பவர் & டெக்னாலஜி 6.0 இல் ஜான் டியரின் சமீபத்திய கண்டுபிடிப்புகள்: இதில் புதிதாக என்ன இருக்கிறது?

Power and technology 6.0

ஜான் டியர் இந்தியா தனது சமீபத்திய டிராக்டர் வரம்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் விவசாயத் தொழில்நுட்பத்தில் முன்னணியாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, ஜான் டியர் டிராக்டர் வரம்பில் மிகவும் சக்திவாய்ந்த டிராக்டரான 5130M மூலம் சிறப்பிக்கப்படுகிறது. 130 HP திறன் கொண்ட சக்திவாய்ந்த எஞ்சினுடன், இந்த பவர்ஹவுஸ் கடினமான நிலப்பயிர் சவால்களையும் எளிதாக சமாளிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, அதிக உற்பத்தித் திறன், செயல்திறன், மற்றும் வசதியுடன், இது உங்களது விவசாயத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதை உறுதி செய்யும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பவர் & டெக்னாலஜி 6.0 நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த அறிமுகம், இந்திய விவசாயிகளுக்கு புதுமையான விவசாய தீர்வுகளை வழங்குவதில் ஜான் டியரின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டியது. அத்துடன் ஜான் டியர் 5130M டிராக்டரில், தூக்கும் திறன், டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் மற்றும் துல்லியமான வேளாண் செயல்பாடு ஆகியவற்றில் பல மேம்பாடுகளையும் அறிமுகப்படுத்துவதன் வழியாக, விவசாய இயந்திரங்களில் முன்னோடியாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது.

ஈடு இணையில்லா ஆற்றல் மற்றும் செயல்திறன்: 5130M

ஆற்றல் மிக்கதாக இருந்தபோதிலும், ஜான் டியர் 5130M டிராக்டர் எரிபொருள் திறன்வாய்ந்ததாக இருப்பதனால், இயக்குகின்ற செலவு குறைவாகவும் அதிக விளைச்சலையும் எதிர்நோக்குகின்ற விவசாயிகளுக்கு சிக்கனத்திற்கான தீர்வாக அமைகிறது. 3700 kgf தூக்கும் திறன் கொண்ட இந்த டிராக்டர், கனரக இம்ப்ளிமெண்ட்டுகளை எளிதாக தூக்குவதற்கு ஏற்றது.

அதிக தேவை உள்ள இம்ப்ளிமெண்ட்டுகளை சிரமமின்றி கையாளக்கூடிய வகையில், பெரிய அளவிலான செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு 5130M வடிவமைக்கப்பட்டுள்ளது, எடுத்துக்காட்டாக:

  • 4 பாட்டம் ரிவர்சிபிள் MB பிளவ்: ஆழமான உழவுக்கு ஏற்றது, சிறந்த மண் காற்றோட்டம் மற்றும் களை கட்டுப்பாடு ஆகியவற்றை உறுதி செய்கிறது.
  • பவர் ஹாரோ மற்றும் டிஸ்க் ஹாரோ: விதைப் பாத்திகளை திறன் மிகுந்த வகையில் உருவாக்க, மேம்பட்ட முறையில் மண்ணை தயார் செய்கிறது.
  • 4வது ஜெனரேஷன் பெரிய ரவுண்ட் பேலர்: அறுவடைக்குப் பின் செயல்முறைகளை மேம்படுத்துவதன் மூலம், விரைவான மற்றும் திறன்வாய்ந்த பேலிங்கை உறுதி செய்கிறது.

GearProTM தொழில்நுட்பம்: வேலை செய்வதற்கான ஸ்மார்டான வழி

ஜான் டியர் 5042D டிராக்டர் மாடலில் அறிமுகப்படுத்தப்பட்ட அதன் GearProTM தொழில்நுட்பத்துடன், டிராக்டர் செயல்திறனை ஜான் டியர் மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இந்த மேம்பட்ட டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் 12 ஃபார்வேர்டு மற்றும் 4 ரிவர்ஸ் ஸ்பீடுகளை வழங்குவதால், விவசாயிகளுக்கு பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் பயன்பாடுகளில் சிறந்த கட்டுப்பாட்டை வழங்குகிறது.

5042Dல் GearProTM தொழில்நுட்பத்தின் முக்கிய நன்மைகள்:

  • மேம்பட்ட ஓட்டுநர் வசதிக்கு ஸ்மூத்தான கியர் ஷிஃப்டிங்.
  • டிரான்ஸ்மிஷன் சிஸ்டமில் தேய்மானம் குறைவு.
  • பல்வேறு வயல் நிலைகளுக்கு ஏற்ற ஸ்பீடு செட்டிங்குகள்.

கூடுதலாக, நீட்டிக்கப்பட்ட 500 மணி நேர சேவை இடைவெளியுடன், இந்த மாடல் பராமரிப்புக்காக வேலையில்லாமல் இருக்கும் நேரத்தைக் குறைத்து, விவசாயிகள் உற்பத்தித்திறனில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது. ஸ்லிப்-ரெசிஸ்டண்ட் ஃப்ளோர் மேட், மேம்படுத்தப்பட்ட இருக்கை வசதி மற்றும் ஸ்டைலான ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பணிச்சூழலுக்கான அம்சங்கள் இவை அனைத்தும் பயனர் அனுபவத்தை மேலும் மேம்படுத்தி, வேலை செய்வதை நிம்மதியானதாக மாற்றுகின்றன.

பல செயல்பாடுகளுக்கு அதிகளவில் பயன்படுத்துவதற்கான அதிக தூக்கும் திறன்

விவசாயிகளுக்கு பெரும்பாலும் தூக்குவதற்கான தீர்வுகள் வலுவாகத் தேவைப்படுகின்றன, இதற்கான தீர்வாக ஜான் டியர் 5045D GearProTM மற்றும் 5050D GearProTM டிராக்டர்களை மேம்படுத்தியுள்ளது. இந்த மாடல்களில் இப்போது 1800 kgf தூக்கும் திறன் உள்ளது, இதனால் அதிக சுமைகளை திறம்பட கையாள முடிகிறது.

இந்த மேம்பாட்டினால், பெரிய இம்ப்ளிமெண்ட்டுகளை கொண்டு செல்வது, கனமான சுமைகளை ஏற்றிச் செல்வது அல்லது பல வேளாண் பயன்பாடுகளை எளிதாகக் கையாள்வது என எதுவாக இருந்தாலும் சரி டிராக்டர்கள் மேலும் பல செயல்பாடுகளுக்கு ஏற்றதாக ஆகிறது.

PermaClutch தொழில்நுட்பம்: செயல்திறனுக்கேற்ற நீடித்துழைக்கும் தன்மை

ஜான் டீர் தனது PermaClutch தொழில்நுட்பத்தை 5310, 5405 மற்றும் 5075E உள்ளிட்ட கூடுதல் மாடல்களுக்கு விரிவுபடுத்தியுள்ளது, இதன் மூலம் நீடித்துழைக்கும் தன்மை மற்றும் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்கிறது.

இந்த வெட் கிளட்ச் சிஸ்டம் இவற்றை வழங்குகிறது:

  • தேய்மானம் குறைவு என்பதால் டிராக்டரின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது.
  • கடினமான சூழ்நிலைகளிலும் கூட, நிலையான செயல்திறன்.
  • பராமரிப்பு செலவு குறைவு என்பதால் ஒட்டுமொத்த வேளாண் செயல்திறனும் மேம்படுகிறது.

விவசாயிகளின் தேவைகளை மேலும் பூர்த்தி செய்வதற்காக, ஜான் டியர் இப்போது 5210 சீரீஸில் சிங்கிள் கிளட்ச் PermaClutch சிஸ்டமை அறிமுகப்படுத்துகிறது, இது மேம்பட்ட கிளட்ச் செயல்திறனைத் தேடுபவர்களுக்கு கூடுதல் விருப்பத்தெரிவுகளை வழங்குகிறது.

துல்லியமான வேளாண்மைக்கான மேம்பட்ட இம்ப்ளிமெண்ட்டுகள்

ஜான் டியர் டிராக்டர் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விளைச்சல் மற்றும் செயல்திறனை மேம்படுத்த வேளாண் இம்ப்ளிமெண்ட்டுகளையும் மேம்படுத்துகிறது.

துல்லியமான வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகள்:

  • பிரிசிஷன் ஆட்டோமேடிக் பொட்டேட்டோ பிளாண்டர்: சிறந்த பயிர் விளைச்சலுக்கு துல்லியமாக விதை இடுவதை உறுதி செய்கிறது.
  • GreenSystem காம்பேக்ட் ரவுண்ட் பேலர்கள்: இப்போது செயல்திறனை அதிகரிக்கவும், செயல்படாமல் இருக்கும் நேரத்தைக் குறைக்கவும் எலக்ட்ரோ-மெக்கானிக்கல் ஆட்டோ ட்வைன் டிஸ்பென்சர் உடன் வருகிறது.
  • துல்லியமான உரத்தை அளவிடுவதற்கான தீர்வு: முன்பிருந்த அதிவேக பிரிசிஷன் பிளாண்டரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு, மேம்பட்ட மண் ஆரோக்கியத்திற்கும் அதிக மகசூலுக்கும் துல்லியமான உர விநியோகத்தை வழங்குகிறது.

ஸ்மார்ட் கனெக்டிவிட்டி: விவசாயத்தின் எதிர்காலம்

பாரம்பரிய விவசாயத்திற்கும் ஸ்மார்ட் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான இடைவெளியை ஜான் டியர் தனது ஸ்மார்ட் கனெக்டிவிட்டி சொல்யூஷன்கள் மூலம் குறைக்கிறது, இதில் GreenSystemTM லிங்க் மற்றும் JDLinkTM ஆகியவை அடங்கும். இந்த கருவிகள் வயல் செயல்பாடுகள் குறித்த நிகழ்நேர தகவல்களை வழங்குகின்றன, இதனால் விவசாயிகள்:

  • மொபைல் சாதனங்கள் மூலம் தொலைதூரத்தில் இருந்து அவர்களின் டிராக்டர்களைக் கண்காணிக்க முடிகிறது.
  • எரிபொருள் நுகர்வு மற்றும் செயல்பாட்டுத் திறனைக் கண்காணிக்க முடிகிறது.
  • செயலிழப்புகளைத் தடுக்க முன்பேகணிக்கின்ற பராமரிப்பு எச்சரிக்கைகளைப் பெறமுடிகிறது.

இந்த மேம்பாடுகள் விவசாயிகள் தங்கள் செயல்பாடுகளை திறன்மிக்க வகையில் நிர்வகிப்பதை எளிதாக்குகின்றன, அதே நேரத்தில் தேவையற்ற வேலையில்லா நேரத்தைக் குறைக்கின்றன.

CleanPro FIK: பராமரிப்பைக் குறைக்கிறது, நீண்ட ஆயுளை அதிகரிக்கிறது

டிராக்டர் செயல்திறனை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட புதுமையான சிஸ்டமான CleanProTM FIK தொழில்நுட்பத்தையும் ஜான் டியர் அறிமுகப்படுத்துகிறது. CleanProTM ரிவர்சிபிள் ஃபேன், இஞ்சின் கூலிங்கை மேம்படுத்துகிறது, இதன் விளைவாக:

  • பராமரிப்புச் செலவுகள் குறைவு.
  • நீடித்த இஞ்சின் ஆயுள்.
  • மேம்பட்ட எரிபொருள் திறன்.

இந்த அம்சம் ஜான் டியர் PowerTechTM டிராக்டர்களில் இருப்பதனால், தங்கள் உபகரணங்கள் நீடித்துழைப்பதை மேம்படுத்த விரும்பும் விவசாயிகளுக்கு ஒரு மதிப்புக்கூட்டும் மேம்படுத்தலாக அமைகிறது.

Anubhuti செயலி: உண்மையான உதிரிபாகங்களைச் சரிபார்ப்பது எளிது

டிராக்டரின் நீண்ட ஆயுள் மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக, ஜான் டியர் Anubhuti செயலி ஒரு புதிய உயர் பாதுகாப்பு ஸ்மார்ட் லேபிள் ஸ்கேனரை ஒருங்கிணைத்துள்ளது. விவசாயிகள் இப்போது பாகங்களில் உள்ள லேபிள்களை ஸ்கேன் செய்து அவற்றின் நம்பகத்தன்மையை தெரிந்துகொள்ளலாம், இதனால் டிராக்டர் செயல்திறனை பாதிக்கக்கூடிய போலி உதிரிபாகங்கள் பயன்படுத்துவதைத் தடுக்கலாம்.

அது ஏன் முக்கியம்?

  • தரமற்ற உதிரி பாகங்களிலிருந்து டிராக்டர்களைப் பாதுகாக்கிறது.
  • நீடித்துழைக்கும் திறனையும், வாகனத்தின் ஒட்டுமொத்த செயல்திறனையும் மேம்படுத்துகிறது.
  • உண்மையான ஜான் டியர் தயாரிப்புகளில் முதலீடு செய்யும் விவசாயிகளுக்கு மன அமைதியை வழங்குகிறது.

ஜான் டியர்: இந்திய விவசாயத்துறையில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது

5130M மற்றும் அதிநவீன கண்டுபிடிப்புகளின் சீரீஸை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஜான் டியர் இந்தியாவில் விவசாயத்தை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதிக சக்தி கொண்ட டிராக்டர்கள் மற்றும் மேம்பட்ட டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பம் முதல் ஸ்மார்ட் வேளாண் தீர்வுகள் வரை, இந்த கண்டுபிடிப்புகள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், செயல்பாட்டு செலவுகளைக் குறைக்கவும், நிலைத்தன்மையை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம் தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் நிலையில், ஜான் டியர் விவசாயிகளுக்கு சிறந்த கருவிகள், மேம்பட்ட தொழில்நுட்பம், மற்றும் நம்பகமான ஆதரவை வழங்குவதில் உறுதியாக உள்ளது, உற்பத்தியை மட்டுமல்ல, இலாபகரமான விவசாயத்திற்கும் வழிவகுக்கும் ஒரு எதிர்காலத்தை உருவாக்க, ஜான் டியர் எப்போதும் உங்களுடன்.