GreenSystem™ காம்பினேஷன் இம்ப்ளிமென்ட்
GreenSystem™ காம்பினேஷன் இம்ப்ளிமென்ட் என்பது முதன்மை மற்றும் இரண்டாம் நிலை உழவுக்காக கொண்டுவரப்பட்ட ஒரு வகை டிராக்டர் கருவியாகும். காம்பினேஷன் இம்ப்ளிமென்ட் சொல்யூஷன் (கூட்டு விவசாயக்கருவி தீர்வு) என்பது மூன்று இணைப்புகளை (சிசெல் கலப்பை, டிஸ்க் ஹாரோ மற்றும் ரோலர்/லெவலர்) ஒன்றாக இணைத்து, கோதுமை, அரிசி, கரும்பு மற்றும் பருத்தி ஆகியவற்றில் குறுகிய கால உழவு செய்ய வேண்டிய பகுதியை நிவர்த்தி செய்வதற்கு கூடுதல் பாஸ்களைச் சேமிப்பதன் மூலம் விதைப் படுகை தயாரிப்புக்கு ஏற்றவாறு வயலைத் தயார் செய்கிறது.
சிறப்பு அம்சங்கள்:
- வழக்கமான முறைகளுடன் ஒப்பிடும்போது பாசஸ்கள் பயன்பாடு குறைவு (உழுதல், துளைத்தல், கட்டிகளை உடைத்தல்)
- மாடுலர் வடிவமைப்பு இந்த விவசாயக்கருவியை பல செயல்பாடுகளைச் செய்ய உதவுகிறது
- நிலம் தயார்ப்படுத்தலின் போது மூன்று பாஸ்களைச் சேமிக்கிறது, இது எரிபொருள் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது
- பொருளை பராமரிக்கும் சிக்கலைக் குறைக்கிறது
- பழுது மற்றும் பராமரிப்பு செலவில் கூடுதல் சேமிப்பை அளிக்கிறது