காலநிலை மாற்றத்தின் சவால்கள் வழிச்செல்லுதல்: நிலையான விவசாயத்தை நோக்கிய ஜான் டியர் இந்தியாவின் முயற்சிகள்

greensystem tractors

நிலையான விவசாயத்தை புரிந்துகொள்ளுதல்:

நிலையான விவசாயம் என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில், சமூக அக்கறையுடன், பொருளாதார ரீதியாக சாத்தியமான வகையில் உணவு உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தும் விவசாயம் செய்யும் ஒரு விதமாகும். எதிர்கால சந்ததியினர் தங்களது சொந்த தேவைகளை பூர்த்தி செய்யும் திறனில் எந்தவித சமரசமும் செய்யாமல் நிகழ்காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலையான விவசாய நடைமுறைகள் பெரும்பாலும் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விவசாய சமூகங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் நிலையான விவசாயம் முக்கியமானது. உணவு உற்பத்தியில் சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார காரணிகளின் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைக் கருத்தில் கொண்ட ஒரு முழுமையான அணுகுமுறை இதற்கு தேவைப்படுகிறது.

இந்தியாவில் நிலையான விவசாயம் :

நாட்டின் குறிப்பிடத்தக்க விவசாயத் துறை, மாறுபட்ட விவசாய-காலநிலை நிலைமைகள் மற்றும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் நிலையான விவசாயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இந்தியாவில் பல நிலையான விவசாய நடைமுறைகள் மற்றும் முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் நிலையான விவசாயத்தின் சில முக்கிய அம்சங்கள்:

 • இயற்கை விவசாயம்
 • நீர் மேலாண்மை
 • மண் வள மேலாண்மை
 • பயிர் பல்வகைப்படுத்தல்
 • நிலையான வாழ்வாதாரங்கள்

இந்தியாவில் நிலையான விவசாயத்தை ஏற்றுக்கொள்வதற்கும் வெற்றி பெறச்செய்வதற்கும் அரசு, விவசாய நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் தனியார் துறையின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும்

ஜான் டியர் இந்தியாவின் நிலையான விவசாய இயந்திரங்கள் மற்றும் தயாரிப்புகள்:

ஜான் டியர் டிராக்டர்கள்:

ஜான் டியர் தயாரிப்பு வரம்பானது வெறும் பவர் மற்றும் டெக்னாலஜி கொண்டது மட்டுமல்ல, காலநிலை மாற்றத்தின் சவால்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சில சிறந்த டிராக்டர் மாடல்களாகக் கருதப்படும் அத்தகைய 3 டிராக்டர் மாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன!

 1. காற்று மாசுபாடு:
  ஜான் டியர் இந்தியா Trem- lV தயாரிப்பு வரிசையை அறிமுகப்படுத்தியது, இந்த டிராக்டர்கள் இந்தியாவின் சிறந்த டிராக்டர்கள் மட்டுமல்ல, திறமையாக காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடும் வகையில் திறமையாக வடிவமைக்கப்பட்ட மாடல்களாகும். 
 2. ஒலி மாசுபாடு:
  அனைத்து ஜான் டியர் உற்பத்தித் தொழிற்சாலைகளிலும் மட்டுமல்லாமல், அதன் பரந்த அளவிலான தயாரிப்பு வரிசைகளிலும் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறது.

ஜான் டியர் இந்தியாவின் நிலையான முன்முயற்சிகள் பற்றி மேலும் படிக்க கிளிக் செய்யவும்:

https://www.deere.co.in/en/sustainable-processes/

க்ரீன்சிஸ்டம் இம்ப்ளிமெண்ட்கள்

பல்வேறு வகையான மாசுகளை எதிர்த்துப் போராடுவதற்குத் திறமையாக வடிவமைக்கப்பட்ட இந்தியாவில் உள்ள சில சிறந்த இம்ப்ளிமெண்ட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

 1. வாழை மல்சர்,என்பது வாழை இலை மற்றும் குப்பையை எரிப்பதை தவிர்ப்பதற்கு வடிவமைக்கப்பட்ட இம்ப்ளிமெண்ட் ஆகும், இதன்மூலம் மண் மாசுபாட்டை எதிர்த்துப் போராட உதவுகிறது
 2. ஃப்ரண்ட் ஹிச் ஃப்ரண்ட் PTO -FHFPTO, இந்த நிபுணத்துவம் வாய்ந்த இம்ப்ளிமெண்ட் இந்தியாவின் மிகச் சிறந்த ஒன்றாகும், மேலும் டிராக்டருடன் ஒரே நேரத்தில் முன் மற்றும் பின் என இரண்டு இம்ப்ளிமெண்ட்களை இணைக்க முடியும், இது நேரத்தையும் மனித சக்தியையும் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், எரிபொருளையும் சேமிக்கிறது, எனவே காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுகிறது.
 3. காம்பாக்ட் ரவுண்ட் பேலர்,எச்ச மேலாண்மைக்கு உதவுவதுடன், வைக்கோல் எரிவதைத் தவிர்ப்பதற்கான ஒரு தீர்வாக நெல் வைக்கோல் பேல்களை தயாரிப்பதற்கான திறன்வாய்ந்த தீர்வாகும், இதன் மூலம் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு பெரிதும் உதவுகிறது.
 4. ரோட்டரி டில்லர்,மண்ணை உடைக்க உதவுகிறது மற்றும் அதிகப்படியான டில்லேஜ் இல்லாமல் களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது, எனவே சிறந்த மண் வளத்தை மேம்படுத்துவதுடன் மண் அரிப்பை குறைக்கிறது.
 5. பவர் ஹரோ,வளமான மண்ணின் கரிமப் பொருட்களைப் பாதுகாப்பதன் மூலம் மண் வளத்தை பராமரிக்க உதவுகிறது. இதைத் தொடர்ந்து மண் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கிறது
 6. சப்சாயிலர், இந்த நிபுணத்துவம் வாய்ந்த இம்ப்ளிமெண்ட் மண் கெட்டிப்படுவதைக் குறைத்து, காற்றோட்டம், நீர் ஊடுபரவுதல் மற்றும் வேர் ஊடுருவலை மேம்படுத்தி, இதன் மூலம் மண்ணின் அமைப்பையும் வளத்தையும் மேம்படுத்துகிறது.
 7. லேசர் லெவலர் துல்லியமாக நிலத்தை சமன்படுத்துவதற்கு உதவுகிறது, இதனால் நீர் தேக்கத்தைக் குறைத்து, நீர் விநியோகத் திறனை மேம்படுத்துகிறது, இது மேம்பட்ட மண் வளத்திற்கும் குறைந்த நீர் தேக்கத்திற்கும் பங்களிக்கும்- இதனால் மண் மாசுபடுவதைத் தடுக்கிறது.
 8. MB பிளவ்,களைகளை கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் களைக்கொல்லிகளின் தேவை குறைகிறது மற்றும் நிலையான நில மேலாண்மை நடைமுறைகளை ஊக்குவிக்கிறது, எனவே மண் மாசுபாட்டை ஒழிக்கிறது

ஜான் டியர் கம்பைன் ஹார்வெஸ்டர்கள்:

 1. W70 SynchroSmart PowerPro மல்டி க்ராப் கம்பைன் ஹார்வெஸ்டர்: திறன்மிக்க, கச்சிதமான வடிவமைப்பு கொண்ட இந்த எடை குறைவான இயந்திரங்கள், குறுகலான பாதைகளை திறம்பட கடக்க உதவுகிறது, இதன் மூலம் எரிபொருளை சேமிப்பதுடன் அதிக உற்பத்தித்திறனுக்கும் வழிவகுக்கிறது. இது வைக்கோல் எரிவதைத் தடுக்கும் வைக்கோல் மேலாண்மை தீர்வுடனும் வருகிறது, எனவே காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுகிறது

புதிய ஜான் டியர் தயாரிப்பு குறித்து விசாரிக்க பின்வரும் லிங்கைக் கிளிக் செய்யவும்:

https://www.deere.co.in/ta/request-a-call-back/tractor-pricelist/