயிர் வகைகளுடன் இணங்கும் தன்மை

6. ஜான் டியருடன் புதுமையை வரவேற்பது

ஜான் டியர் இந்தியாவின் சமீபத்திய ஆஃபரிங்கான, FHFPTO (ஃப்ரண்ட் ஹிச் & ஃப்ரண்ட் PTO), வேளாண் புதுமைகளின் வரம்புகளைப் பெரிதாக்குகிறது. அதன் புதுமையான நடவு உபகரணங்களுடன் கூடுதலாக, இந்த புதுமையான யோசனையானது எல்லா இடங்களிலும் விவசாயிகளுக்கு அதிக டிராக்டர் தகவமைப்பு, அதிக உற்பத்தி மற்றும் கணிசமான செலவு சேமிப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூலம் இந்தியாவில் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.

அம்சங்கள் மற்றும் நன்மைகள்: -

 • மேம்படுத்தப்பட்ட உற்பத்தித்திறன் மற்றும் பன்முகத்தன்மை
 • நேரமும் செலவும் மிச்சமாகும்
 • PowerTech™ டிராக்டர்களுடன் இணக்கம்

சிறந்த டிராக்டரைத் தேர்ந்தெடுப்பது: ஒரு முக்கிய பரிசீலனை!

நடவு உபகரணங்களை அதிகம் பயன்படுத்துவதற்கு சிறந்த டிராக்டரைத் தேர்ந்தெடுப்பது அவசியம். நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுக்கான ஜான் டியரின் டாப் ரேட்டிங்கில், உங்கள் இம்ப்ளிமெண்ட்களுடன் பொருத்தமாக இருப்பதற்கு சிறந்த டிராக்டரைத் தேர்ந்தெடுப்பது என்பது உங்கள் விவசாய செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கியமான தேர்வாகும்.

செயல்திறன் அல்லது தகவமைப்புத் தன்மைக்கான உங்கள் விருப்பத்தைப் பொறுத்து, சரியான டிராக்டருடன் வாக்யூம் பிளாண்டர் அல்லது சூப்பர் சீடரைப் பயன்படுத்துகையில், சிறந்த செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறன் உத்தரவாதம் அளிக்கப்படும்.

வாங்குவதற்கு சிறந்த டிராக்டர்: வேளாண் புதுமைகளை மேம்படுத்துதல்

சரியான டிராக்டரை தேர்ந்தெடுப்பது விவசாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஜான் டியர் வரிசையில் உள்ள ஒவ்வொரு டிராக்டரும், தரத்திற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக விதிவிலக்கான செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜான் டியர் 3000 அல்லது 5000 சீரீஸ் மாடல்கள் எதுவாக இருந்தாலும், தரம் மற்றும் புதுமைக்கான பிராண்டின் நற்பெயர் விவசாயிகளுக்கு நம்பிக்கையை வளர்க்கிறது.

நடவு கருவிகளின் தேர்வு விவசாய முயற்சிகளின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜான் டியர் இந்தியாவின் புதுமையான நடவு கருவிகள் விவசாயிகளுக்கு அவர்களின் விவசாய செயல்பாடுகளில் அதிக செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை அடைய தேவையான கருவிகளை வழங்குகிறது.

அது துல்லியமான நடவு, சிக்கனம் அல்லது சுற்றுச்சூழலைப் பராமரிப்பது என எதுவாக இருந்தாலும், ஜான் டியரின் தீர்வுகள் மிகுதியான அறுவடை மற்றும் இந்தியாவில் விவசாயத்திற்கு வளமான எதிர்காலத்தை உறுதி செய்து, இந்திய விவசாயிகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஜான் டியரின் நடவு உபகரணங்கள் மற்றும் டிராக்டர்கள் வரம்பைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, ஜான் டீரே இந்தியா என்ற வளைதளத்தைப் பார்வையிடவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கே - ஒரு நல்ல நடவு கருவியை உருவாக்குவது எது?

ப - நல்ல நடவு கருவியானது விதை வைப்பதில் துல்லியம், செயல்பாட்டில் திறன் மற்றும் பல்வேறு பயிர்கள் மற்றும் மண் வகைகளுடன் பொருந்தக்கூடிய தன்மையை வழங்க வேண்டும்.

கே - நடவு உபகரணங்களின் செயல்திறனை எவ்வாறு அதிகரிப்பது?

ப - செயல்திறனை அதிகரிக்க, உபகரணங்களின் சரியான பராமரிப்பை உறுதிசெய்து, பயிர் மற்றும் மண் தேவைகளுக்கு ஏற்ப செட்டிங்ஸை அட்ஜஸ்ட் செய்து, நவீன, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட கருவிகளில் முதலீடு செய்யுங்கள்.

கே - வாக்யூம் பிளாண்டர்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன?

ப - வாக்யூம் பிளாண்டர்கள் விதை வைப்பதில் அதிக துல்லியத்தை தருவதுடன், விதை விரையத்தை குறைக்கிறது, மேலும் இதற்கு குறைந்தளவே பராமரிப்பு தேவைப்படுகிறது என்பதால் விவசாயிகளுக்கு சிக்கனமாகவும் திறன்வாய்ந்ததாகவும் ஆக்குகிறது.

கே - நவீன விவசாயத்தில் புதுமையின் பங்கு என்ன?

ப - விவசாய நடைமுறைகளில் செயல்திறன், உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் நுட்பங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் நவீன விவசாயத்தில் புதுமையானது முன்னேற்றத்தை ஊக்குவிக்கிறது.

தொடர்புடைய வீடியோக்கள்: